Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குயின் மேரீஸ் கல்லூரிக்கு அண்டர்வேருடன் வந்த கமல்! சுஹாசினி வீடியோவை பரப்பும் பிரதீப் ஆண்டனி ஆர்மி

Subscribe to Oneindia Tamil

சென்னை: பெண்கள் பாதுகாப்பை காரணம் காட்டி பிரதீப் ஆன்டனியை பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றிய நிலையில் அவர் அன்டராயருடன் குயின் மேரீஸ் கல்லூரிக்கு சென்றதாக சுஹாசினி கூறிய வீடியோ வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவை பிரதீப் ஆன்டனி ஆர்மி என்ற எக்ஸ் சமூகவலைதளத்தில் வைரலாக்கி வருகிறார்கள். இப்படியொரு செயலை செய்துவிட்டு பிரதீப் ஆன்டனியால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என சொல்கிறீர்களா என கேட்கிறார்கள்.

Pradeep Antony army spreads a video of Kamal Haasan used to go to Queen Marys college with underwear

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் ஸ்ட்ராங் கன்டெஸ்டென்ட் என அறியப்பட்டவர் பிரதீப் ஆன்டனிதான். அவர் கன்னாபின்னா என பேசுவதுதான் அனைவருக்கும் எரிச்சலை கிளப்பும். அவருக்கு மன ரீதியில் ஒரு குறைபாடு இருப்பதை அவரே தெரிவித்திருந்தார்.

ஆனால் எல்லாவற்றையும் விட அவரால் பிக்பாஸ் வீட்டிற்குள் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூறி அவருக்கு ரெட் கார்டு கொடுத்து கமல்ஹாசன் வெளியேற்றிவிட்டார். இதுதான் தற்போது ஹாட் டாப்பிக்காக இருக்கிறது. குற்றம்சாட்டப்பட்டவரிடம் எந்தவொரு விளக்கத்தையும் கேட்காமல் உரிமைக் குரல் என்ற பெயரில் கூடி கூடி அவரை வெளியேற்ற மாயா உள்ளிட்டோர் போட்ட பிளானுக்கு கமல் துணை போய்விட்டார் என்ற கருத்துகளும் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

இது கமலின் அதிகார துஷ்பிரயோகத்தையே காட்டுகிறது. மேலும் தான் மட்டும் இதை முடிவெடுக்காமல் என்டமால் நிறுவன அதிகாரிகளிடமும் தான் கலந்தாலோசித்ததாகவும் அவர்களும் பெண் பாதுகாப்புதான் முக்கியம் என சொன்னார்கள் என்றும் ஒரு வேளை அவர்கள் பிரதீப் தொடரட்டும் என கூறியிருந்தால் நான் வெளியேறி இருந்திருப்பேன் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

பிரதீப் கூறிய விஷயங்கள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு அவரால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என ஹவுஸ்மேட்ஸ் குற்றம்சாட்டியிருந்தனர். இதற்கு மாயா, மணி, ரவீனா, ஐஸு உள்ளிட்டோரும் காரணம் என சொல்லப்படுகிறது. பிக்பாஸ் டைட்டிலை ஜெயிக்கும் நிலையில் இருந்த பிரதீப்பை இப்படி ஒரு தவறான பட்டத்தை கட்டி வெளியேற்றியது விசித்ரா, அர்ச்சனா உள்ளிட்டோருக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் கமல்ஹாசன் குறித்து அவருடைய அண்ணன் மகள் சுஹாசினி கூறிய கருத்துகள் அடங்கிய வீடியோவை பிரதீப் ஆன்டனி ஆர்மி வைரலாக்கி வருகிறார்கள். அந்த வீடியோவில் சுஹாசினி கூறுகையில் நான் குயின் மேரீஸ் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன். என் சித்தப்பா கமல் என யாருக்குமே தெரியாது.

சில நேரங்களில் அவர் காரில் என்னை அழைத்து சென்று கல்லூரியில் விடுவார். அப்படி ஒரு நாள் அவர் புது கார் வாங்கியிருப்பதால் கல்லூரியில் என்னை விடுவதாக கூறினார். அப்போது அவர் கராத்தே செய்வதற்காக அந்த வெள்ளை நிற உடையை மட்டுமே அணிந்திருந்தார். உள்ளே அன்டர்வேர் மட்டும் அணிந்திருப்பார். நான் பேன்ட் போடுங்கள், இல்லாவிட்டால் ஷார்ட்ஸாவது போடுங்கள் என்பேன்.

ஆனால் கமல்ஹாசனோ சீ சீ இது லேடீஸ் காலேஜ் நான் வெளியே வரமாட்டேன், நான் பெரிய ஸ்டார், உன்னை இறக்கிவிட்டுவிட்டு போய்விடுவேன் என்பார். நானும் சரி என கூறி அவருடன் செல்வேன். அப்போது அந்த உடையில் அன்டர்வேருடன் அவர் வந்து கார் கதவை திறந்துவிடுவார். அப்போது ஒட்டுமொத்த குயின் மேரீஸ் காலேஜும் அவரையே பார்ப்பார்கள். எனக்கு வெட்கமாக இருக்கும். இப்படித்தான் என்னை ஏதாவது கலாட்டா செய்வார் என சுஹாசினி கூறியுள்ளார். இப்படி பெண்கள் கல்லூரிக்கு வெறும் அன்டர்வேருடன் சென்ற கமல்ஹாசன , பெண்கள் பாதுகாப்பு குறித்து பேசலாமா என நிறைய பேர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

பெண்கள் பாதுகாப்பு குறித்து கமல்ஹாசன் பேசியுள்ளார். ஆனால் உண்மையில் நடந்தது என்ன என பிரதீப்பிடம் கேட்காமல் விட்டது ஏன்? குற்றம்சாட்டப்பட்டவர்களும் தங்கள் தரப்பு நியாயத்தை எடுத்துரைக்க சட்டத்தில் கூட இடம் இருக்கும் போது ஒரு தலைபட்சமாக கமல்ஹாசன் பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுத்தது ஏன் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். கமலின் அண்ணன் மகள் சுஹாசினி கூறியதை வைத்தே இன்று பிரதீப் ஆண்டனி ஆர்மியினர் கேள்வி எழுப்பி நீங்கள் பெண்கள் பாதுகாப்பு குறித்து பேசுவதா என கேள்வி எழுப்பியுள்ளார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+