Nayagi Serial: டாப் டூ பாட்டம்.. ஒரே குடும்ப வயலன்ஸ்.. ஆனாலும் ரேட்டிங்கில் டாப்!
Recommended Video
சென்னை: குடும்பத்துக்குள் வன்முறை தூண்டும் சீரியலாகத்தான் சன் டிவியின் நாயகி சீரியல் இருக்கிறது. ஆனால், ரேட்டிங்கில் இதுதான் முதலிடம்.
அப்பா பிள்ளை வாழ்க்கைக்கே தடையாக இருக்கிறார்.இன்னொரு குடும்பத்தில் அண்ணன் வாழ்க்கைக்கு உலை வைக்க நினைக்கிறான் தம்பி. மகனையே கோபத்தில் ஒதுக்கி வைக்கும் தாய்.
ஒரு வருஷம் நாடகம் நடத்தி, பொய் சொன்னாள் என்று கட்டின பொண்டாட்டியை ஒதுக்கி வைத்திருந்த புருஷன்...இப்படியே கதை போகுது. இது குடும்ப சீரியல் என்று சொல்லிக் கொள்கிறார்கள்.

கலிவரதன் ஆனந்தி
ஆனந்தியின் அப்பாவை கொன்றுவிட்டு, அவரின் சொத்துக்களை அடைந்து, பெரும் பணக்காரராக சமூக அந்தஸ்துடன் இருக்கிறார் கலிவரதன். பிறகு இறந்தவரின் வாரிசு ஆனந்தி என்று தெரிந்து கொண்ட கலிவரதன், அவளை கொல்ல நினைக்கிறார். அதுவும் அவரது மகன் திருமுருகனை காதலித்து கல்யாணம் செய்துகொண்டு தனது மருமகளாகிவிட்டவள் என்று தெரிந்தும்.. சொத்துக்கள் வேண்டும் என்று கூட அந்த வாரிசு கேட்காத பட்சத்தில் விட்டுவிடலாமே.

அனன்யா ஆனந்தி
ஆனந்தி திருமணம் செய்துகொண்ட திருவை சின்ன வயதில் இருந்து காதலித்தவள் என்று அனன்யா கதாபாத்திரம். இவள் தெரியாத,அறியாத வேலைகளையும் பெண்களுக்கு கற்றுக் கொடுப்பதாக இருக்கிறாள்.திருவுக்கே தெரியாமல் அவனது உயிரணுக்களை சேகரித்து, செயற்கை கருத்தரிப்பு மூலம் தன்னுடைய வயிற்றில் குழந்தையாக வளர்ப்பது என்று அனன்யா செய்யும் அத்தனை வேலைகளும் கொடுமையாக இருக்கிறது.

செழியன் கண்மணி
கண்மணியை காதலித்த செழியன் நேர்மை தவறாதவன் என்று காண்பித்து, அவனை ஏமாற்றி கல்யாணம் செய்துகொண்ட மனைவி கண்மணியை ஒரு வருஷம் தள்ளி வைக்கிறான். இது கூட பரவாயில்லை. இவனை பிடிக்காத இவனின் தம்பியே அண்ணனுக்கும், அண்ணிக்கும் தீங்கு நினைக்கிறான்.கடைசியில் அண்ணியின் வயிற்றில் வளரும் சிசுவை மருந்து கொடுத்து கலைக்க தீர்த்தம் என்று அண்ணியிடம் கொடுக்க செய்கிறான்.

கரு கொலை
குடும்ப சீரியலில் கருவிலிருக்கும் சிசுகொலை இதுவரை அதே குடும்பத்தில் இருக்கும் பெண்கள் செய்யும் வேலையாக இருந்தது. இப்போது பார்த்தால் ஒரு ஆண்,அதுவும் தனது அண்ணியின் வயிற்றில் வளரும் குழந்தையையே அழிக்கத் துணிகிறான். சீரியல் முழுக்க வஞ்சகம், பழி, பாவம்,போராட்டம் என்றே நீள்கிறது. இதை குடும்ப சீரியல் என்று சொல்லிக் கொள்கிறார்கள். ரேட்டிங்கிலும் முதலிடத்தில் இருக்கிறது.
நிஜமாக மக்களை சீரியஸ் மூடிலேயே கொண்டு செல்லும் இப்படிப்பட்ட சீரியல்களுக்கு தடை விதிக்க வேண்டும். அது இல்லாமல் போகும் பட்சத்தில் வருத்தமே மிஞ்சும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications