பீட்டர் ஹெயின் சொன்னது ஞாபகமிருக்கா? ரஜினிகாந்த்தை சூப்பர் ஸ்டார்னு சொல்றது இதுக்குதான்! வாவ் ரஜினி
சென்னை: 74 வயதாகிவிட்டது, பணத்தாசை பிடித்தவர், யாருக்கும் உதவி செய்வதில்லை என்றெல்லாம் போற போக்கில் எளிதாக விமர்சனம் செய்துவிடுகிறார்கள்.. ஆனால் ரஜினிகாந்த் தனக்கான வழியில், சரியாக சென்று கொண்டிருக்கிறார் என்பதே உண்மை" என்று மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு புகழ்ந்து தெரிவித்துள்ளார். அத்துடன் ரஜினி குறித்த சில பாசிட்டிவ் விஷயங்களையும் தன்னுடைய சேனலில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த், தனக்கு வாழ்வு கொடுத்தது தமிழ் சினிமாதான். என்னை வாழவைத்த தமிழ்நாடு என்றெல்லாம் பேசுகிறார். ஆனால் அவரை வாழவைத்த தமிழ் சினிமா தொடர்பான நடிகர் சங்க கட்டடத்திற்கு அவர் 10 பைசாகூட தந்ததில்லை, கோடிக்கணக்கான பணம் வைத்திருந்தும், பெரிதாக உதவிகளை ரஜினி செய்ததில்லை என்ற விமர்சனங்கள் வலம் வரதுவங்கியிருக்கின்றன..

பில்டப் இல்லாமல் பேசிய நடிகர்
ஆனால், நடிகர் சங்கத்துக்கு ரஜினி பண உதவி செய்யாவிட்டாலும், நடிகர் சங்க உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகையை ரஜினி தந்திருக்கிறார் என்று இதற்கு பதிலடிகளும் இணையத்தில் வலம் வருகின்றன..
இந்நிலையில், Cheyyaru Balu யூடியூப் சேனலில் பேசியிருக்கும் மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு, "ஒரு சாதாரண படத்துக்கு அப்டேட் என்றாலும்கூட அதற்கே ஏராளமாக செலவு செய்து, ஓவராக பில்டப் செய்வார்கள்.. காரணம் தங்களது படைப்பு மீது அபரிமிதமான நம்பிக்கை. எனவே இதுபோன்ற பில்டப்புகள் சிலசமயம் சினிமாவுக்கு தேவைப்படுகிறது..
தேங்காய் உடைத்ததுபோல சொன்ன ரஜினி
ஆனால், ரஜினிகாந்த் என்ற மாபெரும் மனிதர், ஜெயிலர் 2 படத்திற்கான ஷூட்டிங்கை முடித்துவிட்டு, கேரளாவிலிருந்து திரும்பி வந்தார்.. சென்னை ஏர்போர்ட்டில் வந்திறங்கிய ரஜினியிடம், படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்று செய்தியாளர்கள் கேட்டுள்ளனர்.. அதற்கு ரஜினி, சூரைத்தேங்காய் உடைத்ததுபோல, அடுத்த வருடம் ஜூன் 12ம் தேதி ரிலீஸ் என்று சொல்லிவிட்டார்.. மனதில் பட்டதை உடனே இப்படி சொல்லக்கூடியவர்தான் ரஜினிகாந்த்.
தான் பேசுவதால் சாதகமோ? பாதகமோ? என எதை பற்றியும் யோசிக்காமல் பேசிவிடுவதால்தான், பல மேடைகளில் பேச ரஜினிகாந்த் தயங்குகிறார்.. தான் பேசுவது தன்னை பாதித்தால் பரவாயில்லை, ஆனால் விழா சம்பந்தமானவர்களை ஏதாவது ஒருவகையில் பாதித்துவிடும் என்பதால், எங்கேயும் மேடையில் ஏறி பேச தயக்கம் காட்டுவார்..
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
ஜெயிலர் படம் ஏற்கனவே ஹிட்டான படம்.. எனவே ஜெயிலர் 2 படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.. அப்படியிருக்கும்போது ரிலீஸ் தேதியை பொசுக்கென சொல்லியதுதான், ரஜினியின் ஸ்பெஷாலிட்டி.
அதேபோல, ரஜினி-கமல் இணைந்து நடிக்க போகும் படத்தை தயாரிக்க போவது லோகேஷ் கனகராஜ்தான் என்று அனைவரும் பேசி கொண்டுள்ளனர்.. ஆனால், ஜெயிலர் 2 ஷூட்டிங்குக்காக சென்னையிலிருந்து கேரளாவுக்கு ரஜினி செல்லும்போது, "நானும் கமலும் இணைந்து நடிக்க போகிறோம்.. ஆனால், கதையும், டைரக்டரும் இன்னும் முடிவாகவில்லை" என்று பளிச்சென சொல்லிவிட்டார்.
மதுரை கார்த்திக்கு மகிழ்ச்சி
மதுரை திருமங்கலத்தை சேர்ந்த கார்த்தி என்ற ராணுவ வீரர், ரஜினிக்கு 2 கருங்கல் சிலைகளை செய்துள்ளார்.. கோயில் போல கட்டி அங்கே இந்த சிலைகளை வைத்து, பாலாபிஷேகம் உள்ளிட்டவற்றை செய்து வருகிறார். அதாவது ரஜினியை கடவுளாகவே வணங்கி வருகிறார்.. நவராத்திரிக்கு தற்போது கொலு வைத்துள்ளார்.. இதில் ரஜினியின் ஒவ்வொரு பட ஸ்டில்களையும் கொலு படியில் வைத்திருக்கிறார்..
இதைக்கேள்விப்பட்ட ரஜினி, கார்த்தி குடும்பத்தினரை தன்னுடைய வீட்டுக்கு அழைத்து, 45 நிமிடம் உட்கார வைத்து பேசி உபசரித்து அனுப்பியிருக்கிறார்..
பல்லாயிரம் கோடி பணத்தை வைத்திருந்தாலும்,நடிகர் சங்க விழா உட்பட எந்த நிகழ்ச்சிக்கும் ரஜினி பணம் தருவதில்லை என்ற விமர்சனங்கள் உள்ளது.. ஆனால், ரஜினிகாந்த் விளம்பர பிரியர் கிடையாது.. மறைமுகமாக பல பேருக்கு பல உதவிகளை செய்தவர்..
பீட்டர் ஹெயின் நெகிழ்ச்சி
குறிப்பாக பீட்டர் ஹெயினுக்கு உதவியிருக்கிறார்.. ஒரு சாதாரண ஸ்டண்ட் நடிகராக பீட்டர் ஹெயின் இருந்தபோது, ஏதாவது உதவி வேண்டுமா? என்று ரஜினி கேட்டிருக்கிறார்..
அதற்கு பீட்டர் ஹெயின், தன்னுடைய 2 பிள்ளைகளின் படிப்பு செலவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறார்.. அப்போது முதல் ரஜினிதான் படிப்பு செலவை ஏற்றுள்ளார்.. ஒருகட்டத்தில் பீட்டர் ஹெயின் ஸ்டண்ட் மாஸ்டராகி நன்றாக சம்பாதிக்க ஆரம்பித்தபிறகு, தானே குழந்தைகளின் படிப்பு செலவை பார்த்து கொள்வதாக சொல்லியிருக்கிறார். ஆனால் ரஜினிகாந்த் அதற்கு சம்மதிக்காமல், பிள்ளைகளை கடைசிவரை பணம் கட்டி படிக்க வைத்துள்ளார்.
74 வயதாகிவிட்டது, பணத்தாசை பிடித்தவர், யாருக்கும் உதவி செய்வதில்லை என்றெல்லாம் போற போக்கில் எளிதாக விமர்சனம் செய்துவிடுகிறார்கள்.. ஆனால் ரஜினிகாந்த் தனக்கான வழியில், சரியாக சென்று கொண்டிருக்கிறார் என்பதே உண்மை" என்று தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications