கரைந்த சாவித்ரியின் சொத்துக்கள்.. வீட்டில் 'குழி வெட்டியது இதுக்கா? ஜெமினி கணேசன் சொல்லிகூட கேட்கலயே

Subscribe to Oneindia Tamil

சென்னை: சாவித்ரி பிறருக்கு உதவும் குணம் கொண்டவர்.. ஆரம்பம் முதல் கடைசிவரை தன்னால் இயன்றதை செய்து கொண்டேயிருந்தார்.. மிகச்சிறந்த கொடை வள்ளலான நடிகையர் திலகம் சாவித்திரி, பிரதமர் நிதி, பாகிஸ்தான் நிதிக்காக தன்னுடைய நகை, பணத்தை அள்ளி தந்திருக்கிறார்.. நடிகர், நடிகைகளுக்கு கொடை வள்ளல் என்றால் அது சாவித்திரிதான் என்பார்கள். எனினும், சொந்த படம் எடுத்து நஷ்டமடைந்தவர் சாவித்ரி.. இதுகுறித்து எத்தனைபோ பிரபலங்கள் தங்கள் பேட்டிகளிலும் நினைவுகூர்ந்துள்ளனர்.

சாவித்திரி "பிராப்தம்" என்ற சொந்த படத்தை எடுத்து தயாரித்து நஷ்டமடைந்தார்.. இதுகுறித்து மூத்த அரசியல் விமர்சகர் டாக்டர் காந்தராஜ், ஒரு பேட்டியில் சொல்லும்போது, சொந்த படத்தை சாவித்திரி தயாரிக்க முடிவு செய்தபோதே ஜெமினி கணேசனுக்கு அதில் ஈடுபாடு இல்லை. இந்த படம் சரிவராது என்று பலமுறை சொல்லியும் சாவித்திரி கேட்கவில்லை.

Television Savitri Properties

இறுதியில் "பிராப்தம்" படுதோல்வியை தொடர்ந்துதான் ஜெமினி கணேசனுக்கும் சாவித்திரிக்கும் இடையே மிகப்பெரிய வாக்குவாதம் ஏற்பட்டது.. இதையடுத்து இருவரும் தனி தனியே பிரிந்து வாழத்தொடங்கினார்கள்.

சந்திரபாபு அனுமதி

சந்திரபாபுவுக்கும் சாவித்திரிக்கும் இடையே மிகவும் ஆழமான நட்பு இருந்தது. ஒரு கட்டத்தில் சந்திரபாபுவின் அனுமதியை கேட்டுத்தான் சாவித்திரியை யாராயினும் சந்திக்க முடியும் என்ற நிலை எல்லாம் வந்தது.. சந்திரபாபுவின் அனுமதி இருந்தால்தான் ஜெமினி கணேசனாலயே சாவித்திரியை பார்க்கமுடியும்.

ஆனால், சாவித்திரி நோய் வாய்ப்பட்டிருந்தபோது சந்திரபாபுவும் நோய்வாய்ப்பட்டிருந்ததால் சாவித்ரியை பார்த்துக்கொள்ள முடியவில்லை.. சந்திரபாபுவை சினிமா துறையில் கைத்தூக்கிவிட்டவர்களில் முக்கியமானவர் ஜெமினி கணேசன்" என்றெல்லாம் அந்த பேட்டியில் டாக்டர்.காந்தராஜ் கூறியிருந்தார்.

பிராப்தம் தந்த தோல்வி

அதேபோல, பிரபல பத்திரிகைக்கு நடிகர் ராஜேஷ் தந்திருந்த பேட்டியில், சாவித்திரி கதாநாயகியாக நடித்த கடைசி படம் பிராப்தம்.. "இந்தப் படத்தில் நீ நடிக்காதே. உனக்கு பதிலாக வேறு ஒரு நடிகையின் பெயரை சொல்லி, அவரைப்போடு" என்று நல்ல முறையில் சாவித்திரிக்கு அட்வைஸ் தந்துள்ளார் ஜெமினிகணேசன்.

ஜெமினிகணேசன் சொன்னதைக் கேட்டதும் அதிகமாக கோபப்பட்டுள்ளார் சாவித்திரி.. "நான் தான் நடிப்பேன். என்னுடைய எடையை குறைக்க போகிறேன். நீச்சல் அடித்தால் எடை சீக்கிரம் குறையும் என்று என்னுடைய தோழிகள் சொல்கிறார்கள்.. ஓட்டல், கிளப்புகளில் உள்ள நீச்சல் குளங்களில் என்னால் நீச்சல் அடிக்க முடியாது. அதனால் வீட்டு காம்ப்பவுண்ட் உள்ளேயே நீச்சல்குளம் கட்டப்போகிறேன்" என்றார்.

நீச்சல் குளம்

இதைக்கேட்ட ஜெமினிகணேசன், "அவ்வளவு சீக்கிரம் எடையை குறைக்க முடியாது. எப்போதுமே எடையை மெதுவாகத்தான குறைக்க முடியும். உணவுக் கட்டுபாடு, நடைபயிற்சி, முறையான உடற்பயிற்சி தேவைப்படும். மனையடி சாஸ்திரப்படி வீட்டிற்குள் நீச்சல் குளம் கட்டக்கூடாது. அப்படி கட்டினால் வீட்டிற்கு நல்லதல்ல" என்றார்..

ஆனால், ஜெமினியின் பேச்சை மீறி நீச்சல் குளத்திற்காக குழி தோண்டி, அதுவே அவரது துன்பத்தை தந்துவிட்டது என்றெல்லாம் அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+