Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜீவஜோதியை முறை தவறி தொட்டு கெட்ட சரவணபவன் அண்ணாச்சி.. மாதம்பட்டியால் சிக்கிய நாஞ்சில் விஜயன்: பிரபலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவி புகழ் நாஞ்சில் விஜயன் மீது, திருநங்கை ஒருவர் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "ஏழு வருடமாக நாஞ்சில் விஜயன் என்னுடன் தொடர்பில் இருந்தார். திருமணம் ஆன பிறகு என்னை விட்டு விலகிவிட்டார். அவர் மனைவி குழந்தைகளுடன் இருக்கட்டும், என்னையும் பார்த்துக்கொள்ளட்டும்" என்று அந்த திருநங்கை கூறியிருக்கிறார்.. அத்துடன் புகாரும் தந்துள்ளார்.. மாதம்பட்டி ரங்கராஜ் மீது போலீஸில் ஜாய் புகார் தந்ததை பார்த்துதான் தனக்கு தைரியம் வந்ததாகவும் அந்த திருநங்கை கூறியிருக்கிறார். இந்நிலையில், இதுகுறித்து பத்திரிகையாளர் செய்யாறு பாலு தன்னுடைய கருத்தை சொல்லி உள்ளார்.

Cheyyaru Balu என்ற யூடியூப் சேனலில் பேசியிருக்கும் மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு, "முறையற்ற காதல், முறையற்ற காமம் ஒரு மனிதனை எந்த அளவுக்கு கீழே கொண்டுபோய் தள்ளிவிடும் என்பதற்கு பல சம்பவங்கள் உண்டு.. தனி மனித ஒழுக்கத்தை எல்லைமீறும்போது, உச்சக்கட்ட முடிவில் இறைவன் கொண்டுபோய் சேர்த்துவிடுவான்.. அடுத்தவர் மனைவி, அடுத்தவன் கணவனை அபகரிப்பது இன்று சர்வசாதாரணமாகிவிட்டது. இதே விஷயத்தை பிரபலங்கள் செய்தால், அது பெரியதாகிவிடுகிறது.

Television Nanjil vijayan Saravana bhavan annachi

லட்சம் லட்சமாக ஃபாலோயர்ஸ்களை வைத்திருக்கும் பிரபலங்கள் இந்த தவறைசெய்யும்போது, இவர்களை பின்தொடரும் ஃபாலோயர்ஸ்களும் அதே தவறை செய்துவிடக்கூடாது.. மாதம்பட்டி ரங்கராஜ் விவகாரம் ஓடிக்கொண்டேயிருக்கிறது..

நாஞ்சில் விஜயன் - திருநங்கை

அதேபோல நாஞ்சில் விஜயன் மீது திருநங்கை புகார் ஒன்றை கமிஷனர் அலுவலகத்தில் தந்துள்ளார்.. நாஞ்சில் விஜயன் 7 வருடமாக என்னுடன் தொடர்பில் இருந்தார், இரவில் ஒன்றாகவே தங்குவோம்.. அவருக்கு திருமணமானதும் என்னை விட்டு விலகினார்., எனக்கு நியாயம் வேண்டும் என்று கேட்கிறார்.

நாஞ்சில் விஜயன் மனைவி குழந்தைகளுடன் இருக்கட்டும், அப்படியே என்னையும் சேர்த்து பார்த்து கொள்ளட்டும் என்று அந்த திருநங்கை கேட்கிறார்.. இது என்ன முறை? கஷ்டப்பட்டு மேலே வளர்ந்த ஒரு கலைஞர், தனக்கான ரசிகர்களை வைத்திருப்பவர்? இப்படியா? என்ற கேள்வி எழுகிறது..

மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஜாய் போலீசில் புகார் தந்தபிறகுதான், தனக்கும் நாஞ்சில் விஜயன் மீது புகார் தருவதற்கான தைரியம் வந்தது என்று 7 வருடம் கழித்து இப்போது புகார் தந்துள்ள திருநங்கை காரணம் சொல்கிறார்.

சரவண பவன் அண்ணாச்சி

பெண்கள் விஷயத்தில் முறைதவறி நடக்கும்போது, எப்போது வேண்டுமானாலும் உங்களை கீழே தள்ளிவிட்டுவிடும் என்பதற்கு மற்றொரு உதாரணங்கள்தான் இவையெல்லாம். இதற்கு இன்னொரு சிறந்த உதாரணம் சரவணபவன் அண்ணாச்சி,.. ராஜாக்களி என்று ஒரு படமே எடுத்தாங்க.. ஆனால் அது ஓடவில்லை.. இன்ச் இன்ச்சாக முன்னேறிய ஒருநபரை, பெண்ணின் சலபம் விஷயம், தரதரவென கீழே இழுத்து வந்து, அதலபாதாளத்தில் தள்ளிவிட்டது..

உழைப்பால் உயர்ந்த அவர், ஒரு பெண்ணின் விஷயத்தில் தவறான முடிவு எடுத்ததால் தன் சாம்ராஜ்யத்தையே இழந்தார் அண்ணாச்சி.. முறைதவறி பெண்ணை தொட்டதனால் கெட்டதுதான் காரணம்..

மாதம்பட்டி ரங்கராஜ் - ஜாய்

திட்டமிட்டு என்னை ஏமாற்றியிருக்கும் மாதம்பட்டி ரங்கராஜ், என்னுடைய குழந்தைக்கு இனிஷியல் தரவேண்டும், டிஎன்ஏ டெஸ்ட் எடுக்கட்டும், மனைவியுடனும் இருக்கட்டும், என்னுடனும் வாழ வேண்டும் என்று கேட்கிறார் ஜாய்.. அதேபோல நாஞ்சில் விஜயன் அவர் மனைவியுடன் இருக்கட்டும், என்னுடனும் வாழ வேண்டும் என்று கேட்கிறார் திருநங்கை..

நாஞ்சில் விஜயன் ஒரு பேட்டியில் தன்னுடைய மனைவி தேசியக் கட்சியைச் சேர்ந்தவர் என்றும், குழந்தை பிறந்தது மகிழ்ச்சி என்றும் கூறியிருந்தார். இப்படி சந்தோஷமாக இருந்த ஒரு குடும்பத்தில் ஏன் இந்த தவறு நடந்தது? என்று பலரும் கேட்கிறார்கள்.

சின்னத்திரையில் புகழ் பெற்றிருந்தாலும், வாழ்க்கைக்கு நிரந்தரமான ஒரு தொழில் தேவை என்று உணர்ந்து செயல்பட்ட நாஞ்சில் விஜயன், இன்று ஏன் இப்படி ஒரு நிலையில் இருக்கிறார்?

பிரபலங்களே இப்படியா

லட்சோபலட்சம் ரசிகர்களை பெற்ற பிரபலங்களே இப்படி செய்தால், அந்த ரசிகர்கள் யாருக்காவது மனதில் பிசிறு தட்டிவிட்டால் என்னாவது?

பெரிய பெரிய புரட்சியான விஷயங்களை, கருத்துக்களை இந்த சமுதாயத்துக்கு சொல்ல வேண்டாம்.. தனிமனித ஒழுக்கத்தை பிரபலங்கள் கடைப்பிடித்தாலே போதும்.. அதைவிட்டுவிட்டு இன்று இந்த பிரபலங்கள் அசிங்கப்படுவதுடன், அவர்களது குடும்பமும் மீடியா முன்பு வெட்கி தலைகுனிகிறது. இதற்கெல்லாம் தீர்வு மனிதன்தான் திருந்தி கொள்ளவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+