Nayagi serial: சாப்பிடாமல் இருக்கும் கர்ப்பிணிப் பெண்ணை போலீஸ் இப்படியா?
சென்னை:சன் டிவியின் நாயகி சீரியல் வன்மம், குரோதம் நிறைந்த சீரியல் என்று சொல்லலாம். எப்போது பார்த்தாலும் ஒருவருக்கு ஒருவர் துரோகம் செய்வது, வன்மம் பாராட்டுவது, அடி தடி என்று தாங்கிக்க முடியலை.
சொத்துக்கு சொந்தக்காரி ஆனந்தி. அவளிடம் சொத்தை கொடுக்கலை என்றாலும், அவள் பாட்டுக்கு வாழட்டும் என்று விட கூட துரோகிகளுக்கு மனமில்லை.
துரோகம், விரோதம் என்று கதையில் பார்த்து பார்த்து சலித்து போன நிலையில் ,இதை மட்டுமே கதையாக வைத்து நகரும் நாயகி சீரியல் எப்படி ரேட்டிங்கில் உள்ளது என்றுதான் தெரியவில்லை.

திரு அனன்யா
அனன்யாவின் சிறிய வயதில் இருந்தே அப்பாவின் நண்பர் கலிவரதனின் மகனான திருவின் மீது காதல் வந்துருது. ஆனால்,அமெரிக்காவுக்கு படிக்க போன திரு திரும்பி வரும்போதும் அனன்யாவை சின்ன வயசு தோழியாகத்தான் பார்க்கிறான். ஆனால், அனன்யா அளவில்லா காதல் வெறியோடு இருக்கிறாள்.

அனன்யா ஆனந்தி
ஆனந்தி மீது திருவுக்கு காதல் வர,இவர்களிருவரும் சேர கூடாது என்று அனன்யா குடும்பம், திருவின் அப்பா சேர்ந்து செய்யும் சதி திட்டங்கள் ஐயோ என்னத்தை சொல்ல? கடைசியில்; ஆனந்திக்கு திருவுக்கும் கல்யாணம் நடக்குது. அப்போதும் விட மாட்டேன் என்று அடம்பிடித்து பல கிரிமினல் வேலைகளை செய்கிறாள் அனன்யா.

கர்ப்பம் இருவரும்
அமெரிக்கவில் திருவுக்காக சிகிச்சைக்கு போன போது, அவனுக்கே தெரியாமல் திருவின் உயிரணுவை எடுத்து சேமிச்சு வச்சிருந்து, இப்போது அதை தன் வயிற்றில் கருவாக்கி வளர்த்து வரும் அனன்யா, திரு தன் பக்கம் வர வேண்டும் என்றால், தன்னைப் போல கர்ப்பமாக இருக்கும் ஆனந்தியை வெளியில் விட்டு வைக்க கூடாது அவள் மீது கொலைப்பழி போட்டு ஜெயிலில் தூக்கு தண்டனை தரும்படி செய்ய வேண்டும் என்று முடிவு செய்கிறாள் அனன்யா. ஒரு சின்ன பெண்ணோட மூளையை இப்படி எல்லாம் வேலை செய்ய வைப்பது அநியாயம்.

சாவு செட்டப்
சினிமாவில் வருவது போல ஆனந்தியிடன் கோயில் மலையின் உச்சியில் சன்டை போட்டு, ஆனந்தி தன்னை தள்ளி விடுவது போல நடிக்கிறாள். அனன்யாவை வலை போட்டு அவளது ஆட்கள் பிடித்து, பாதுகாப்பாக அழைத்து சென்று விடுகின்றனர். வேறு ஒரு பிரேதத்தை அனன்யா செத்தது போல போஸ்ட்மார்ட்டம் செய்த டாக்டர் உறுதி படுத்த, இப்போது ஆனந்தி ஜெயிலில் இருக்கிறாள்.

போலீஸ் சாப்பாடு
போலீஸ் ஸ்டேஷனில் ஒரு நடைமுறை உண்டு.. குற்றம் சாட்டப்பட்டவர்கள் கேஸ் விசாரிக்கும் வரை அவர்கள் பட்டினி கிடக்க கூடாது என்று. அங்கு சாப்பாடு, பிரியாணி, டீ ,காபி என்று எப்போதும் புழக்கம் இருந்து கொண்டே இருக்கும்.யாரும் பட்டினி கிடக்க கூடாதுன்னு எழுதப்படாத விதிமுறை இருக்கிறது.
இந்த சீரியலில் நிறைமாத கர்ப்பிணிப் பெண்ணுக்கு சாப்பாடு கொடுக்க மாட்டேங்கறாங்க. சீரியல்னா மட்டும் நாங்க நம்பிடுவோமா?
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications