யாருக்கும் தெரியாமல் அண்ணன் தம்பிகள் செய்த செயல்... அனைவர் முன்னிலையில் அவமானப்படும் ஜீவா-மீனா
மீனாவின் தங்கையின் திருமணத்தில் மொய் வைக்கும் விஷயத்தில் அண்ணன் தம்பிகளின் இடையே பிரச்சனை ஏற்பட இருக்கிறது.
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மார்ச் 16 மற்றும் 18 ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
இதில் மீனாவின் தங்கையின் திருமணத்தில் மூர்த்தி அனைவருக்கும் சேர்த்து மொத்தமாக மொய் வைத்து விடலாம் என பேசிக் கொண்டிருக்கிறார்.
கண்ணனும் ஐஸ்வர்யாவும் தனியாக மொய் வைக்க, முல்லையும் கதிரும் தனியாக மொய் வைக்கின்றனர்.
அண்ணன் தம்பிகளின் செயலால் ஜீவா மேடையில் அவமானப்பட இருக்கிறார்.

பிரியப் போகும் கூட்டுக்குடும்பம்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்சீரியல் அண்ணன் தம்பி கதையை மையமாக கொண்ட சீரியலாக இருந்தாலும் தற்போது இந்த சீரியலில் அடுத்தடுத்த பல ட்ஸ்டுகள் நடந்து வருகிறது. இந்த சீரியலில் இதுவரைக்கும் ஒற்றுமையாக இருந்து வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் அண்ணன் தம்பிகளுக்குள் இப்போது பிரச்சனைகள் ஏற்பட்டு கொண்டிருக்கிறது. ஜீவாவை ஆரம்பத்தில் இருந்தே அந்த வீட்டை விட்டு பிரித்து விட வேண்டும் என்று மாமனார் முயற்சி செய்திருந்த நிலையில் அது நடக்காமல் போய்க் கொண்டிருந்தது தற்போது அதற்கான சூழ்நிலை நிலவி வருகிறது.

இப்படி அவமானப்படுத்துறாங்களே
ஏற்கனவே ஜீவா கடையை பாதியில் சாத்தி விட்டு சென்று விட்டார் என்று மூர்த்தி திட்டியதால் ஜீவா தன்னுடைய மனதில் இருக்கும் மொத்த கோபத்தையும் காட்டி இருந்தார். அதிலிருந்து இப்ப வரைக்கும் இன்னமும் தன்னுடைய அண்ணன் தம்பிகளிடம் சரியாக பேசாமல் கல்யாண வீட்டில் பிஸியாக இருந்து வருகிறார். கல்யாண வீட்டிலும் ஜீவாவிற்கு அடுத்தடுத்த அவமானங்கள் வந்து சேர்கிறது. கல்யாண வீட்டில் மீனாவின் அப்பாவின் நண்பர் அனைவரும் சொந்த தொழில் மற்றும் வேலை செய்துவரும் நிலையில் ஜீவா செய்யாமல் கடையில் சும்மாதான் இருக்கிறாரா என்று கேட்டு அவமானப்படுத்துகிறார் மீண்டும் கோபத்தில் ஜீவா மாறி இருக்கிறார்.

கதிரிடமும் கோபத்தை காட்டி விட்டார்
இந்த நிலையில் ஜீவா இரவு மது அருந்தி கொண்டிருக்கும் போது அங்கே வரும் கதிர் இதற்கு மேல் நீ குடிக்காதே என்று பாட்டிலை புடுங்கியதால் நீ யார் என்னை குடிக்க கூடாது என்று சொல்வதற்கு, நீயும் உங்க அண்ணன் மாதிரி என்னை திட்ட போறியா? என்று தன்னுடைய மனதில் இருக்கும் கோபத்தை கதிரிடம் கொட்டி இருக்கிறார். ஜீவா மாற்றத்தை பார்த்து மீனாவின் அப்பா மனதிற்குள்ளே சந்தோஷப்பட்டு கொண்டிருக்கிறார். இந்த நிலையில் தற்போது புதிய பிரமோ வெளியாகி இருக்கிறது.

மொய் பிரச்சனை
அதில் மொத்த குடும்பத்தின் சார்பாக மூர்த்தி ஐம்பதாயிரம் மொய் வைக்கலாம் என்று பேசிக் கொண்டிருக்கிறார். முல்லையிடம் அவருடைய அம்மா நீ மல்லியின் மகனுக்கு தனியாக மொய் வைக்க வேண்டும் என்று சொன்னதால் கதிர் நாம 5,000 தனியாக கொடுத்து விடுவோம் என்று கூறுகிறார். அதைத் தொடர்ந்து ஐஸ்வர்யா கண்ணனிடம் நாமும் தனியாக 5000 மொய் எழுதுவோம் அப்போதுதான் அங்க மொய் வாசிக்கும்போது கண்ணன் ஐஸ்வர்யா என்று சொல்லும் போது கெத்தாக இருக்கும் என்று சொல்கிறார்.

அடுத்து இதுதான்
இந்த நிலையில் மீனா ஜீவாவிடம் சென்று நாமும் என் தங்கச்சிக்கு தனியாக ஏதாவது கிப்ட் கொடுக்க வேண்டாமா என்று கேட்க, அது எல்லாம் அண்ணன் அண்ணி பாத்துக்குவாங்க. இதுவரைக்கும் நாம எல்லாம் ஒன்னாதான செஞ்சுகிட்டு வந்தோம். இப்போ எப்படி நாம தனியா செய்யறது என்று கேட்க, அவங்க செஞ்சுருவாங்களா? என்று மீனா கேட்கிறார். அதற்கு கண்டிப்பா செஞ்சுடுவாங்க என்று ஜீவா கூறுகிறார். இந்த நிலையில் மீனாவின் தங்கை திருமணத்திற்கு பிறகு மொய் எழுதியவர்களின் பெயர் வாசிக்கப்படும் போது குடும்பத்தில் இருக்கும் அண்ணன் தம்பிகள் அனைவரும் தனித்தனியாக மொய் எழுதி இருக்கும் நிலையில் அங்கே ஜீவா மட்டும் மொய் எழுதாமல் நிற்கப் போகிறார். அதனால் அவரை அங்கு இருப்பவர்கள் அசிங்கப்படுத்த போகிறார்கள். அதற்குப் பிறகு இந்த குடும்பத்திற்குள் பெரிய அளவில் சண்டை வெடிக்க இருக்கிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications