கண்ணன் வேலைக்கு வந்த பிரச்சனை..மிரட்டிய மீனா..சந்தோஷத்தில் மூர்த்தி.. எதிர்பார்க்காத திருப்பம்
சென்னை: கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா கிரெடிட் கார்டுக்கு பில் கட்டவில்லை என்று வீட்டிற்கு ஆட்கள் தேடி வந்து மிரட்டுகிறார்கள்.
அடிக்கடி ஜீவாவை மிரட்டுவதால் நாங்கள் வீட்டை விட்டு போய் விடுவோம் என்று மீனா ஜனார்த்தனனை மிரட்டுகிறார்.
மூர்த்தியிடம் நாங்க சீக்கிரத்தில் இந்த வீட்டுக்கு வந்து விடுவோம் என்று மீனா சொல்ல தனம் சந்தோஷப்படுகிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் மே 11ஆம் தேதி எபிசோடு ஆரம்பத்தில் ஐஸ்வர்யா கதிரிடம் பணம் வாங்கி வீடியோ செய்வதற்கு தேவையான பொருட்களை வாங்குவோம் என்று கண்ணனிடம் கூறிக் கொண்டிருக்கிறார். அதற்கு கண்ணன் முடியாது என்று கூறுகிறார்.
அடுத்ததாக கயல் பாப்பா ஸ்கூலுக்கு போக மாட்டேன் என்று அடம் பிடிப்பதால் மீனா ஸ்கூலுக்கு கட்டாயப்படுத்தி போகணும் என்று கூறிக் கொண்டிருக்க ஜீவாவும் கயல் ஸ்கூலுக்கு போகலாமா செல்லமாக கொஞ்சி கொண்டிருக்கிறார். அப்போது ஜனார்த்தனன் வந்து எதுக்கு போகணும் அது விளையாடட்டும் தூங்கட்டும் எதற்கு ஸ்கூல் போக வேண்டாம். குழந்தையை வற்புறுத்தாதிங்க என்று குழந்தையை உள்ளே கூட்டிட்டு போக சொல்கிறார்.
பிறகு இடம் விற்பது குறித்த ஜீவா சொன்ன ஐடியா தான் நல்லா இருக்கு என்று சொல்லிவிட்டு, ஆனாலும் இதற்கு எவ்வளவு கஷ்டப்படும் என்று சொல்ல ஜீவா அந்த இடத்தை விட்டு எழுந்து செல்கிறார். இதனால் கடுப்பான மீனா ஜனார்த்தனனிடம் ஒரு நாள் ஜீவா அவங்க அண்ணன் வீட்டுக்கு ஓட தான் போறார். இங்க ஓவரா பண்ணிக்கிட்டு இருக்கீங்க என்று திட்டுகிறார்.

பிறகு தனம் வீட்டுக்கு கயலோடு செல்லும் மீனா தனத்திடம் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது மூர்த்தி வந்து மீனாவிடம் நலம் விசாரித்துக் கொண்டு கயலை தூக்கி வைத்து கொஞ்சுகிறார். மீனா மூர்த்தியிடம் ஜீவா சீக்கிரமா இந்த வீட்டுக்கு வந்து விடுவார் என்று சொல்ல, இது உங்க வீடு எப்ப வேணாலும் வரலாம் என்று மூர்த்தி சொல்கிறார்.
தனம் அங்கே ஏதேனும் பிரச்சனையா? என்று விசாரிக்க இல்ல ஜீவா இங்கே இருந்த மாதிரி அங்க சந்தோஷமாக இல்ல. இங்க தான் சந்தோஷமாக இருந்தான். அங்க பொம்மை மாதிரி இருக்கிறேன் என்று சொல்றான் என்று சொல்ல மூர்த்தி கவலையடைகிறார். பிறகு மூர்த்தி அங்கிருந்து கிளம்ப மீனா தனத்திடம் ஜீவா சீக்கிரமா வந்து விடுவான் பாருங்க அக்கா என்று சொல்ல தனம் சந்தோஷப்படுகிறார்.

அடுத்ததாக கண்ணன் வேலைக்கு கிளம்பி வெளியே வர அப்போது ஐஸ்வர்யா இன்னைக்கு வேலைக்கு போகணுமா என்று பாவமாக முகத்தை வைத்து கேட்க, இப்படி பல நாள் லீவு போட்டாச்சு இன்னைக்கு லீவ் போட முடியாது கண்டிப்பா போகணும் என்று வீட்டை விட்டு வெளியே வருகிறார் அப்போது ஆபிஸர்ஸ் வந்து கிரெடிட் கார்டு பில் கட்டவில்லை எப்ப கட்டுவீங்க என்று மிரட்டுகின்றனர். இதனால் கண்ணன் அதிர்ச்சி அடைகிறார்.
ஆனாலும் ஐஸ்வர்யா அப்போதும் இதைப் பற்றி கவலைப்படாமல் வீடியோ போடுவதற்கு தேவையான பொருட்கள் வாங்குவது பற்றி பேசிக் கொண்டிருக்கிறார். மேலும் கண்ணனை கடன்காரனாக்க ஐஸ்வர்யா செய்யும் செயலை பார்த்து கண்ணன் அதிர்ச்சி அடைகிறார். இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications