கோடி கோடியாய் தரும் "பண முதலைகள்".. தூக்கிவிட்ட தமிழ் தயாரிப்பாளர்களை மறந்த டாப் நடிகர்கள்: பிரபலம்
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள தயாரிப்பாளர்களுக்குள்ளேயே ஒரு ஒற்றுமை இல்லை, அதனை சரிசெய்யாமல் ஒன்றாக இருக்கும் பெஃப்சி (Film Employees Federation of South India) அமைப்பைப் பிரிக்க எண்ணுகிறார்கள். எங்களை அழிக்க புதிதாக ஒரு அமைப்பை உருவாக்க எண்ணுகிறார்கள், அதற்கு நாங்கள் ஒத்துழைக்க மாட்டோம் என்று தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி வேதனையுடன் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இதுகுறித்து பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு கருத்து தெரிவித்துள்ளார்.
Media Circle என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பாலாஜி பிரபு, "ஆர்கே செல்வமணி சொல்வது 100 சதவீதமும் சரி.. தமிழ் நடிகர்கள் அட்டகாசம், அட்ராசிட்டி உண்மையிலேயே நடந்து வருகிறது.. ரஜினி, கமல், விஜய், அஜித், தனுஷ், சிம்பு, சூர்யா, போன்ற உச்ச நடிகர்களை ஆரம்பத்தில் வைத்து படம் எடுத்தது தமிழ் தயாரிப்பாளர்கள்தான்..

தமிழ் தயாரிப்பாளர்கள்
ஆனால், தங்களை உயர்த்திவிட்ட தயாரிப்பாளர்களுக்கு, பல வருட காலமாக உள்ள தமிழ் தயாரிப்பாளர்களுக்கு இந்த நடிகர்கள் யாருமே இப்போது படம் கொடுப்பதில்லை.. கன்னடத்தில் பெரிய தயாரிப்பு நிறுவனத்துக்கு தன்னுடைய கடைசி படத்தை தந்துள்ளார் விஜய்.. விஜய்யை வளர்த்துவிட்டது தமிழ் தயாரிப்பாளர்களும், தமிழ் மக்களும்தானே? ஒவ்வொரு படத்தையும் தமிழ் தயாரிப்பாளர்கள் எடுத்ததால்தான், விஜய்யால் இந்த உச்சத்துக்கு வர முடிந்தது..
அஜித்தை எடுத்துக் கொண்டால், அமராவதி முதல் அவரை கைதூக்கி கொண்டுவந்தது தமிழ் தயாரிப்பாளர்கள்தான்.. இப்போது தெலுங்கு தயாரிப்பாளர்களுக்கு தன்னுடைய படத்தை தந்துள்ளார். ஏன் தமிழ் தயாரிப்பாளர்களே இல்லையா? அல்லது தமிழ் தயாரிப்பாளர்கள் கையாலாகத்தனமாக இருக்கிறார்களா?
பண முதலைகள் சவாரி
ஆரம்ப காலங்களில் யார் முதுகில் சவாரி செய்தீர்களோ, அவர்களை தள்ளிவிட்டுவிட்டு, பெரிய பெரிய பண முதலைகளிடம் காசுகளை வாங்கிக்கிட்டு படம் செய்து தர ஆரம்பித்துவிட்டார்கள்.. இது மிகப்பெரிய தவறு.. இதை தட்டிக்கேட்டாலும் பதிலே சொல்வதில்லை. தயாரிப்பாளர்கள் பேரம் பேசுவார்கள் என்று நினைக்கிறார்கள்.. அப்படின்னா, அன்றைக்கே தெலுங்கு, கன்னட தயாரிப்பாளர்களுக்கு படங்களில் இந்த நடிகர்கள் நடிக்க வேண்டியதுதானே?
ஹைதராபாத் ஷூட்டிங்
ஸ்டுடியோவை எடுத்துக் கொண்டாலும் பெரிய பெரிய நடிகர்கள், ராமோஜிராவ் ஸ்டுடியோவில் எடுக்கிறார்கள்.. 150 நாள் ஹைதராபாத்தில் சூட்டிங் என்றால், அங்குள்ள தெலுங்கு திரைப்பட தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் தமிழ்நாட்டிலுள்ள பெப்சி தொழிலாளர்களுக்கு வேலைகிடைக்காமல் போய்விடுகிறது.
மோகன்லாலும், மம்முட்டியும் இங்கே வந்து ஷூட்டிங் எடுக்குறாங்களா? பவன் கல்யாண், சிரஞ்சீவி சென்னையில் ஷூட்டிங் எடுக்குறாங்களா? ஷாருக்கான், சல்மான்கான் இங்கே வந்து ஷூட்டிங் எடுக்ககுறாங்களா? தமிழ் நடிகர்கள் இனியாவது தமிழ்நாட்டில் ஷூட்டிங் வைக்க வேண்டும்.. தமிழ் திரைப்பட தொழிலாளர்களுக்கு அப்போதுதான் வேலை கிடைக்கும்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications