Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கும்கி நடிகை பிரேக்கப், ஸ்ரீரெட்டி புகார், முறிந்த வாரிசு காதல்.. படம் தோல்வி: விஷால் பற்றி பிரபலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஷாலுக்கு வைரஸ் காய்ச்சல் என்றும், 2 மாதங்கள் முழு ஓய்வு எடுத்தால், பழைய நிலைமைக்கு வந்துவிடுவார் என்றம் அவரது குடும்ப டாக்டர் சொல்கிறார்.. இதையேதான் அப்போலோ டாக்டரும் சொல்கிறார்.. விரைவில் உடல் குணமடைந்து, நட்சத்திர நாயகனாக மீண்டும் பழையபடி பல படங்களில் விஷால் நடிக்க வேண்டும் என்று மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

King 24X7 என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பயில்வான் ரங்கநாதன் பேசும்போது, "2 நாட்களுக்கு முன்பு நடந்த விழாவில், விஷாலால் மைக்கை பிடிக்க முடியாமல் கை தடுமாறியது... அவரால் சரியாக நிற்க முடியவில்லை.. நினைவிழந்தவர் போல நடந்து கொண்டார்.. சரியாக பேச முடியவில்லை.. இது வலைதளங்களில் பல்வேறு தகவல்களை உள்ளடக்கியதாக பரவி கொண்டிருக்கிறது.

vishal actor vishal

ஐ லவ் இந்தியா: பிறப்பால் தெலுங்கரான விஷால் வளர்ந்தது எல்லாம் தமிழ்நாட்டில்தான்.. அப்பா பெயர் ஜிகே ரெட்டி.. இவர் கிரானைட் பிசினஸ் செய்தவர்.. சினிமா ஆர்வம் காரணமாக, சரத்குமாரை வைதது, "ஐ லவ் இந்தியா" என்ற படத்தை எழுதி இயக்கினார்.. பெரும்பாலும் காஷ்மீரில் எடுக்கப்பட்டு, நிறைய செலவு செய்யப்பட்டது. ஆனால், படம் தோல்வியை தழுவியது. அதனால் மறுபடியும் கிரானைட் பிசினஸ் செய்வதற்கே சென்றுவிட்டார் ஜிகே ரெட்டி.

இவருக்கு 2 மகன்கள்.. ஒருவர் விக்ரம் கிருஷ்ணா.. மற்றொருவர் விஷால்.. இதில் விஷால்தான் மூத்தவர். விக்ரம் கிருஷ்ணா, 2 படங்களில் நடித்தார், 1 படத்தையும் இயக்கினார்.. பிறகு ஸ்ரேயா ரெட்டியை காதலித்து திருமணம் செய்து கெண்டார்.. இவருக்கு குழந்தை இருக்கிறது.

சினிமா ஆர்வம்: விஷால் டான்பாஸ்கோ பள்ளியில் படித்து, லயோவில் கல்லூரியை முடித்தார்.. சினிமாவில் படம் இயக்க வேண்டும் என்பது விருப்பமாக இருந்தது. நடிகர் அர்ஜூன் படங்களை இயக்கி கொண்டிருந்தபோது, அவரிடம் உதவி இயக்குனராக சேர்ந்தார் விஷால். அர்ஜூன் தன்னுடைய மகளை, ஹீரோயினாக அறிமுகப்படுத்தியபோது, விஷால்தான் அந்த பெண்ணுக்கு ஜோடியாக நடித்தார்

விஷால் வளர்த்தியாகவும் சத்யராஜைவிட உயரமாகவும், கருப்பாகவும் இருப்பார்.. செல்லமே படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார்.. தாமிரபரணி, திமிரு, சண்டைக்கோழி படங்களில் நடித்து, நட்சத்திர நடிகர்களில் ஒருவரானார். பிறகு சமூகசேவையில் ஆர்வம், வந்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பணம் சூறையாடல்: நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளரானார்.. தயாரிப்பாளர் சங்கத்தில் தலைவரானார்.. ஆனால் இரண்டிலுமே அவரது செயல்பாடுகள் பூஜ்ஜியம். தயாரிப்பாளர் சங்கத்தில், கேயார் சேர்த்து வைத்திருந்த அறக்கட்டளை பணம பலகோடியை சிதைத்துவிட்டார் விஷால்.. இப்போது அங்கே ஒரு பைசாகூட கிடையாது.. இதற்கு காரணம் விஷால்.. இது தொடர்பான விசாரணை நடப்பதாக சொன்னார்கள். ஆனால் அது என்ன ஆனது தெரியவில்லை.. நடிகர் சங்கத்திலும் ஏகப்பட்ட பணத்தை சூறையாடிவிட்டார்..

சமீபத்தில் ரெட் ஜெயன்ட் மூவிஸ், மாண்புமிகு உதயநிதி மீது காரசாரமான விமர்சனத்தை முன்வைத்ததும் விஷாலுக்கு பின்னடைவை தந்துவிட்டது. ஆர்கே நகர் தொகுதியில் போட்டியிடுவதற்காக முயன்றார். ஆனால் வேட்பு மனுவை சரியாக பூர்த்தி செய்யாததால், விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இதிலிருந்தே அவருக்கு அரசியல் அனுபவம் இல்லை என்று தெரிந்துவிட்டது.

கடனாளி: தான் தயாரித்த படங்களும் நஷ்டத்தை தந்துவிட்டது.. பல கோடி ரூபாய்க்கு கடனாளி ஆகிவிட்டார். இப்போது விஷாலை வைத்து படம் எடுக்கவே அனைவரும் அச்சப்படுகிறார்கள்.

தான் நடித்த படங்களும் அவருக்கு கைகொடுக்கவில்லை.. சொந்த வாழ்க்கையிலும் தோல்வியை சந்தித்தார்.. வரலட்சுமி சரத்குமாருடன் லிவிங் டூ கெதர் வாழ்ந்தார்.. இருவரும் திருமணம் செய்ய போவதாக சொன்னார்கள்.. ஆனால் என்ன நடந்ததோ தெரியவில்லை.. அந்த காதல் பிரேக் அப்ஆகிவிட்டது.

கும்கி ஹீரோயின்: பிறகு கும்கி நாயகி லஷ்மி மேனனை காதலித்தார்.. இது திருமணம் வரை சென்றது. ஆனால் லட்சுமி மேனனிடம் அவரது நெருங்கிய தோழிகள் விஷாலை பற்றி சொல்லவும், அவரும் விஷாலை விட்டு பிரிந்தார்.. பிறகு, ஸ்ரீரெட்டி என்ற தெலுங்கு நடிகை மிகவும் அசிங்கமாக விஷாலை பேசினார். ஆபாசமான புகார்களை சொன்னார்.. ஆனால், அவர்மீது எந்த நடவடிக்கையும் விஷால் எடுக்கவில்லை.

விஷாலுடைய பெற்றோர், ஆந்திராவிலுள்ள தொழிலதிபரின் மகளை தேர்ந்தெடுத்து நிச்சயதார்த்தம் செய்தனர். ஆனால், அதுவும் நின்றுவிட்டது. இப்போது வயது 50ஐ நெருங்கிவிட்டது. எப்போது திருமணம் நடக்கும் என்று தெரியவில்லை. போதைக்கு விஷால் அடிமையானார்.. 24 மணி நேரமும் போதையில் இருந்தார்..

நண்பர் வேதனை: இப்போது விஷாலின் நண்பர் ராஜா என்பவர் ஒரு பேட்டி தந்துள்ளார்.. அதில், "விஷாலின் உடல்நிலை மோசமானதற்கு இயக்குனர் பாலாதான் காரணம். அவன் இவன் படத்தில் மாறுகண் வேண்டும் என்பதற்காக ஒரு கண்ணை தைத்துவிட்டார்கள்.

அந்த படம் வெற்றி பெற்றது, ஆனால் கண் வலியால் அவதிப்பட்டார் விஷால். இதெல்லாம் தெரிந்துதான் பாலா செய்திருக்கிறார்.. தேவைப்பட்டால் இயக்குனர் பாலா மீது வழக்குதொடர்வேன்... விஷால் இன்னும் மோசமான நிலைமைக்கு போய்விடுவாரோ என்று பயமாக இருக்கிறது.. விஜயகாந்த் மாதிரி அவதிப்படுவரோ என்று பயமாக இருக்கிறது" என்றெல்லாம் ராஜா கூறியிருக்கிறார்.

வைரஸ் காய்ச்சல்: ஆனால் விஷாலின் குடும்ப டாக்டர் இதை வைரஸ் காய்ச்சல் என்றும், 2 மாதங்கள் முழு ஓய்வு எடுத்தால், பழைய நிலைமைக்கு வந்துவிடுவார் என்கிறார். இதையேதான் அப்போலோ டாக்டரும் சொல்கிறார்.. எது எப்படியோ, நட்சத்திர நாயகனாக மீண்டும் பழையபடி திரும்பி வந்து, பல படங்களில் விஷால் நடிக்க வேண்டும். அவரது உடல்நிலை விரைந்து குணமடைய இறைவனை பிரார்த்திப்போம்" என தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+