500 கோடிக்கு ஜீவனாம்சம்? அனைவரையும் 1 நொடியில் திகைக்க வைத்த சமந்தா.. ஒரே மேடையில் நாக சைதன்யாவுடன்?
சென்னை: நாக சைதன்யா, சமந்தா இணைந்து நடித்த 'விண்ணை தாண்டி வருவாயா' படத்தின் தெலுங்கு வெர்ஷனான 'ஈ மாயா சேசாவா' படம், வரும் ஜூலை 18ம் தேதி ரீ-ரிலீஸ் ஆகப் போகிறது.. இந்த படம் வெளியாகி 15 வருடங்களை நிறைவு செய்துள்ளது. இதற்கான விழாவை முன்னெடுக்க, படநிறுவனம் அனைத்து வேலைகளையும் செய்து வருகிறது.. இதுகுறித்த செய்திதான் இணையத்தில் வட்டமடித்து வருகிறது.
சமீபத்தில் மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு பேட்டி ஒன்றில் சமந்தா பற்றி பேசியிருந்தார்.. அதில், "நடிகை சமந்தாவின் வாழ்க்கையில் தெலுங்கு சினிமா, மிகப்பெரிய திருப்பு முனையை கொண்டுவந்தது.. விண்ணைத் தாண்டி வருவாயா ரீமேக் படம் வெளியானதுமே, அவர்கள் சமந்தாவை தூக்கி கொண்டாடினார்கள்..

வியப்பை தந்த சமந்தா
பிறகு, நாகார்ஜுனா வீட்டில் மருமகளாக சமந்தா போனதுமே, மொத்த பேரும் வியந்து பார்த்தனர். இந்து, கிறிஸ்தவ முறைப்படி கல்யாணம் நடைபெற்றது. பிறகு திடீரென விவாகரத்து அறிவிப்பும் உடனே வெளிவந்தது.
இந்த டைவர்ஸ்க்கு முழுகாரணமே சமந்தாதான் என்றார்கள்.. ஏனென்றால், நாகார்ஜூனாவுக்கு 4000 கோடி சொத்து உள்ளதால், ஜீவனாம்சம் கேட்பதற்காகவே திருமணத்தையும் செய்தும், டைவர்ஸும் செய்கிறார் என்று தெலுங்கு மீடியாக்கள் சலசலப்பை பரப்பின. எனவே, சமந்தா 500 கோடி ஜீவனாம்சத்தை வாங்காமல் விடமாட்டார் என்றும் கொளுத்தி போட்டன.. இந்த விமர்சனங்கள் எதற்குமே சமந்தா பதிலளிக்கவில்லை.. அமைதியாகவே இருந்தார்.
ஜீவனாம்சம் தேவையில்லை
நாக சைதன்யா தரப்பில், எவ்வளவு ஜீவனாம்சம் வேண்டும்? என்று கேட்டதற்கு, "உன் காசு 10 பைசா எனக்கு வேண்டாம்" என்றார் சமந்தா. இப்படியொரு வார்த்தையை கேட்டதுமே, வியப்புற்ற தெலுங்கு மீடியாக்கள் சமந்தாவை உச்சத்தில் தூக்கி வைத்து கொண்டாட துவங்கியது.. அப்போதிருந்து கூடுதலான கிரேஸ் சமந்தாவுக்கு எகிறியது..
சமந்தா நினைத்தால், விவாகரத்து என்று செய்தி வெளியானபோதே, செய்தியாளர்களை அழைத்து, நாகார்ஜூனா குடும்பத்தினர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்திருக்க முடியும், பழிகளை சுமத்தியிருக்க முடியும். எவ்வளவு ஜீவனாம்சம் வேண்டும் என்று கேட்டதற்கு, பல கோடிகளை இழப்பீடாக பெற்றிருக்கவும் முடியும். ஆனால் நம்ம பல்லாவரம் பெண் அப்படியெல்லாம் செய்யவில்லை.
விடாமுயற்சி, தன்னம்பிக்கை
இத்தனைக்கும் சமந்தாவுடன் வாழும்போதே சோபிதாவுடன் நாக சைதன்யாவுக்கு காதல் இருந்து வந்துள்ளது.. இதனால் சமந்தா எப்பேர்ப்பட்ட மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பார்? இதே சமந்தா, ஒரு உச்ச நட்சத்திரத்தின் மகளாக இருந்திருந்தால், கணவர் வீட்டில் இப்படித்தான் இருந்திருப்பார்களா? எந்த பின்புலமும் இல்லாதவர் என்பதால்தான், ஆளாளுக்கு சமந்தாவை பந்தாடினார்கள்..
எனினும், சமந்தா ஒரு பீனிக்ஸ் பறவை.. விடாமுயற்சி தன்னம்பிக்கை, பேராசையின்மை, இவை மூன்றும் இருந்தாலே கடவுள் யாரையும் உயரத்துக்கு கொண்டு செல்வான் என்பதற்கு உதாரணம் சமந்தா" என்று பெருமிதம் தெரிவித்திருந்தார்.
நாக சைதன்யா சமந்தா
இந்த நினைவூட்டலுக்கு காரணம், தெலுங்கு திரையுலகில் மீண்டும் நாக சைதன்யா - சமந்தா சந்திப்பார்களா என்ற மிகப்பெரிய கேள்வி தற்போது எழுந்துள்ளது.
'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தின் தெலுங்கு பதிப்பு 'Ye Maaya Chesave'.. இதில் சிம்பு மற்றும் த்ரிஷா கதாபாத்திரத்தில் நாக சைதன்யா மற்றும் சமந்தா நடித்திருந்தார்கள். இந்த படத்தின் ஷூட்டிங்கில்தான் நாக சைதன்யா - சமந்தா இருவருக்கும் காதல் உருவானது. வரும் ஜூலை 18-ம் தேதி 'Ye Maaya Chesave' ரீரிலீஸ் ஆகப் போகிறது.. இதனை விளம்பரப்படுத்தலாம் என்று தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டு வருகிறதாம்.
ஒரே மேடையில் சந்திப்பு?
இந்த நிகழ்வுகளில் நாக சைதன்யா - சமந்தா இருவரும் ஒன்றாக பங்கேற்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. விவாகரத்து பெற்ற பிறகு இருவரும் சந்தித்துக் கொள்ளவே இல்லை... சோஷியல் மீடியாவிலும் ஒருவரை ஒருவரை டேக் செய்வதுமில்லை..
இப்படிப்பட்ட சூழலில், படத்தின் விளம்பர நிகழ்வுகளை இருவருமே சமூக ஊடகங்களில் பகிர்வார்களா? ஒன்றாக ஒரே மேடையில் சந்தித்து கொள்வார்களா? என்றெல்லாம் தெலுங்கு, தமிழ் மீடியாக்களில் பெரும் எதிர்பார்ப்பாக கிளம்பி உள்ளது.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications