Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரூ.100 கோடி நெப்போலியனின் பண்ணை வீடு.. தனுஷூடன் வந்த சாந்தியம்மா! என்னாது, கறுப்பு பணமா? பிரபலம் நச்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் நெப்போலியன் தன்னுடைய மூத்த மகன் தனுஷை போல தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 2வது மையோபதி மருத்துவமனையை துவங்கியிருக்கிறார்.. இதுகுறித்த வீடியோவும் சோஷியல் மீடியாவில் வைரலான நிலையில், நெப்போலியனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.. இந்நிலையில் இதுகுறித்து பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு பேட்டி ஒன்றை தந்துள்ளார்.

King 24x7 என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பாலாஜி பிரபு, "நெப்போலியனின் மூத்த மகனுக்கு 4 வயதாக இருக்கும்போது, தசை சிதைவு நோய் பாதிக்கப்பட்டது.. மகனால் இயல்பாக இருக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால், நெப்போலியனும், அவரது மனைவியும் அதிர்ச்சி அடைந்தனர்.. மகனை அழைத்துக் கொண்டு பல டாக்டர்களிடம் சென்றார்கள்..

Television actor napoleon rs100 crore resort 100

ஆனாலும் நோயை குணப்படுத்த முடியவில்லை.. அந்த நோயை கட்டுக்குள் மட்டுமே கொண்டு வரமுடியும்.. அந்த நோயின் தீவிரத்தை மட்டுமே குறைக்க முடியும்.. முழுமையாக தசை சிதைவு நோயை குணப்படுத்த முடியாது என்கிறார்கள் மருத்துவர்கள்.

குழம்பி நின்ற நெப்போலியன்

என்ன செய்வதென்றே நெப்போலின் தவித்தபோதுதான், திருநெல்வேலியில் மயோபதி கிளினிக் செயல்படுவதை அறிந்தார்.. அங்குள்ள மருத்துவர், இதுபோன்று தசை சிதை நோயால் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்த முடியாவிட்டாலும், ஓரளவு நல்ல நிலைமைக்கு கொண்டு வருவதை கேள்விப்பட்டார்.. உடனே தனுஷை அழைத்து கொண்டு அந்த டாக்டரிடம் சென்றார்.. டாக்டர் தந்த சிகிச்சையையடுத்து, தனுஷ் உடல்நலனில் ஓரளவு முன்னேற்றம் தெரிந்தது.

அந்த நேரத்தில், எங்க வீட்டுக்கு 4 தெரு தள்ளிதான் நெப்போலியன் வீடு இருந்தது.. அப்போது சாந்தி என்ற பெண்மணி நெப்போலியன் வீட்டில் வேலை செய்து கொண்டார்..

சாந்தியம்மா

அந்த பெண்மணி எங்க வீட்டிலும் வந்து வேலை செய்துவிட்டு போவார்.. அப்போது 4 வயதான தனுஷின் உடல்நிலை, நெப்போலியன் தம்பதியினர் பட்ட மனவேதனையை எங்களிடம் சொல்வார் சாந்தி..

சிலசமயம் தனுஷை சாந்தியம்மாவே எங்கள் வீட்டுக்கு தூக்கி வருவார்.. தனுஷை கேர்-டேக்கர் போல கவனித்து கொண்டிருந்தார் சாந்தி.. நானும் தனுஷூடன் அப்போது விளையாடி கொண்டிருப்பேன்..

நெல்லை கிளினிக்

மயோபதி கிளினிக்கில் தொடர் சிகிச்சையால் ஓரளவு தனுஷூக்கு குணமாகியது..
இதன்காரணமாக, சிகிச்சை தந்த அந்த டாக்டருக்கு, மயோபதி சம்பந்தமான மற்றொரு மருத்துவமனையை நெப்போலியன் அமைத்து தந்தார்.. காரணம், நெப்போலியன் மகன், திருநெல்வேலி கிளினிக்கில் வந்து குணமடைந்துவிட்டதாக மீடியாக்களில் செய்திகள் வெளியாகின.. இதனால் அந்த மருத்துவமனைக்கு ஏராளமானோர் தங்களது குழந்தைகளுடன் குவிந்தனர்..

அவர்களால் அங்கு தங்கவும் முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால், மற்றொரு மயோபதி மருத்துவமனையை நெப்போலியன் கட்டித்தரும் சூழ்நிலை ஏறபட்டது. அப்போதிருந்தே இலவசமான சிகிச்சையை செய்து தந்தார் நெப்போலியன்..

2வது மருத்துவமனை

பிறகு இன்னொரு மருத்துவமனையையும் கட்டித்தந்தார்-. இதனால், ஏழை எளியோரின் பிள்ளைகள் உட்பட தசை நோயால் பாதிக்கப்படுவோர் அங்கேயே தங்கி சிகிச்சை பெற முடிகிறது.. இப்போது 100 கோடி ரூபாய்க்கு வீடு வாங்கி அமெரிக்காவில் செட்டிலானதுகூட, தன்னுடைய மகனுக்காகத்தான்..

ஒரு பிரபல நடிகராக இருந்தவர், அரசியல்வாதியாக இருந்தவர், மத்திய அமைச்சராக இருந்தவர்.. சென்னையில் பல வீடுகள் நெப்போலியனுக்கு இருந்தது.. பல சாப்ட்வேர் கம்பெனிகளை நடத்தி கொண்டிருந்தார்.. பல சொத்துக்கள் இருந்தது, தோட்டம் துறவு இருந்தது..

100 கோடி ரூபாய்

எல்லாவற்றையுமே தன்னுடைய மகனுக்காக துறந்துவிட்டு, பண்ணை வீட்டிற்கு பின்னாடியே விவசாயம் செய்து கொண்டிருக்கிறார்.. மகனுடைய சந்தோஷம்தான், தன்னுடைய சந்தோஷம் என்று நினைத்து மகனுடனேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

நெப்போலியனிடம் எப்படி இவ்வளவு பணம் உள்ளது? கருப்பு பணத்தை வெள்ளை பணமாக மாற்றுகிறாரா? என்ற சந்தேகம் சிலருக்கு எழுகிறது..

நெப்போலியனை பொறுத்தவரை, ஏற்கனவே வசதியான வீட்டை சேர்ந்தவர்.. நடிகராக வந்தும் சம்பாதித்தார்.. ஹீரோவாகவும் நடித்தார்.. அரசியலிலும் ஈடுபட்டார். தான் சம்பாதித்த பணத்தை, சரியாக முதலீடு செய்தார்.. 80, 90களில் வாங்கிப் போட்ட சொத்துக்கள், 20 , 30 வருடங்களில் கோடிக்கணக்கில் விற்பனை ஆனது.. அவைகளை எல்லாம் விற்றுவிட்டுதான் அமெரிக்காவில் பண்ணை வீட்டை வாங்கி பிசினஸில் இறங்கினார்.

கருப்பு பணம், வெள்ளை பணம்

மற்றபடி பிளாக் மணியை, வெள்ளை பணமாக மாற்ற ஆயிரம் வழியிருக்கு.. இதற்கு இலவச மருத்துவமனையை கட்டித்தர வேண்டிய அவசியம் அவருக்கு இல்லை.
தன்னுடைய மகன் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டதால், நெப்போலியன் மனதளவில் பாதிக்கப்பட்டவர்.. பல நேரங்களில் துன்பமான சூழ்நிலைக்கு ஆளானவர்.. தன்னை போலவே எத்தனையோ பெற்றோர்கள்,

தசை சிதைவு நோயால் பாதித்துள்ள தங்களது பிள்ளைகளால் மனம் வேதனையில் தவித்து வருகிறார்கள். அந்த குழந்தைகள் சிகிச்சை பெற வேண்டும் என்ற நல்ல நோக்கத்துடன்தான் 2 வது மருத்துவமனையை கட்டி தந்துள்ளார்.. இதை சேவை மனப்பான்மையுடன் செய்கிறார்..

உச்ச நட்சத்திரங்கள்

கறுப்பு மணியை, இப்படித்தான் மாற்ற வேண்டுமானால், எத்தனையோ உச்சநட்சத்திரங்கள் இந்நேரம் இலவச மருத்துவமனையை கட்டி தந்திருப்பார்களே? தமிழக மக்களுக்கு ஒரு நடிகர்கூட இதுவரை கட்டித்தரவில்லையே? அனாதை ஆசிரமம், முதியோர் இல்லம் கட்டி தந்திருக்கிறார்களா?

நெப்போலியன் மட்டுமே இதை செய்திருக்கிறார்.. மருத்துவமனை கட்டி தந்துள்ளதன் நல்ல நோக்கத்தை சிதைக்க கூடாது. அப்படி சிதைத்தால், நெப்போலியன் போல நல்ல எண்ணத்துடன் வேறு யாருமே உதவிசெய்ய முன்வரமாட்டார்கள். உதவி செய்பவர்களையும் காயப்படுத்த கூடாது" என்றெல்லாம் கூறியிருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+