சிறகடிக்க ஆசை: சிட்டியின் சதி அம்பலம்! அருண் செய்த துரோகம்.. மீனா கண்டுபிடிக்கும் உண்மை
சென்னை: விஜய் டிவியின் பிரபலமான சீரியலான 'சிறகடிக்க ஆசை'யின் இன்றைய எபிசோடு பல பரபரப்பான திருப்பங்களுடன் ஒளிபரப்பானது. முத்துவைக் கைது செய்ய வந்த போலீஸ், விஜயாவின் திமிர் பேச்சு, அருணின் துரோகம், மற்றும் மீனாவின் சாமர்த்தியமான செயல் எனப் பல சுவாரஸ்யமான நிகழ்வுகள் அரங்கேறின.
விஜயாவின் அவதூறு
இன்றைய எபிசோடின் தொடக்கத்தில், முத்துவைக் கைது செய்ய போலீஸ் வீட்டிற்கு வந்தபோது, அண்ணாமலை, மீனா, ரவி மூவரும் முத்துவைக் காப்பாற்ற முயற்சிக்கின்றனர். அப்போது விஜயா, " இவன் தான் பண்ணி இருப்பான். அவனுக்காக நீங்க எதுக்கு கெஞ்சிக்கிட்டு இருக்கீங்க?" என்று பேசுகிறார். இதற்கு அண்ணாமலை, "எந்த அம்மாவும் பிள்ளை தப்பு பண்ணி இருந்தாலும், 'அவன் பண்ணலை'ன்னு பொய்தான் சொல்லுவாங்க. ஆனால், இவள் 'இவன்தான் பண்ணி இருப்பான்'னு சொல்லும்போதே நீ அவ மேல வச்சிருக்கிற பாசம் தெரியுது! அவன் உனக்காக தானே அந்த வீட்டுக்கு பேச போனான்," என்று வேதனையுடன் கூற, முத்து, "விடுங்கப்பா அவங்க பேசட்டும். என்ன பேசணுமோ பேசட்டும்," என்று சொல்கிறார்.

அருணின் துரோகம்
வேறு வழியில்லாமல் முத்துவை போலீஸ் கைது செய்து அழைத்துச் செல்ல, போலீஸ் ஸ்டேஷனில் அருண் இருக்கிறார். முத்துவை பார்த்தவுடன், "என்ன ஆச்சு சார்? இவர் என்னோட ரிலேஷன் தான். என்ன பிரச்சனை?" என்று கேட்கிறார். அதற்கு இன்ஸ்பெக்டர், "ஆளுங்களை அனுப்பி ஒரு குடும்பத்தை அடிச்சிருக்காரு. அதுல ஒருத்தர் சீரியஸா இருக்காரு. அதனால பெரிய இடத்து கேஸ்ன்றதுனால அரெஸ்ட் பண்ணி இருக்கோம்," என்கிறார்.
"அவர் சாதாரணமான டிரைவர். அவங்க வைப் சாதாரணமா பூ கட்டுறவங்க," என்று அருண் சொல்ல, முத்து கோபமடைந்து, "அவனை முதலில் 'சாதாரணமா', 'சாதாரணமா' சொல்றதை நிறுத்தச் சொல்லுங்க," என்கிறார். "இவன் ஒண்ணும் என்னை காப்பாத்த வேணாம். நான் நேர்மையான வழியில் போராடி வெளியே வருவேன். நான் எந்தத் தப்பும் பண்ணலை," என ஜெயிலுக்குள் இருந்து முத்து சொல்கிறார்.
பிறகு இன்ஸ்பெக்டரிடம் வந்த அருண், "என்ன திரும்பவும் அந்த ஆளை வெளியே விடணும்னு கேட்கப் போறியா?" எனக் கேட்க, "இல்லை சார். அவன் அப்படித்தான். சொந்தக்காரங்க அதனால உள்ள அப்படிப் பேசுனேன். குடிகாரன் கண்டிப்பாக ஆளை வெச்சு அடிச்சிருப்பான். அவனுக்கு அஞ்சு வருஷமாவது ஜெயில்ல இருந்தாதான் தெரியும்," என்று முத்துவை பற்றிப் போட்டுக் கொடுக்கிறார். அருணின் இந்தத் துரோகம் முத்துவை மேலும் சிக்கலில் ஆழ்த்துகிறது.
மீனாவின் முயற்சி
மறுபக்கம், போலீஸ் இன்ஸ்பெக்டரைத் தேடி வீட்டிற்கு வந்த மீனா, அவர் இல்லாததால் நேராக அருண் வீட்டிற்குச் செல்கிறார். அங்கு அருண் இல்லாததால் சீதாவிடம் விஷயத்தைச் சொல்ல, கொஞ்ச நேரத்தில் அருணும் வந்துவிடுகிறார். மீனா, "நீங்க தான் ஏதாவது ஹெல்ப் பண்ணனும்," என்று கேட்க, அருண், "நானும் ஸ்டேஷன்ல பார்த்தேன். ஆனா அவர் மேல மர்டர் கேஸ் ஆகாம இருக்குற வரைக்கும் நல்லது. அவர் உசுருக்கு ஏதாவதுனா பண்ணிடுவாங்க. அப்புறம் ரொம்ப கஷ்டம்," என்று மேலும் பயமுறுத்துகிறார். மீனா எப்படியாவது உதவி செய்யச் சொல்லிவிட்டு அங்கிருந்து சென்று விடுகிறார்.
சீதா மீனாவை, "அவரே மாமா வெளியே கூட்டிட்டு வருவார்," என்று சமாதானம் செய்ய, மீனா, "உன் புருஷன் கூட்டிட்டு வரலைனாலும், என் தாலிக்காக நான் போராடுவேன்," என்று சொல்லிவிட்டு, ரதிக்கு ஃபோன் செய்து வரச் சொல்கிறார். நடந்த விஷயங்களை ரதியிடம் சொல்லிவிட்டு, "தீபனிடம் அங்கு வந்த ஆளுங்களை யாராவது அடையாளம் தெரியுமா?" என்று கேட்கச் சொல்லி போன் பண்ணுகிறார். தீபன் யோசித்து, "சிட்டி வேலையை முடிச்சுட்டேன்," எனப் பேசியதைச் சொல்கிறார். மீனா, "இதை யார் பண்ணி இருப்பாங்கன்னு எனக்குத் தெரிஞ்சிருச்சு. இதுக்கு மேல நான் பார்த்துக்கிறேன்," என முடிவெடுக்கிறார்.
சிட்டியின் சதி அம்பலம்
கொஞ்ச நேரத்தில், போலீஸ் ஸ்டேஷனில் இருக்கும் இன்ஸ்பெக்டருக்கு, மீனாவுக்குத் தெரிந்த இன்ஸ்பெக்டர் ஃபோன் செய்து, "முத்து மேல் எந்தத் தப்பும் இல்லை சார். மீனா கண்டுபிடிச்சு தான் சொல்றாங்க. கொஞ்ச நேரம் எஃப்.ஐ.ஆர் போடாமல் வெயிட் பண்ணுங்க," என்று சொல்கிறார். அதே நேரம், மீனாவும் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்திருக்கிறார். "சிட்டி தான் இது மாதிரி பண்ணி, பழியை என்கிட்ட போட்டு இருக்காரு," என்று சொல்கிறார். உடனே இன்ஸ்பெக்டர் சிட்டியையும் அவர்களது ஆட்களையும் அழைத்து வரச் சொல்லி சிட்டியிடம் விசாரிக்கிறார்கள். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications