Tamil selvi serial: சரவணன் செத்துருவானா? தமிழ்செல்விக்கு அமுதனா?
சென்னை: சன் டிவியின் தமிழ்ச்செல்வி சீரியலில் கடந்த ஒரு வாரமாக தமிழ்ச்செல்விக்கும், மாமன் சரவணனுக்கும் கல்யாணம் என்கிற எபிஸோட்ஸ் ஒளிபரப்பாகிட்டு இருக்கிறது. இதற்கு நடுவில் அமுதன் சித்தி, கொம்பன் என்று கல்யாணத்தை குழப்ப இரண்டு பேர்.
இதற்குள் படிக்காத சரவணன் தனது மாமன் பொண்ணு நிறைய படிச்ச தமிழ்ச்செல்விக்கு படிச்ச அமுதன்தான் சரியான கணவனாக இருப்பான் என்று நினைக்க ஆரம்பிச்சுடறான்.
நிலைமை இப்படி இருக்கையில், தமிழ்ச்செல்வியை அமுதனுக்கு விட்டுக் கொடுத்துருவானோ என்று நமே ஒரு பச்சாதாபத்தில் இருக்கும் போதுதான் அது நிகழ்கிறது.

அமுதன் கடத்தப்பட்டு
மாப்பிள்ளை என்று தவறாக கருதி, சித்தி ஆட்களால் கடத்தப்பட்ட அமுதன் தப்பித்து ஓடி வருகிறான். தமிழ்ச்செல்வியின் பாட்டியை நினைச்சு, உடனடியாக வந்து அறையைத் திறந்து பாட்டியைத் தூக்கிகிட்டு வர்றான். அதுவரைக்கும் மண்டபத்தில் பாட்டியை காணவில்லை என்று எல்லாரும் தேடிக்கொண்டு இருக்காங்க.

பொம்மை வேஷத்தில்
நடந்ததை அமுதன் சொல்ல, அமுதனை எல்லாரும் பாராட்டுகிறார்கள்.பாட்டியும் கண்களைத் திறந்து பேச ஆரம்பிச்சுடறாங்க. பாட்டியை ஆஸ்பத்திரிக்கு அழைச்சுட்டு போகலாம்னு கிளம்பும் போது, மண்டபத்தில் பொம்மை வேஷத்தில் இருந்த கொம்பன் தமிழ்ச்செல்வியை

சரவணன் வாங்கி
குடும்பத்தினரிடம் கொம்பனின் மனைவியிடம், மகளுமே சொல்ல ,உடனே அவளைத் தேடிக்கொண்டு எல்லோரும் போகிறார்கள். அப்போது .அமுதன்,சரவணன் ரெண்டு பேருமே கொம்பனை அடிக்க, கொம்பன் தமிச்செல்வியை குத்த வரும்போது கத்திக் குத்தை சரவணன் வாங்கிக்கறான்.

செத்துக்கிட்டு இருக்கேன்.
சரவணன் திரும்ப கொம்பனை குத்தி தள்ளிவிட அவன் கல்லின் மேல் விழுந்துடறான்.இப்போது சரவணனை ஆஸ்பத்திரிக்கு அழைச்சுட்டு போலாம்னு குடும்பத்தினர் பேச, நான் கொஞ்சம் கொஞ்சமா செத்துக்கிட்டு இருக்கேன்.தயவு செய்து உடனே தமிழ்ச்செல்விக்கும் அமுதனுக்கும் கல்யாணம் செய்து வைங்கன்னு சொல்றான்.
அப்படி சொல்லாதே சரவணா..தமிழ்ச்செல்வி மனசு என்ன பாடு படும்னு அம்மா சொல்ல, என் தமிழ் என்னை புரிஞ்சுக்குவான்னு சொல்றான். உண்மையில் தமிழ்ச்செல்வி புரிஞ்சுகிட்டு படிச்ச அமுதனை கல்யாணம் செய்துக்குவாளா?












Click it and Unblock the Notifications