"பணம் கேட்டு அடிக்கிறார்"! கணவர் மீது மேக்கப் ஆர்டிஸ்ட் அஸ்மிதா புகார்! இன்ஸ்டா பிரபலம் விஷ்ணு கைது
சென்னை: மனைவியும் மேக்கப் கலைஞருமான அஸ்மிதா கொடுத்த புகாரின் பேரில் யூடியூபர் மற்றும் இன்ஸ்டாகிராம் பிரபலம் விஷ்ணு கைது செய்யப்பட்டுள்ளார். சமூகவலைதளம் மூலம் பழகிய பெண்ணிடம் தவறாக நடந்த விவகாரத்தில் விஷ்ணு ஏற்கெனவே சிக்கியிருந்தார்.
சமூகவலைதளங்களில் மிகவும் பிரபலமானவர் மேக்கப் ஆர்ட்டிஸ்ட் அஷ்மிதா. இவர் சொந்தமாக மேக்கப் அகாதெமி வைத்துள்ளார். இவர் பிரபலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் சென்று திருமணம் மற்றும் விசேஷங்களுக்கு மேக்கப் செய்து வருகிறார்.

தமிழகத்தில் இருக்கும் மேக்கப் ஆர்டிஸ்டுகளில் இவர் மிகவும் காஸ்ட்லியானவர் என சொல்லப்படுகிறது. இவருடைய கணவர் விஷ்ணுகுமார். இவரும் அரசியல் நிகழ்வுகள் குறித்து பேசி வீடியோக்கள் பதிவிடுவது, டான்ஸ் ஆடுவது, என வீடியோக்களை போடுகிறார்.
நடிகர் விஜய் கட்சி
அது போல் இவர் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் உள்ளார். இவரும் இன்ஸ்டாவில் பிரபலம்தான். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது நண்பனின் சகோதரிக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் வகையில் வாட்ஸ் ஆப் மெசேஜ்களை அனுப்பியதாகவும் அவரை நேரில் பார்க்க சென்ற போது நான்கைந்து பேர் விஷ்ணுவை தாக்கியதாகவும் வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் பரவியது.
மேக்கப் ஆர்ட்டிஸ்ட்
இந்த நிலையில் தனது மனைவியும் மேக்கப் ஆர்ட்டிஸ்டுமான அஸ்மிதாவுக்கும் ஏடிஜிபி ஒருவருக்கும் தொடர்பிருப்பதாகவும் தப்பான படங்களில் மனைவி நடித்தார் என்றும் விஷ்ணு பேட்டியும் அளித்திருந்தார். இந்த நிலையில்தான் விஷ்ணு தன்னை பணம் கேட்டு மிரட்டி அடித்து துன்புறுத்துவதாக விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அஸ்மிதா புகார் அளித்துள்ளார்.
விஷ்ணு கைது
அந்த புகாரின் பேரில் விஷ்ணுவை போலீஸார் கைது செய்தனர். நம்பிக்கை மோசடி, பெண் வன்கொடுமை, கொலை மிரட்டல் விடுத்தது, சமூகவலைதளங்களில் பெண்ணை தவறாக சித்தரித்தது என 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
யார் இந்த அஸ்மிதா
அஸ்மிதா 10ஆம் வகுப்புடன் படிப்பை நிறுத்திக் கொண்ட நிலையில் விஜேவாக பணியாற்றினார். இவருக்கு சிறுவயதில் இருந்தே மேக்கப் விஷயத்தில் ஆர்வம் அதிகமாக இருந்தது. இதனால் தனக்கு தெரிந்தவர்கள், தோழிகளுக்கு மேக்கப் போட்டு பயிற்சி எடுத்து கொண்டாராம்.
பியூட்டி கோர்ஸ்
கடந்த 2017ஆம் ஆண்டு ஒரு அகாதெமியில் பியூட்டி கோர்ஸ் படித்தார். இதையடுத்து அஸ்மிதா அகாதெமி என்ற பெயரில் அவர் மேக்கப் கிளாஸ் எடுத்து வருகிறார். அது போல் அழகு சாதன பொருட்களையும் அவர் விற்பனை செய்து வருகிறார்.
கடின உழைப்பு
தனது சொந்த முயற்சி, கடின உழைப்பால் அவர் உயர்ந்திருப்பதாக பல பேட்டிகளில் தெரிவித்திருந்தார். விஷ்ணுவும் அஸ்மிதாவும் ஒரு ஆல்பத்தில் நடித்த போது காதல் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.
காதல்
இந்த நிலையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து விவாகரத்து பெற்று பிரிந்தனர். அது குறித்து விஷ்ணு தனது சமூகவலைதளங்களில் வெளிப்படையாகவே பதிவிட்டிருந்தார்.
விவாகரத்து
இந்த நிலையில் ஒரு சில மாதங்களில் இருவரும் கோயிலில் வைத்து திருமணம் செய்து கொண்டு மீண்டும் ஒன்று சேர்ந்த வீடியோ வெளியானது. அப்போது இருவரும் ஒரு ஆல்பத்திலும் நடித்திருந்தனர். இந்த ஆல்பம் பாடல் புரமோஷனுக்காக விவாகரத்து நாடகமாடியதாக இவர்கள் மீது விமர்சனங்கள் உண்டு.
மீண்டும் திருமணம்
எனினும் பிரிந்திருந்த போது ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டதாகவும் ஏன் இன்னொரு வாய்ப்பை கொடுக்கக் கூடாது என இருவரும் யோசித்ததாகவும் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் அஸ்மிதா மூன்றாவது முறை கர்ப்பமானார். அவருக்கு தற்போது குழந்தையும் பிறந்துவிட்டது.
ஆன்லைன் மோசடி
சில மாதங்களுக்கு முன்பு விஷ்ணு ஒரு ஆன்லைன் டிரேடிங் நிறுவனம் மூலம் மோசடியில் ஈடுபட்டதாக செய்திகள் வெளியாகின. அதைத் தொடர்ந்து தற்போது தனது நண்பனின் சகோதரிக்கு தவறாக மெசேஜ் அனுப்பி அடி வாங்கியிருந்தார். இந்த நிலையில் தன் கணவர் மீது அஸ்மிதாவே புகார் கொடுத்து அவரை கைது செய்ய வைத்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications