Naam Iruvar namakku Iruvar Serial: அரை டப்பா பவுடரை போட்டுக்கிட்டு அரவிந்த் வேஷம்... கடவுளே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் அரவிந்த், தாமரையை விவாகரத்து செய்யப் போவதாக கோர்ட்டில் சொல்லிட்டான். கோர்ட் விவாகரத்தும் தந்து விட்டது.

தேவியும், மாயனும்தான் விவாகரத்து செய்துக் கொள்வார்கள் என்று எதிர்பார்த்த நிலையில், தேவி கடைசி நேரத்தில் கோர்ட்டுக்கு வராததால் கேஸ் தள்ளிப் போயிருது.

மாயன் குறும்புடன், என்னை விட்டு பிரிய மனம் இல்லாமல்தான் நீங்க கோர்ட்டுக்கு வரலேன்னு கேட்க, மடையா உனக்கு என்ன நடந்ததுன்னு தெரியாதான்னு கேட்கிறாள் தேவி.

கோர்ட்டில் என்ன?

கோர்ட்டில் என்ன?

என்னங்க நடந்துச்சு கோர்ட்டில்.. நீங்கதான் கோர்ட்டுக்கே வரலையேன்னு மாயன் தேவியிடம் கேட்கிறான்.லூசு அரவிந்த் தாமரையை டைவர்ஸ் பண்ணிட்டாண்டான்னு சொல்றா தேவி. எண்ணங்க சொல்றீங்க... அவங்கள் ரெண்டு பேரும் சேர்ந்து வாழ்வாங்க, நாம்தான் டைவர்ஸ் பண்ணிக்குவோம்னு நினைச்சேன்னு மாயன் சொல்றான்.

அரவிந்தையும் தாமரையையும்

அரவிந்தையும் தாமரையையும்

நான் எதுக்கு கோர்ட்டுக்கு வர்லேன்னு கேட்டியே.. தாமரையையும், அரவிந்தையும் சேர்த்து வச்சுட்டு அப்புறமா நாம பிரிஞ்சுடலாம்னு சொல்றா தேவி. நாம எப்படிங்க சேர்த்து வைக்க முடியும்னு கேட்கறான் மாயன்.சேர்த்து வைக்கணும்டா.. நீதான் கேடிப் பயலாச்சே.. உன்னை மாதிரி ஒருத்தன் இருந்தால்தான் அவங்களை சேர்த்து வைக்க முடியும்னு சொல்றா.

அரவிந்த் தாமரை

அரவிந்த் தாமரை

தாமரையை அரவிந்த் சந்திக்கணும்னு நினைக்கறதா அவன் ஆஸ்பத்திரியில் வேலைப் பார்க்கும் ஒருவர் தாமரையின் அம்மா மாமாவுக்கு தெரியாமல் சொல்ல ,தாமரையும் அரவிந்தை சந்திக்க சம்மதிக்கிறாள். அதே போல அவள் பத்து மணிக்கு கிளம்பிப் போக, அங்கு அவளை டைவர்ஸ் செய்த டாக்டர் அரவிந்த் நிக்கறான்.

பேசி இருந்தால்

பேசி இருந்தால்

தாமரை என்னை மன்னிச்சுரு தாமரை.. நான் மனசை கல்லாக்கி கிட்டுத்தான் கோர்ட்டில் டைவர்ஸ் கேட்டேன். அதுக்கு உண்மையான காரணத்தை இப்போ நான் சொல்ல முடியாதுன்னு சொல்றான். உனக்கு என் மேல நம்பிக்கை இருக்கு இல்லன்னு கேட்கறான். அவள் இருக்கு என்பது போல தலையாட்டிட்டு நிற்கிறாள் .இன்னும் கொஞ்சம் டைம் குடு தாமரை,.எல்லாத்தையும் சரி செய்துட்டு உன்னை நானே வந்து அழைச்சுட்டு போறேன்னு சொல்றான்.

இதெல்லாம் அவங்க வந்து பேசி இருந்தால் நல்லா இருக்கும் அத்தான்னு தாமரை சொல்ல, அரவிந்தாக நடித்த மாயன் நொந்து போகிறான்.

அரவிந்த் இல்லைன்னு

அரவிந்த் இல்லைன்னு

எப்படிடா உன்னை அரவிந்த் இல்லைன்னு கண்டு பிடிச்சான்னு யோசிச்ச தேவி, ஆமாம் நீ என்ன பெர்ஃபியூம் போட்டு இருக்கேன்னு கேட்கறா. அப்படீன்னா எண்ணங்கனு கேட்க, அதாண்டா என்ன சென்ட் போட்டு இருக்கேன்னு கேட்கறா தேவி. செண்டா? அதெல்லாம் குளிக்கதவிங்க போடறது. நீங்க போடுவீங்க.. குளிக்கறவிங்களும் போடுவாங்க..நான் பவுடர்தாங்க போட்டுக்கிட்டு போனேன்னு மாயன் சொல்ல, இப்போ புரியுதுடா... அரை டப்பா பவுடரை அப்படியே கொட்டிக்கிட்டு போய்யிருப்பே..அவ நீ டாக்டர் அரவிந்த் இல்லேன்னு கண்டு பிடிச்சு இருப்பான்னு தேவி சொல்றா.

மாயனும், அரவிந்தும் இரட்டை பிள்ளைகள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+