மனோஜால் ரோகிணிக்கு வந்த பிரச்சனை.. அண்ணாமலை சொன்ன பதில்.. மீனா இப்படி பேசிட்டாங்களே?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் மார்ச் ஐந்தாம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்று இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் சிட்டியால் தான் முத்து காரை விற்றார் என்ற உண்மை தெரிய வந்ததும் மீனா சிட்டி ஆபீசுக்கு சென்று சிட்டியை மிரட்டி இருக்கிறார்.
அதே நேரத்தில் மனோஜ் பார்க் நண்பரிடம் கடன் வாங்கி இருக்கும் விஷயம் ரோகிணிக்கு தெரிய வருகிறது. அந்த கோபத்தில் ரோகினி சில உண்மைகளை உளறிவிட அதனால் மனோஜ்க்கு சந்தேகம் வருகிறது. இந்த நிலையில் இன்று என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் மீனா முத்து செட்டுக்கு வந்து செல்வத்திடம் முத்து எதற்காக காரை விற்றார் என்று கேட்க அதற்கு முத்து சிட்டியால்தான் முத்து காரை விற்றார் என்று உண்மைகளை சொல்கிறார். தங்களுக்காக முத்து சப்போர்ட் பண்ணுவதற்காக சிட்டி செய்த பிரச்சனைகளை சொல்ல அதனால் கோபமான மீனா நேராக சிட்டி ஆபீசுக்கு வருகிறார்.

அங்கு சிட்டியை அவமானப்படுத்தி திட்டுகிறார். அதோடு என் புருஷன் உன் காலில் விழனுமா? இதோடு நிறுத்திக்க திரும்பவும் அவர்கிட்ட ஏதாவது பிரச்சனை பண்ணுன அவ்வளவுதான். அவர் அமைதியா இருக்காரோ இல்லையோ நான் உன்னை நடுரோட்டில் வைத்து செருப்பால அடிப்பேன் என்று திட்டி விட்டு அங்கிருந்து போக அதனால் சிட்டி கோபமாகி அங்கிருக்கும் அடியாள்களிடம் இனி இவ அவா புருஷன் முத்துவோடு சேர்ந்து வாழக்கூடாது என்று சொல்ல அதற்கு அவர்கள் நாம என்ன பண்ண என்று கேள்வி கேட்கின்றனர்.

அதற்கு சிட்டி அதுதான் சத்யா நம்ம பக்கம் இருக்கால்ல அவனை வச்சு முத்து மீனா வாழ்க்கையில் விளையாடி இருவரையும் பிரிக்கணும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அடுத்த கட்டத்தில் மனோஜ் ரோகினி இடம் கனடா வேலை பற்றி பேசிக் கொண்டிருக்க அந்த நேரத்தில் பார்க்கில் மனோஜ்க்கு பணம் கொடுத்த நண்பர் வீட்டுக்கு வந்து மனோஜை மிரட்டி கடன் வாங்கிய விஷயத்தை சொல்ல ரோகிணி இதைக் கேட்டு அதிர்ச்சி ஆகிறார்.
அதோடு பார்க் நண்பர் எனக்கு சீக்கிரமா பணத்தை செட்டில் பண்ணனும் என்று மிரட்டி விட்டு போக ரோகிணி இன்னும் என்னெல்லாம் என்கிட்ட மறைத்து வைத்திருக்கிறா? யாரெல்லாம் என்ன பணம் கேட்டு டார்ச்சர் பண்ணுவீங்க என்று கோபப்படுகிறார். ஒரு பக்கத்தில் விஜயா ரோகினியிடம் பணம் கேட்டுக் கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் ரோகிணியை பிஏவும் பணத்திற்காக மிரட்டிக் கொண்டிருக்கிறார்.

இப்போது மனோஜ் கடன் வாங்கி வைத்திருக்கும் நபரும் வீட்டுக்கே வந்து விட இதை நினைத்து ரோகினி கோபப்படுகிறார். அப்போது மனோஜ் உன்கிட்ட வேற யாரு பணம் கேட்கிறா? என்று கேட்க அதற்கு ரோகிணி என் முகத்திலேயே முழிக்காத என்று திட்டி விட்டு ரூமுக்குள் சென்று விடுகிறார். அடுத்த கட்டத்தில் மீனா வரும் வழியில் சீதாவை பார்த்து முத்து கார் விற்றது சிட்டி செய்த வேலைதான் என்று எல்லாவற்றையும் சொல்கிறார்.

அதோடு சத்யாவை அவன் கூட சேர விடக்கூடாது என்று சொல்லிவிட்டு வருகிறார். பிறகு வீட்டுக்கு வந்ததும் அண்ணாமலை இடம் நடந்த விஷயங்களை சொல்ல அவர் என்கிட்ட சொன்ன விஷயம் முத்துவுக்கு தெரிய வேண்டாம். அவன் எது பண்ணுனாலும் அதுல ஒரு நியாயம் இருக்கும். இதுல வேற ஏதோ காரணம் இருக்கு என்று எனக்கு தோணுகிறது என்று சொல்ல அந்த நேரத்தில் வீட்டிற்கு முத்து வருகிறார். அதனால் அண்ணாமலை பேச்சை நிறுத்தி விடுகிறார்.
பிறகு மீனா முத்துவிடம் தனியாக பேசும்போது என்கிட்ட எதுக்கு இந்த விஷயத்தை சொல்லல என்று கேட்க அதற்கு முத்து என்ன விஷயம் தெரிஞ்சு என்று குழப்பம் அடைகிறார். அதற்கு மீனா, காரை விற்பதற்கு அந்த சிட்டி தான் காரணம்னு எனக்கு தெரியும் என்று சொல்ல ஓ அப்படியா என்று நிம்மதி அடைகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
சிறகடிக்க ஆசை: விஜயாக்கு செக் வைத்த ரோகிணி.. ஸ்ருதியை அழிக்க நீத்து வைத்த கூட்டணி.. செம ட்விஸ்ட் -
மாஸ்டர் மகேந்திரன் பாவம்.. 3 நிமிட வீடியோவால் மாறிய வாழ்க்கை! இனிதான் பிரச்சனை.. சிறகடிக்க ஆசை நடிகர் ஓபன் -
வாழ்க்கையை கெடுத்த "வதந்தி”.. இப்போ கஷ்டப்படுறேன்.. கண்ணீருடன் உதவி கேட்ட பாவா லட்சுமணன்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்












Click it and Unblock the Notifications