என்னா நடிப்பு.. இந்த டிராமா குயின்கள் பண்ற வேலையை பாருங்க.. நீயா நானாவில் இன்று "ஆண்(கள்) பாவம்"
சென்னை: நீயா நானாவில் டிராமா குயின்களாக பெண்கள் வெர்சஸ் ஆண்கள் என்ற தலைப்பில் பெண்களின் நடிப்பு அந்த காலத்து ஹீரோன்யின்களையே மிஞ்சி விடும் போலிருக்கிறது. என்னா ஒரு வில்லத்தனம்!
விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் நீயா நானா நிகழ்ச்சியில் பல்வேறு தலைப்புகளில் விவாதங்கள் நடந்துள்ளன. இவை சமூக பொறுப்புணர்வுடனும் அதே நேரத்தில் காமெடியாகவும் இருக்கும். இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கோபிநாத்தையே திணறடிப்பது போல் சில கருத்துகளை சொல்வார்கள் பாருங்கள்! யப்பா!
இந்த வாரம் நீயா நானாவில் டிராமா குயினாக இருக்காதே என கூறும் கணவர்கள் வெர்சஸ் மனைவிகள் என்ற தலைப்பில் விவாதிக்கப்படுகிறது. இதற்கான ப்ரோமோ நேற்றைய தினம் வெளியாகியுள்ளது.

ப்ரோமோக்கள்
இரு ப்ரோமோக்களையும் பார்க்கும் போது உண்மையில் பெண்கள் டிராமா குயின்களாக இருக்கிறார்களோ என கருத தோன்றுகிறது. அதில் ஒரு பெண் சொல்கிறார், நான் பாத்திரம் கழுவும் போது என் கணவர் தூங்கிக் கொண்டிருந்தால் பாத்திரத்தை கீழே போடுவேன், ஃபேனை ஆப் செய்துவிட்டு வந்துவிடுவேன். அவர் தூக்கத்தை கலைத்து அவரை எழ வைக்க என்னென்ன செய்ய முடியுமோ அத்தனையையும் செய்வேன் என்கிறார்.

உடம்பு சரியில்லை
இன்னொரு பெண் சார் எனக்கு உடம்பு சரியில்லை என கூறினால் மாத்திரை போட்டுட்டு தூங்கு என்பார். இதே நான் கொஞ்சம் நடித்து, அய்யோ என்னால முடியல! எழுந்திருக்கவே முடியலைனு நான் பில்டப் செய்து சொன்னால், எல்லா வேலையையும் அவரே செய்துவிடுவார் என்கிறார். இதன் பின்னர் இன்னொரு பெண் பேசினார் பாருங்கள், அரங்கமே சிரித்துவிட்டது. ஒருவர் மட்டும் வெட்கி தலை குனிந்தார் (அவர் வேறு யாருமில்லை அந்த பெண்ணின் கணவர்தான்).

திருமணமாகி 2 ஆண்டுகள்
அந்த பெண் கோபிநாத்திடம் கூறுகையில், சார் எங்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகின்றன. இதுநாள் வரை நான் துவைச்சதே இல்லை. 2 வருஷமா அவர்தான் அந்த வேலையை பார்த்து வருகிறார் என அந்த பெண் சிரித்து கொண்டே சொன்னதும் கணவர் முகத்தை மூடிக் கொண்டு வெட்கப்படுகிறார். இதில் கணவர் ஒருவர் கூறுகையில் மாமா இஞ்சி டீ குடித்துவிட்டு வரலாமா என மனைவி கேட்பார்.

கோவை சரளா மாடுலேஷன்
பின்னர் அவரை வாகனத்தில் உட்காரவைத்துக் கண்டு இஞ்சி டீ குடிக்க போவேன். உடனே அவர் மாமா மாயவரம் போகலாமா என கேட்பார். அதெல்லாம் ஒன்னும் வேண்டாம், வீட்டுக்கு போகலாம் என சொன்னால், உடனே என் மனைவி , என்னை திருவாரூர் கோஷ்டில கூப்பிட்டாஹ! மாயவரம் கோஷ்டில கூப்பிட்டாஹ, திருநெல்வேலி கோஷ்டில கூப்பிட்டாஹ அங்கலாம் போகாம, உன்கிட்ட வந்து மாட்டிகிட்டேன்ய்.. அப்படியே கோவை சரளா மாடுலேஷன்ல பேசுவாங்க சார் என்கிறார்.

இனியும் நம்புவார்களா
இப்படியெல்லாம் நடித்து நடித்தே காரியத்தை சாதித்துக் கொள்வதாக கணவன்மார்கள் கூறுகிறார்கள். அது போல் கணவரை ஏமாற்ற என்னென்ன தில்லாலங்கடி வேலைகளை மனைவிமார்கள் செய்வார்கள் என்பதை "வாக்குமூலமாக" பொது நிகழ்ச்சியில் கொடுத்துவிட்டார்கள். இந்த நிகழ்ச்சி இன்றைய தினம் பகல் 12.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. எல்லாம் சரி! இப்படி அப்ரூவராக மாறிவிட்டார்களே இனியும் இவர்களின் டிராமாவை கணவன்மார்கள் நம்புவார்களா? ஆண்(கள்) பாவம்தான் போல!
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications