தமிழுக்கு எதிராக பேசிய அர்ஜுன்.. ஆனால் மேக்னா செய்த செயல்! தெருவுக்கு வந்த நமச்சி..வசு சொன்னது நடந்துடுச்சு

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் ஜனவரி 18ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது. அதில் மேக்னா நமச்சி சொன்ன பொய்யால் தன்னை தமிழ் தான் ஏமாற்றிவிட்டார் என்று கடும் கோபத்தில் புலம்பி கொண்டிருக்கிறார். அதோடு மருத்துவமனையில் இருக்கும் மேக்னாவே சந்திப்பதற்காக அர்ஜுன் அங்கு வந்திருக்கிறார்.

அப்போது அர்ஜுன் தன்னுடைய குடும்பத்தையும் தமிழ் உடைய அம்மாவும் அப்பாவும் தான் ஏமாற்றி விட்டார்கள் என்று அனுதாபம் தேடிக் கொள்ள அதோடு தமிழ் ஏமாற்றி விட்டார் என்று வெறுப்பில் இருக்கும் மேக்னா தமிழை அழிப்பதற்காக அர்ஜுனோடு கூட்டு சேர்ந்து இருக்கிறார். என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் தமிழ் வீட்டில் எல்லோரும் மேக்னா பற்றி பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது நமச்சி வீட்டிற்கு வருகிறார். அதை பார்த்து கோபமான நடேசன் நீ எதுக்குடா இங்க வந்த என்று கேள்வி கேட்க அப்போது தமிழ் கோபப்பட்டு நமச்சியை அடிக்கிறார். அதோடு தமிழ் எனக்கு ஒரு நண்பன் இருந்தான் அவன் இனி செத்துட்டான், எனக்கு நண்பனே கிடையாது என்று பேசுகிறார்.

tamilum saraswathiyum serial January 18th episode Meghna spoke against Tamil

அப்போது சரஸ்வதி எந்த பிரச்சனையாக இருந்தாலும் அவர் கிட்ட சொல்றேனோ இல்லையோ உங்ககிட்ட தானே நான் சொன்னேன். ஏன்னா உங்களை நான் ஒரு அண்ணனா தான் நினைச்சேன். ஆனா நீங்க எப்படி இப்படி ஒரு துரோகத்தை செஞ்சிட்டிங்க? என்று கேள்வி கேட்க அதற்கு நமச்சி நான் இவ்ளோ பெரிய விஷயமாகணும்னு நினைச்சு கூட பாக்கல என்று பேசுகிறார்.

அதோடு தமிழ் காலை பிடித்துக் கொண்டு நான் உன்னை விட்டு போக மாட்டேன். ஒரு நாயாக இருந்தாலும் கிடப்பேன் ஆனா இந்த வீட்டை விட்டும் உன்னை விட்டு போக மாட்டேன். எனக்குன்னு யாரும் கிடையாது என்று பேசுகிறார். ஆனாலும் தமிழ் நமச்சி கழுத்தை பிடித்து வெளியே தள்ளுகிறார். அடுத்ததாக மருத்துவமனையில் இருக்கும் மேக்னாவை பார்ப்பதற்காக அவருடைய மாமாவும் அவருடைய பையனும் வருகின்றனர்.

tamilum saraswathiyum serial January 18th episode Meghna spoke against Tamil

அவர்களும் தங்களுடைய பங்குக்கு மேக்னாவிடம் தமிழை பற்றி இல்லாததும் பொல்லாததும் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். அந்த நேரத்தில் அர்ஜுன் அங்கு வர மேக்னாவின் மாமா அர்ஜுனை பார்க்க விடாமல் தடுக்கிறார். ஆனால் அதற்கு மேக்னா அவரை விடும்படி சொல்லி அர்ஜுனிடம் பேசுகிறார். அப்போது அர்ஜுன் எங்க அம்மாவையும் அப்பாவையும் தமிழ் குடும்பத்தினர் ஏமாற்றி சொத்தை எழுதி வாங்கிட்டாங்க.

அது மட்டும் இல்லாம எங்க அப்பா அக்காவுடைய சாவுக்கு அவங்க தான் காரணம். அதனால் தான் நான் அவங்களை பழிக்கு பழி வாங்குகிறேன். இது தெரியாம நீங்க தான் அவங்களை காப்பாத்திட்டீங்க. இப்பவாது உண்மையை தெரிஞ்சுகிட்டீங்க. உங்களுக்கு தமிழை பழிவாங்குவதற்கு ஏதாவது உதவி வேணும்னா நான் முழுசா செய்வேன். தமிழை பழி வாங்குறது தான் என்னுடைய ஒரே நோக்கம் என்று அர்ஜுன் சொல்ல,

tamilum saraswathiyum serial January 18th episode Meghna spoke against Tamil

அதற்கு மேக்னா நான் யாருன்னு தெரியாம தமிழ் விளையாண்டுட்டான். இனிமே என்னோட முழு ரூபத்தையும் பார்க்க போறான் என்று பேசிக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது. இதுவரைக்கும் தமிழுக்கு அர்ஜுன் மட்டும் தான் வில்லனாக இருந்தார் ஆனால் இப்போது மேக்னாவும் அவரோடு சேர்ந்து இருக்கிறார்.

tamilum saraswathiyum serial January 18th episode Meghna spoke against Tamil

கூடவே இருந்த நமச்சியும் வீட்டை விட்டு தமிழ் அடிக்க துரத்தி இருக்கிறார். அதனால் இனி தமிழுக்கு என்னவெல்லாம் பிரச்சனை வரப்போகிறது? அதிலிருந்து எப்படி தப்பிக்க போகிறார்? தமிழைப் பற்றி மேகனா புரிந்து கொள்வாரா? இல்லையா? என்று வரும் வாரத்தில் பார்க்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+