அட... சன் டிவி எதிர்பார்ப்பு உண்மையாகிப் போச்சே!
சென்னை: நான் யாருன்னு ஒரு குழந்தையிடம் கோவை சரளா கேட்க, காஞ்சனான்னு பட்டுன்னு சொன்னுச்சு பாருங்க...இதை இதைத்தான் சன் டிவி எதிர்பார்த்தது.
சன் டிவி என்ன எதிர்பார்த்து குட்டி சுட்டீஸ் நிகழ்ச்சித் தொகுப்பாளராக கோவை சரளாவை கொண்டு வந்ததோ அது நிறைவேறிடுச்சுங்க.
காஞ்சனா படத்தின் பார்ட் 3 வரை நடித்து குழந்தைகள் மனதை கொள்ளை கொண்ட கோவை சாரளா.சன் டிவியில் வரும் ஞாயிறு முதல் குட்டி சுட்டீஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார்.

இமான் அண்ணாச்சி
குட்டி சுட்டீஸ் முதல் சீசன் நிகழ்ச்சியை இமான் அண்ணாச்சி தொகுத்து வழங்கினார்.அதில் சில குழந்தைகளிடம் வம்படியாக பேசி, வெளியில் பிரச்சனைகள் கூட எழுந்ததாக தகவல்கள் வெளியாகின. இது பெரிதான நிலையில்தான் அந்த ரியாலிட்டி ஷோவை சன் டிவி நிறுத்தி வைத்தது என்றும் சொல்லப்பட்டது.

சந்தேகம் இல்லை
இமான் அண்ணாச்சி குழந்தைகள் ஷோவை சரியாக நடத்துவாரா என்று யாருக்குமே சரியான புரிதல் இல்லாத நிலையில்,அவரை வைத்து சன் டிவி குட்டி சுட்டீஸ் ரியாலிட்டி ஷோவை நடத்தி வெற்றி கண்டது.அண்ணாச்சியும் சக்கை போடு போடும்படி நிகழ்ச்சியைக் கொண்டு போனார்.

கோவை சரளா
காஞ்சனா 2 மற்றும் காஞ்சனா 3 இல் கோவை சரளா குழந்தைகள் எதிர்பார்த்தபடி அடக்க முடியாத சிரிப்பை வரவழைத்து இருப்பார்.அதிலும் இவருடன் தேவதர்ஷிணி காம்போ காமெடி பெரியவர்களையும் கூட விழுந்து விழுந்து சிரிக்க வைத்தது. அதன் படி கோவை சரளா இந்த நிகழ்ச்சிக்கு சரியான தேர்வு என்றுதான் சொல்ல வேண்டும்.

குழந்தைகள் விருப்பம்
காஞ்சனாவின் வெற்றியை கணக்கிட்ட சன் டிவி, கோவை சரளா குழந்தைகள் மனதில் பெரும் இடத்தைப் பிடித்து இருப்பதை தெரிந்து, அவர் கையில் இந்த குட்டி சுட்டீஸ் ரியாலிட்டி ஷோவை கொடுத்து உள்ளது. இதன் ப்ரோமோ தற்போது ஒளிபரப்பாகி வரும் நிலையில், நீங்கள் காஞ்சனா என்று ஒரு குழந்தை சொல்ல ஆரம்பமே அமர்க்களமாக இருக்கிறது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications