ஆண் பாவம் படத்தில் கொல்லங்குடி கருப்பாயியை நடிகர் பாண்டியராஜன் நடிக்க வைத்தது ஏன்?
சென்னை: ஆண்பாவம் படத்தில் நடிகர் பாண்டியராஜன், கொல்லங்குடி கருப்பாயியை நடிக்க வைத்தது ஏன் என்பதை தெரிந்துகொள்ளுங்கள். இவர் புகழ் பெற்றது எப்படி என்பதையும் தெரிந்துகொள்ளலாம்.
இதுகுறித்து செல்வன் அன்பு என்பவர் கூறியிருப்பதாவது: பாண்டியராஜனின் படங்கள் வந்த புதிதில் ஒரு Subtle காமெடி இருக்கும். அதை எடுத்துட்டா படத்துல ஒண்ணுமே இருக்காதோன்னு தோணும். அவர் படங்களில் ஆண்பாவம் அழகான படம். மனைவி ரெடி படத்தில் அவரோட அந்த காமெடி ஃப்ளேவர் குறைஞ்சதாலும் கதையும் இல்லாததாலும் சுமாராத்தான் போச்சு.

பிறகு வந்த 'ஏட்டிக்கி போட்டி' படம் முழுக்க பாண்டியராஜன் ஸ்டைல் காமெடி இருந்தும் அந்தப் படம் ஏன் ஓடலைன்னு தெரியல. அவர் ஒரே மாதிரி டெம்ப்ளேட்டா சில காரியம் செய்தது ரசிகர்களுக்கு பிடிக்கலையோன்னு தோணுது.
பாட்டிகளை வைத்து காமெடி செய்வது பாண்டியராஜனுக்கு ரொம்ப இஷ்டம். அதனால் தான் விருதாம்பாள் பாட்டியோடு பாண்டியராஜனின் இந்த மணமக்கள் ஸ்டில் அன்று புகழ் வாய்ந்த ஒன்று.
அது குருநாதர் பாக்யராஜிடமிருந்து வந்திருக்கலாம். பாக்யராஜ் தூறல் நின்னு போச்சு படத்தில் மீனாட்சிப் பாட்டியை வைத்து செமயா சிரிக்க வைத்திருப்பார். துணை நடிகையாயிருந்த மீனாட்சிப் பாட்டி அறியப்பட்ட நடிகையானது பாக்யராஜால் தான்.
பாண்டியராஜன் ஆண்பாவம் படத்தில் கொல்லங்குடி கருப்பாயி என்கிற நாட்டுப்புற பாடகியை அறிமுகப்படுத்தினார். கொல்லங்குடி என்கிற கிராமத்தில் பிறந்த கருப்பாயி வயல்வேலை செய்யும் போது பாடி பழகி அடுத்தடுத்த ஊர்களில் பாடி புகழ்பெற்றார்.
இவரை பேட்டிக்கண்ட ஆல் இந்தியா ரேடியோ பின்னர் இவரை நிரந்தரப் பாடகியாக்கியது. அதன் பின் சினிமாவில் அறிமுகமாக பணம், புகழ் வந்தது. ஆனால் எதிர்பாராவிதமாக ஒரு பாட்டு ரெக்கார்டிங் போகும் போது கருப்பாயியின் கணவர் அவர் கண்முன்னே இறந்துபோக கருப்பாயி படுத்த படுக்கையானார். மகளும் ஒரு விபத்தில் இறக்க கருப்பாயி சில இளைஞர்கள் உதவியால் வாழ்கிறார். கலைமாமணி அவர்.
பாண்டியராஜனின் காமெடி தனித்துவமாக போய்க் கொண்டிருந்த போது வெளி இயக்குனர்களின் படத்தில் நடிக்கத் தொடங்கியது பாண்டியராஜனின் தனித்துவத்தை கூர் மழுங்கச்செய்து விட்டது. வெளி இயக்குனர்கள் வழக்கமான சண்டை ஹீரோவாக அவரை மாற்றி விட்டனர்.
விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டி எடுத்த ஜாடிக் கேத்த மூடி படம் பாண்டியன், பாண்டியராஜன் நடிக்க ஆவலோடு மற்றொரு ஆண்பாவம் எனப் பார்க்கச் சென்ற படம். ஆனால் வரதட்சணை கொடுமை என நம்மை கொடுமை செய்துவிட்டார்கள். விஷால் மற்றும் அவர் சகோதரர் விக்ரம் சிறுவர்களாக இந்தப் படத்தில் ஒரு பாடல் காட்சியில் பாண்டியராஜனோடு நடித்தார்கள்.
மலையாள காமெடிகளான நாடோடிக் காற்று(கதாநாயகன்), மேலே பரம்பில் ஆண்வீடு(வள்ளி வரப்போறா), நின்னிஷ்டம் என்னிஷ்டம்(நீலக்குயில்), மழவில் காவடி(சுப்ரமண்ய சாமி) போன்ற படங்கள் ஒரிஜினல் காமெடியும் இல்லாமல் பாண்டியராஜனின் ஸ்டைல் காமெடியும் இல்லாமல் சிதைந்து போயின.
பாக்யராஜ் அவருக்கு எழுதிய தாய்க்குலமே தாய்க்குலமே படத்தில் பாண்டியராஜனை நடிக்க வைத்த போது அது பாக்யராஜை பிரதிபலிப்பதாகவே இருந்தது. கதையால் அப்படம் வெற்றி பெற்றது. பாண்டியராஜனின் இந்த மாற்றங்கள் அவரை வீழ்த்திவிட்டன எனச்சொல்லலாம். அவரிடம் இருந்த அழகான காமெடிசென்ஸ் இயக்குனர் எங்கோ மறைந்தே போய்விட்டார்.
ஆண்பாவம் வீட்டில் வி.கே.ராமசாமி, பாட்டி, பாண்டியராஜன் சகோதரர்கள் பேசிக்கொள்வதெல்லாம் அட்டகாசமான காட்சிகள். ஜனகராஜின் ஹோட்டல் காமெடி இப்போதும் வயிறு வலிக்க சிரிக்க வைத்தவை. உதவி இயக்குனர் ரமேஷ்கன்னா என்பதும் சிறப்பு.
எனக்குத் தெரிந்து அடுத்தடுத்த படங்களில் வேறு வேறு இயக்குனர்களோடு நடித்த நடிகர்களில் முரளிக்குப்பின் பாண்டியராஜன் இருப்பார்.
அது கூட வீழ்ச்சிக்கு காரணமாகலாம்.
ஆனால் காமெடி என்றால் பாண்டியரஜனை ஒதுக்கி வைத்து விட்டு எழுத முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications