சைந்தவி ஒரே காரில் போறதுக்கு ஏன் கோர்ட்டுக்கு வரணும்? ஜிவி பிரகாஷ் தம்பதி கேவலப்படுத்தறாங்க: பிரபலம்
சென்னை: சைந்தவி - ஜிவி பிரகாஷ் இருவரும் பிரிவதாக அறிவித்து சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் பரஸ்பரம் விவாகரத்து கோரி நேற்று மனுத்தாக்கல் செய்திருந்தார்கள்.. இந்த வழக்கு விசாரணைக்கு ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், இருவரும் ஒரே காரில் புறப்பட்டு சென்றனர்.. இந்த நிகழ்வுதான் இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஒருசாரார் இருவரின் நட்பை பாராட்டி வருகிறார்கள். மற்றொரு சாரார் இதை விமர்சித்து வருகிறார்கள். அந்தவகையில்தான் மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன், இந்த ஜோடியை கடுமையாக தாக்கி பேசியிருக்கிறார்.
சைந்தவி - ஜிவி பிரகாஷ் இருவரின் மனுவானது, சென்னை முதலாவது கூடுதல் குடும்ப நல நீதிமன்ற நீதிபதி செல்வ சுந்தரி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஜிவி பிரகாஷ்- சைந்தவி இருவரும் நேரில் ஆஜராகினார்கள். இருவரும் மனதார பிரிவதாக கூறினார்கள்.. பிறகு நீதிமன்றத்திலிருந்து ஒரே காரில் ஏறி சென்றார்கள்.

இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், "இவர்களின் விவாகரத்தை புரிஞ்சிக்கவே முடியலியே" என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.. இந்நிலையில இதுகுறித்து, BBT Cinema என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் சொன்னதாவது:
மோசமான கலாச்சாரம்
"மோசமான கலாச்சாரத்தின் அடையாளம் தான் ஜிவி பிரகாஷ் சைந்தவியின் விவாகரத்து வழக்கு.. இவர்களை இந்த திரைத்துரையிலிருந்தே தூக்கி எறிய வேண்டும். இவர்களை ரசிக்கிற சினிமா ரசிகர்களை சொல்லணும்.. காதல் திருமணம் செய்வதும், பிரிவதும், இப்போதெல்லாம் மிக சாதாரண விஷயமாகிவிட்டது. டைவர்ஸ் வாங்கிய பிறகும் ஒரே வீட்டில் இருக்கிறார்கள். கலாச்சாரத்திற்கு நெருப்பு வைக்கக்கூடிய சம்பவங்கள்தான், திரைத்துறையில் பெரும்பாலும் நடக்கிறது.
கருத்து வேறுபாடு காரணமாகவே ஜிவி பிரகாஷ் - சைந்தவி பிரிகிறார்கள்.. பிறகு ஒரே காரில் இருவரும் செல்கிறார்கள் என்றால், கருத்தொற்றுமையுடன் இருக்கிறார்கள் என்றே இதை எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. கோர்ட்டுக்கு டைவர்ஸ் கேட்டு வருபவர்கள், தனித்தனியாக காரில் வந்து செல்வதுதான் வழக்கம். இப்படி ஒரே காரில், பக்கத்து பக்கத்தில் உட்கார்ந்துட்டு, ஓட்டலில் போய் டிபன், காபி சாப்பிட்டுட்டு இருப்பதுதான் டைவர்ஸ் என்றால், இவர்களை எல்லாம் என்ன சொல்வது?
அப்ப எதுக்கு கோர்ட்டுக்கு வந்தாங்க
அப்ப கோர்ட்டுக்கு எதுக்கு வந்தாங்க? பொழுதுபோக்க வந்தாங்களா? இதுவே மகாராஷ்டிராவாக இருந்தால், சிவசேனா இவர்கள் இருவரின் முகத்திலும் ஆசிட் ஊற்றியிருக்கும்.. ஏனென்றால், காதலர் தினத்தில் ஒரு பெண்ணுக்கு, மலர்க்கொத்து கொடுத்து ஒரு ஆண் பேசிக் கொண்டிருந்தாலே உடனே கட்டு தாலியை என்பார்கள்.. இது அடிக்கடி பெங்களூரிலும் நடக்கும்..
இப்படியான சீரழிவு கலாச்சாரத்தை தமிழ்நாட்டில் ஆரம்பிச்சு வைத்ததே திராவிட இயக்கங்கள்தான்.. பல கேவலமான முன்னுதாரணங்களுக்கு அடையாளம்தான் திராவிட இயக்கம்.. 2, 3 மனைவிகள் இல்லாத கட்சி தலைவர்களே இல்லை.. இதைபற்றி கேட்டால், நான் புட்டு புட்டு வைப்பேன்..
கேவலப்படுத்திட்டாங்க சட்டத்தை
ஒரே காரில் வந்து டைவர்ஸ் கேட்டு, நீதிமன்றத்தை சைந்தவி தம்பதியினர் அவமானப்படுத்தியிருக்காங்க.. சட்டத்தை கேவலப்படுத்தி இருக்காங்க.. சட்டம் என்பது டீ கடையில் டீ சாப்பிடுவது போல என்று நினைக்கிறார்கள். சண்டை வந்துதானே தம்பதி பிரிகிறார்கள்?
ஆனால், இந்த சினிமாக்காரர்களை பொறுத்தவரை கலாச்சாரம் இல்லாதவர்கள்.. அப்படி கலாச்சாரம் இருக்கிறது என்று சொன்னால் நடிகர் சிவக்குமாரை சொல்லலாம்.. டி.ராஜேந்தரை சொல்லலாம்.. இப்படி விரல்விட்டு எண்ணக்கூடிய அளவுக்கு இருக்கிறார்கள்.
ரூ.1000 கேட்டு சென்ற ஜெயலலிதா
அன்று சாண்டோ சின்னப்ப தேவரை சொல்லலாம்.. ஆர்.எம். வீரப்பனை சொல்லலாம். சினிமா வாய்ப்பு கேட்டு, ஆர்.எம்வீரப்பன் அலுவலகத்துக்கு பெண்கள் யாருமே போக மாட்டார்களாம். ஒருமுறை ஜெயலலிதாவும், அவரது அம்மாவும், அவசரத்துக்கு 1000 ரூபாய் கேட்டு, சத்யா மூவீஸ் ஆபீசுக்கு வந்துள்ளார்கள்.. ஆனால், இவர்கள் வருவதை முன்கூட்டியே கேள்விப்பட்டதுமே, கதவை பூட்டிக் கொண்டு ஓடிவிட்டாராம்.. இப்படியெல்லாம் அன்று இருந்திருக்கிறார்கள்
ஆனால், சைந்தவி, ஜிவி பிரகாஷ் மோசமான முன்னுதாரணம்.. ஆங்கிலேய தம்பதிகள்கூட இப்படி இருக்க மாட்டார்கள்.. இதெல்லாம் சீரழிவு கலாச்சாரம்" என்று கடுமையாக பேசியிருக்கிறார் பாண்டியன்.












Click it and Unblock the Notifications