எதிர்நீச்சல் மாரிமுத்துக்கு சிலை.. அதே வேஷ்டி சட்டை.. திறந்து வைத்தது யார்?பக்கத்திலேயே அந்த சிலையும்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலின் மூலம் பிரபலம் அடைந்த நடிகர் மாரிமுத்துவிற்கு பாஜகவினர் சிலை வைத்திருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகராகவும் இயக்குனராகவும் ஜொலித்து வந்த மாரிமுத்து சில மாதங்களுக்கு முன்பு திடீரென்று மாரடைப்பு காரணமாக காலமானார்.

whose is the statue next to the statue of actor Marimuthu

இந்த நிலையில் விழுப்புரத்தில் நடிகர் மாரிமுத்துவிற்காக வைக்கப்பட்ட சிலையை பாஜகவினர் திறந்து வைத்திருக்கின்றனர். அது பற்றி பார்க்கலாம்.

ஒரு சிலருக்கு திறமை எவ்வளவு இருந்தாலும் எப்பவாவது தான் வாய்ப்புகள் சரியாக அமைந்து அவர்களுடைய திறமை பலருக்கும் தெரியவரும். அந்த மாதிரி தான் துணை இயக்குனராக இருந்து பல வருடங்களாக போராடி இயக்குனராக மாறி அதை தொடர்ந்து நடிகராகவும் நடித்து வந்த மாரிமுத்துவிற்கு சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலின் மூலமாக புகழ் என்ற வெளிச்சம் பெரிய அளவில் கிடைத்தது.

ஆனால் அந்த வெளிச்சத்தில் அதிக நாட்கள் அவர் ஜொலிக்க முடியாமல் போய்விட்டது. காலத்தின் கணக்கிலிருந்து யாரும் தப்ப முடியாது என்று சொல்வது போலத்தான் புகழின் உச்சத்தில் இருந்த மாரிமுத்துவிற்கு திடீரென்று டப்பிங் ஹாலில் இருந்தபோது நெஞ்சுவலி ஏற்பட அதனால் அவரே மருத்துவமனைக்கு சென்று இருந்த நிலையில் அங்கு எதிர்பாராத விதமாக அவருடைய உயிர் உடம்பை விட்டு பிரிந்து இருந்தது.

whose is the statue next to the statue of actor Marimuthu

அவர் மறைந்திருந்தாலும் அவரை இப்போதும் ரசிகர்கள் அதிகமாக தேடிக் கொண்டிருக்கின்றனர். எதிர்நீச்சல் சீரியலில் அவர் இல்லாத காட்சிகள் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை என்று தொடர்ச்சியாக கருத்துக்களை பலர் தெரிவித்து வருகின்றனர். மாரிமுத்து நடிகர் ரஜினிகாந்தின் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார்.

அதை தொடர்ந்து கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2, சூர்யாவின் கங்குவா போன்ற பல திரைப்படங்களில் முக்கியமான கேரக்டரில் நடித்துக் கொண்டிருந்த நிலையில் அவர் மரணம் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. இந்த நிலையில் யாரும் எதிர் பார்க்காத வகையில் தற்போது விழுப்புரத்தில் நடிகர் மாரிமுத்துவிற்கு பாஜகவினர் சிலை வைத்திருக்கின்றனர்.

whose is the statue next to the statue of actor Marimuthu

அதுமட்டுமல்லாமல் பிரதமர் மோடியின் தாயார் ஹீரோபென் மோடிக்கும் சிலை வைத்திருக்கிறார்கள். தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்திய பிரதமராக இருக்கும் நரேந்திர மோடியின் தாயார் கடந்த ஆண்டு இறுதியில் தான் உடல் நலக்குறைவின் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார். இந்த நிலையில் நடிகர் மாரிமுத்துவிற்கும் நரேந்திர மோடியின் தாயாருக்கும் வைத்த சிலையை பாஜகவினர் திறந்து வைத்து அந்த புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகிறார்கள். தற்போது இது வைரலாகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+