Biggboss Tamil season 8: 77 நாட்கள் கழித்து வெளியேறிய நடிகர் ரஞ்சித்துக்கு இத்தனை லட்சம் ஊதியமா?
சென்னை: பிக்பாஸில் இருந்து வெளியேறிய ரஞ்சித் இதுவரை வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? இவர் அந்த வீட்டில் இருந்த 77 நாட்களில் பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டிருந்தார்.
இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை விஜய் சேதுபதி நடத்தி வருகிறார். இதில் ரஞ்சித் போட்டியாளராக கலந்து கொள்கிறார் என்றதும் அவர் மீது நிறைய எதிர்பார்ப்புகளை ரசிகர்கள் வைத்திருந்தனர்.

ஆனால் அவர் வந்தது முதலே சரியாக விளையாடவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. திரைத்துறையில் நண்பன் கதாபாத்திரங்களிலும் வில்லன் கேரக்டர்களிலும் நடித்து வந்தவர் ரஞ்சித்.
இவர் நடிகை பிரியா ராமனை காதலித்து திருமணம் கொண்டார். ஆனால் இருவருக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டு பிரிந்துவிட்டனர்.
இவர் அண்மைக்காலமாக பாக்கியலட்சுமி சீரியலில் பழனிசாமி எனும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் கவுண்டம்பாளையம் என்ற படத்தையும் இயக்கியுள்ளார். அது அந்த அளவுக்கு கைக் கொடுக்கவில்லை. மாறாக கெட்ட பெயரைதான் கொடுத்தது.
இவர் அந்த பெயரை மாற்ற வேண்டும் என பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்தார். இதன் பிறகு ரசிகர்களுக்கு இவர் மீதிருந்த அபிப்ராயம் மாறிக் கொண்டே இருந்தது. ஆனால் பிக்பாஸ் வீட்டில் இவர் எந்த வேலையையும் செய்யாமல் இருந்து வந்தார். இந்த வாரம் நாமினேஷனில் இவருடன் மஞ்சரி, ராயன் உள்ளிட்டோர் இருந்தனர்.
மிக குறைவாக வாக்குகளை பெற்றதாக கூறி ரஞ்சித் தான் வெளியேறினார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. பிக்பாஸில் பங்கேற்கும் போட்டியாளர்களுக்கு அவர்களின் பிரபலத்திற்கேற்ப ஊதியம் நிர்ணயிக்கப்படுகிறது.
அதிலும் ஒரு நாளைக்கு இவ்வளவு என நிர்ணயித்து பிக்பாஸில் எத்தனை நாட்கள் இருந்தனரோ அத்தனை ஆயிரமோ லட்சமோ ஊதியம் வழங்கப்படுகிறது. இந்த வாரம் எவிக்ட்டான நடிகர் ரஞ்சித்திற்கு ஒரு நாளைக்கு ரூ 50 ஆயிரம் என ஊதியம் பேசப்பட்டது. அதன்படி இவர் இதுவரை 77 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்துள்ளார். எனவே இவருக்கு 38 லட்சம் ஊதியமாக வழங்கப்பட்டுள்ளது. இந்த பணத்தில் வரி செலுத்தியது போக, மீதமுள்ள பணம் தான் அவருக்கு கிடைக்கும்.
பிக்பாஸ் 8 வீட்டில் 24 போட்டியாளர்கள் இருந்தனர். இதில் வைல்ட் கார்டு மூலம் வந்த போட்டியாளர்களும் அடக்கம். இந்த 24 பேரில் முதல் ஆளாக வெளியேறியவர் ரவீந்தர். அடுத்து அர்ணவ், தர்ஷா குப்தா, சுனிதா, ரியா, வர்ஷினி, சிவா, ஆர் ஜே ஆனந்தி, சாச்சனா, சத்யா, தர்ஷிகா உள்ளிட்டோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். இவர்களில் தற்போது ரஞ்சித்தும் உள்ளார்.
பிக்பாஸ் வீட்டில் இப்போது அன்ஷிதா, அருண் பிரசாத், தீபக், ஜாக்குலின், ஜெஃப்ரி, மஞ்சரி, முத்துக்குமரன், பவித்ரா, ராணவ் , சவுந்தர்யா, விஷால் உள்ளிட்ட 12 பேர் உள்ளனர். இவர்களில் முத்துக்குமரன், ஜாக்குலின், சவுந்தர்யா, ராணவ் ஆகியோர் டஃப் கொடுத்து வருகிறார்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications