பெரியவர்களின் ஆர்வம், ஆர்வக் கோளாராய் முடிகிறதா?!
சென்னை: விஜய் டிவியின் நீயா நானா மிகவும் புகழ்பெற்ற சூப்பர் ஹிட் நிகழ்ச்சி.இதை முதலில் இரவு நேரங்களில் ஒளிபரப்பினார்கள். இப்போது மதிய நேரங்களில் மாற்றியதில் பார்வையாளர்கள் கம்மியானது என்பது உண்மைதான்.
இருந்தாலும் மாஸ் குறையாமால் இந்த நிகழ்ச்சி பலராலும் விரும்பிப் பார்க்கப்படுவதற்கு நிகழ்ச்சியை நடத்தும் கோபிநாத் முக்கிய காரணம்.
இந்த வாரம் பெரியவர்கள் ஆர்வம் ஆர்வ கோளாறாய் முடிகிறதா என்கிற விவாதத்தை முன்னெடுத்து வைத்து இருக்கிறார். பலரும் பல விதமான அனுபவங்களைக் கூறுவார்கள் என்றாலும், இப்போதைய ப்ரோமோ நகைக்கும்படி அசத்தலாக இருக்கிறது.

செல்போன் பெரியவர்கள்
முதலில் டச் போன் என்றால் எப்படி பயன் படுத்துவது என்று தெரியாமல், அந்த போன் எல்லாம் எனக்கு வேணாம் என்று ஒதுங்கி இருப்பார்கள். பிள்ளைகள் நான் சொல்லித் தரேன் பா..வாங்கி பயப்படாம யூஸ் பண்ணுங்கன்னு சொல்லித் தருவாங்க, ரெண்டு நாள் தயங்கினவங்க அடுத்த நாள் பார்க்கணுமே.. சும்மா புகுந்து விளையாட ஆரம்பிச்சுருவாங்க.

வாட்சப் முகநூல்
தமிழில் டைப் அடிக்க கத்துக்குவாங்க... பிள்ளைகள் முகநூல் அது இதுன்னு சமூக வலைத்தளங்களை ஆரம்பிச்சு சொல்லிக் குடுத்துருவாங்க. முகநூலில் இவர்கள் பகிர்வை பார்க்கணுமே..அனுபவங்கள் அப்போதுதான் பேசும், தவறாமல் வீட்டம்மா வீட்டம்மா என்று தங்களது மனைவியை இழுத்து மெச்சிக்குவாங்க.

சொல்றார் பாருங்க
பெரியவர்களின் ஆர்வம், ஆர்வக் கோளாராய் முடிகிறதா என்கிற விவாதத்துக்கு ஒருத்தர் சொல்றார்.. நான் குற்றாலத்தில் அருவியில் குளிச்சதை போட்டோ எடுத்து வாட்சாப் டிஸ்பிளேவா வச்சிருந்தேன் சார்.இதென்ன இந்த மாதிரி போட்டோவெல்லாம் வச்சு இருக்கீங்கன்னு ஒரே திட்டுன்னு சொன்னார். எதனால் என்று கோபிநாத் கேட்டபோது, அருவியில் குளிக்கும்போது பாதி தண்ணி பாதி உடம்பு தெரியும்ல சார் அதுக்குன்னு சொன்னார்.

வயசு என்ன?
உங்க வயசு என்ன என்று கேட்டபோது எனக்கு 55 வயசு சார்னு சொன்னார். 55 வயசுல இப்படி ஒரு போட்டோவான்னு கோபிநாத் சொல்ல, என்ன சார் 55 வயசுதானேன்னு சமாதானம் சொன்னார். மனசை இளமையா வச்சுக்கிட்டா என்று அவர் சொல்ல,சார் வயசானது வயசானதுதானே... அதை விடுங்க .எத்தனை நாள் அந்த போட்டோவை வச்சு இருந்தீங்கன்னு கேட்டார்.

இரண்டு வருஷம்
ரெண்டு வருஷம் யார் சொல்லியும் கேட்கலை சார்.. என் பையன் கூட சொன்னான்..என்னப்பா இப்படி போட்டோவை வச்சு இருக்கேன்னு. ஆனா, நிகிதான் போட்டோவை மாத்தலை..எனக்கு வாடிக்கையாளர் ஒருத்தர் சொன்னார் என்ன சார் அப்படி போட்டோ வச்சு இருக்கீங்கன்னு. அவர் முக்கியமாச்சேன்னு உடனே எடுத்திட்டேன்னு சொன்னார்.
இன்னும் சுவாரஸ்யமான வியங்கள் நிறைய வரும். நீயா நானா -நிகழ்ச்சியை வரும் ஞாயிறு மதியம் 12 மணிக்கு விஜய் டிவியில் பார்க்க மறக்காதீர்கள்.
-
விஜய் டிவியில் திடீரென முடிவுக்கு வரும் சீரியல்.. அதுவும் இதுதான் காரணமா? பீல் பண்ணும் ரசிகர்கள் -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல்












Click it and Unblock the Notifications