Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரூ.200 கோடி சம்பளம் சொன்ன ஹீரோ? பண்டல் பண்டலாக ரூ.15 கோடியை கடல்ல போட்ட ஷங்கர்? சபாஷ் அஜித்: பிரபலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: டைரக்டர்களிடம் பிளானிங் சரியாக இருப்பதில்லை என்றும், தயாரிப்பாளர்களின் வலியை யாருமே நினைத்து பார்ப்பதில்லை என்றும், பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு வேதனை தெரிவித்துள்ளார்.
Vaagai Tamil யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பாலாஜி பிரபு, "தயாரிப்பாளர் செலவை அதிகப்படுத்திவிட்டுட்டாங்க.. பெரிய பெரிய சம்பளம் கேட்க ஆரம்பிச்சிட்டாங்க.. ஒரு வெற்றிப்படம் தந்தால், டைரக்டர்களும் நிறைய சம்பளம் கேட்கிறார்கள்.. எனினும், ஹீரோக்கள்தான் இதுக்கு முக்கிய பங்கு.. நேற்று வந்த கவின் 7 கோடி கேட்கிறார். சிவகார்த்திகேயன் 75 கோடி கேட்கிறார். பிரதீப் ரங்கநாதன் போன்றோர் 12 கோடி கேட்கிறார்கள்.. இப்படி கோடிகளில் சம்பளம் கேட்பதை எளிதாகவும், நினைத்த மாதிரியும் கேட்க ஆரம்பிச்சிட்டாங்க..

Television Top Hero rs200 crore salary

வியாபாரம்: நடிகர்கள் கேட்கும் மாதிரியான சம்பளத்தை, தயாரிப்பாளர்கள் தந்தாலும், அந்த படம் எடுக்கப்பட்டு வியாபாரம் ஆகுதா? ஆகலையா? பிரச்சனை ஏதாவது இருக்கா? அந்த படம் ஓடுதா? இல்லையா? என்று எதையுமே பார்க்காமல் சம்பளம் மட்டும் கேட்டுட்டே இருக்காங்க.. தயாரிப்பாளர்கள்தான் இதனால் நஷ்டப்படுகிறார்கள். அதனால் ஹீரோக்கள் கேட்கும் சம்பளம்தான், இதற்கு முதல் காரணம்.
அடுத்ததாக, சினிமாவில் உள்ள பெரிய பெரிய இயக்குனர்கள், பிளான் இல்லாமலேயே படங்களை எடுக்கிறார்கள். எந்த பிளானும் அவர்களிடம் இருப்பதில்லை.. ஆனால், என்ன வேணும்னாலும், நினைத்ததை சீனாக எடுக்கலாம் என்று முடிவு செய்து கொள்கிறார்கள். இதுதான் படமாக வரப்போகிறது, இதுதான் சீனாக எடுக்க போகிறோம் என்று பேப்பர் ஒர்க் செய்யாமலேயே படம் எடுக்க வந்துவிடுகிறார்கள்

டெக்னிக்கல்: உதாரணத்துக்கு, டெக்னிக்கல் தெரிந்த விஷயம் இருந்தாலும், ஒரேநாளில் எல்லா கருவிகளையும் ஒரே நாள் கொண்டுவந்து வைத்து கொள்கிறார்கள்.. அதில் ஒன்றிரண்டு மட்டும் பயன்படுத்தி கொண்டு, மற்ற கருவிகள் வெயிட்டிங்கில் இருக்கிறது என்றால், அதற்கெல்லாம் செலவு யாருக்கு? காஸ்ட் ஆப் புரொடக்‌ஷன் என்பதை யாருமே கவலைப்படுவதில்லை.

டைரக்டர் ஷங்கர், "கேம்சேஞ்சர்" படத்துக்கு நியூசிலாந்து சென்று 15 கோடியில் ஒரு பாட்டை ஷூட் எடுத்துட்டு வந்தார்.. கடைசியில் ஃபுட்டேஜ் காரணமாக அந்த பாட்டையே படத்தில் வைக்கல.. அப்ப என்ன பிளானிங்கில் எடுத்தாங்க? அந்த 15 கோடி ரூபாயை அப்படியே பண்டலாக கட்டிட்டு போய் கடல்ல போட்ட மாதிரி ஆயிருச்சு.. இன்று தமிழ் சினிமாவில் மார்க்கெட் உள்ள நடிகர்கள் நியாயமான சம்பளத்தை கேட்பவர்கள் யாருமே இல்லை. எல்லாருமே காரணம், காரணங்களை தங்கள் சம்பளத்தை பலமடங்கு உயர்த்தி கொள்கிறார்கள்.,

அமரன் படம்: சிவகார்த்திகேயன் அது, இது எது என்று டிவி ஷோ-விலிருந்து அறிமுகமானவர்.. தொடர்ந்து அவரது படங்கள் ஓட ஆரம்பிக்கிறது.. பெரிய பெரிய நடிகைகளுடன் நடிக்க துவங்கினார்.. சினிமாவில் அவருடைய அனுபவம் மொத்தம் 12 வருஷம்தான்.. ஆனால், 75 கோடி கேட்கிறார்.. இத்தனைக்கும் ஆக்‌ஷன் ஹீரோவும் கிடையாது. அமரன் மட்டும் அவரது ஆக்‌ஷன் படம். அமரன் படத்துக்கு முன்னாடி 35 கோடி வாங்கிட்டு வந்த சிவகார்த்திகேயன், அமரன் வெற்றிக்கு பிறகு 75 கோடி என டபுளாக்கினால் எப்படி?

படம் நஷ்டமானால் யார் அதற்கு பொறுப்பு? நடிகர்கள் பொறுப்பு எடுத்து கொள்வார்களா? பெரிய சம்பளம் கேட்பதுடன், அதை முழுசாக, உடனே தந்துவிட வேண்டும் என்றும் நினைக்கிறார்கள்.. யாருமே காம்ப்ரமைஸ் செய்து கொள்ள முன்வந்தால்தான், சினிமா தொழில் நல்லா இருக்கும். இல்லாவிட்டால் தயாரிப்பாளர்கள் குறைந்துவிடுவார்கள்" என்று தெரிவித்துள்ளார்.

300 கோடி சம்பளம்: ஏற்கனவே வேறொரு சேனலுக்கு அளித்திருந்த பேட்டியில் பாலாஜி பிரபு பேசும்போது, 200 கோடி ஊதியம் வாங்கும் நடிகர்கள், அடுத்த படத்தில் 300 கோடி கேட்டால் எப்படி? படம் ஓடிவிட்டால் சரி, அந்த படம் ஓடாமல் போனாலும், 100 கோடிக்கு சம்பளத்தை உயர்த்துகிறார்கள்.. தங்களது படம் ஓடாவிட்டால், அடுத்த படத்துக்கு ஊதியத்தை குறைத்துக் கொள்ளணும்தானே? இப்படி மனநிலைமை யாருக்குமே வருவதில்லை.

அஜித் ஒருமுறை இப்படி தயாரிப்பாளர்களுக்கு கை தூக்கி விட்டுள்ளார்.. விவேகம் படம் மிகப்பெரிய தோல்வி அடைந்ததுமே, "வாங்க, அடுத்த படம் எடுக்கலாம்" என்று சொல்லி, அதே டீமுடன் சேர்ந்து "விசுவாசம்" படம் எடுத்து, அது மிகப்பெரிய சக்சஸ் ஆனது. அத்துடன் தன்னுடைய பெரிய சம்பளத்தையும் அந்த படத்தில் அஜித் குறைத்து கொண்டார்.. இந்த தன்மை எல்லா ஹீரோக்களுக்கும் வரணும்" என்றெல்லாம் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+