நீலகிரியிலிருந்து.. பிரதர் ஜெயம் ரவிக்கு ஒரு அன்பு அழைப்பு.."தேங்க்ஸ் ப்ரோ"..தமிழக அரசுக்கும் நன்றி
சென்னை: ஜெயம் ரவி நடித்து வெளியாகியிருக்கும் "பிரதர்" படம் தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், நீலகிரி மக்களிடமிருந்து வாழ்த்தும், அழைப்பும் படக்குழுவினருக்கு விடுக்கப்பட்டுள்ளது. என்ன நடந்தது? இதற்கு என்ன காரணம்?
ராஜேஷ் டைரக்ஷனில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி, திரைக்கு வந்திருக்கும் படம் "பிரதர்".. ஸ்கீரின் சீன் மீடியா எண்டர்டெயின்மண்ட் தயாரித்துள்ள இந்த படத்தில் ஜெயம் ரவி, பிரியங்கா மோகன் எம்.எஸ்.பாஸ்கர், நட்ராஜ், பூமிகா, சரண்யா, உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இந்த படம் தீபாவளிக்கு ரிலீஸாகியிருக்கிறது.

ஹெத்தையம்மா: ஆனால் ரிலீசுக்கு முன்பு, இந்த படத்திற்கான புரமோஷன் பணிகளில் ஜெயம் ரவி உள்ளிட்ட படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.. அப்போது "ஹெத்தையம்மா, ஹெத்தையம்மா" என்ற குத்துப்பாடல் ஒன்றும் இடம் பெற்றிருந்தது.
இந்த பாடலை கேட்டதுமே நீலகிரியிலுள்ள படுகர் இன மக்கள், தங்களது கடுமையான கண்டனத்தை பதிவு செய்ய துவங்கினர். காரணம், நீலகிரி மாவட்டத்தில் 400- க்கும் அதிகமான கிராமங்களில் வாழும் படுகர் இன மக்களின் குலதெய்வமாக உள்ளவர்தான் ஹெத்தையம்மன்.. தங்கள் மூதாதையராக இந்த பெண் தெய்வத்தைதான், காலம் காலமாக வழிபட்டு வருகிறார்கள்..
அர்ப்பணிப்பு: வருடத்துக்கு ஒருமுறை, அதாவது டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் ஹெத்தையம்மன் வழிபாடு நடைபெறும். மக்களுக்காகவே அர்ப்பணித்து மறைந்த, ஹெத்தையம்மனை நினைத்து படுகர் மக்கள் அஞ்சலி செலுத்துவார்கள்..
இதற்காக 48 நாட்கள் விரதம் மேற்கொண்டு, வெண்ணிற உடையில் ஆடல் பாடலுடன், 7 நாட்களும் துக்கமாக அனுஷ்டித்து போற்றி ஹெத்தையம்மனை வழிபடுவார்கள். அம்மன் என்பதால், கோரிக்கை, வேண்டுதல்களை பக்தர்கள் முன்வைக்க மாட்டார்கள். ஹெத்தையம்மனை வழிபட்டால், உழைத்து சாப்பிட கை, கால்களில் பலம் கிடைக்கும் என்பது மட்டுமே படுகர்களின் ஒரே நம்பிக்கையாக இருந்து வருகிறது.
புகார்கள்: இப்படி ஹெத்தையம்மனை புனிதமாக கருதி வழிபட்டு வரும்நிலையில், இதன் வரலாறு தெரியாமல், திரைப்பட பாடலில் பயன்படுத்தப்பட்டிருப்பது, தங்கள் மனதை புண்படுத்தியிருப்பதாக, நம்மிடம் வேதனையுடன் கடந்த மாதம் பகிர்ந்து கொண்டார்கள். படுகர் இன மக்கள். இதுகுறித்து, மாவட்ட காவல்துறைக்கும் புகார் ஒன்றை அனுப்பியிருந்தார்கள்.
அந்த புகாரில் "ஜெயம் ரவி படத்தில் இடம் பெற்றுள்ள "ஹெத்தையம்மா" என்ற பாடல், ஒட்டுமொத்த சமூகத்தையும் புண்படுத்தும் விதமாக உள்ளது.. தெய்வத்தின் மீதான முழு மரியாதையற்ற பாடலாக இது சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. எனவே, இந்த படம் வெளிவருவதற்கு முன்பேயே, அந்த பாடலில் உள்ள வரிகளை நீக்க உதவவேண்டும்" என்று கேட்டுக் கொண்டிருந்தனர்.
பாடல் நீக்கம்: அதுபோலவே, தமிழக தலைமை செயலாளருக்கும், உருக்கமான வேண்டுதல் ஒன்றை விடுத்திருந்தனர்... படுகர் இன சமுதாய பிரதிநிதிகளுடன் இணைந்து, தலைமை செயலாளர் "பிரதர்" படத்தை பார்வையிட்டு, தங்களின் மனக்குறையை தீர்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தனர்..
ஏற்கனவே மனைவி ஆர்த்தி விவகாரம் உச்சக்கட்ட சலசலப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், ஜெயம்ரவிக்கு இப்படியொரு எதிர்ப்பு கிளம்பி, இணையத்தை பரபரப்பாக்கிவிட்டன..
இந்நிலையில், தற்போது தீபாவளி அன்று வெளியான "பிரதர்" பாடத்தில் அந்த பாடலே நீக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. இதற்கு நீலகிரியின் படுகர் மக்கள் மகிழ்ச்சியை தெரிவித்து கொண்டுள்ளனர்.
இதுகுறித்து நம்மிடம் மீண்டும் பேசிய படுகர் சமுதாய மக்கள், "எங்களது உருக்கமான கோரிக்கையை படக்குழுவினரும், தமிழக அரசும் பரிசீலித்து, இப்படியொரு நடவடிக்கையை எடுத்துள்ளார்கள்.. படுகர் இனத்தின் உணர்வுகளையும், வேண்டுகோளையும் ஏற்று, ஹெத்தையம்மா பாடலை, படத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதற்கு எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
அன்பு அழைப்பு: எங்களது ஹெத்தையம்மன் திருவிழா வரும் ஜனவரி மாதம் நடைபெற உள்ளது.. இந்த விழாவில் ஜெயம் ரவி உள்ளிட்ட திரைப்படக்குழுவினர் அனைவருமே கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என்று அன்பான அழைப்பையும் விடுக்கிறோம்" என்று "ஒன் இந்தியா தமிழ்" சார்பாக நம்மிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications