"டிரஸ்ஸூக்குள்".. நம்பவே முடியல.. கிளியை சிக்கவைத்த "குருவிகள்".. பேஸ்ட்டாக மாறிய உலோகம்.. அடேங்கப்பா
உள்ளாடையில் தங்கம் கடத்தி வந்த 19 வயது ஷகலாவிடம் விசாரணை நடந்து வருகிறது
திருவனந்தபுரம்: உள்ளாடைக்குள் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான தங்கத்தை இளம்பெண் கடத்தி வந்துள்ளார்.. இவர் எப்படி போலீசில் சிக்கினார் என்பது குறித்த கூடுதல் தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது..
கேரள மாநிலம் காசர்கோட்டை பகுதியை சேர்ந்தவர் மரியம் ஷகலா.. துபாயிலிருந்து கரிப்பூர் ஏர்போர்ட்டுக்கு வந்துள்ளார்... இவர் தன்னுடைய உள்ளாடைக்குள் ஒரு கோடி மதிப்புடைய தங்கத்தை கடத்தி வந்துள்ளார்.. மொத்தம் 1884 கிராம் தங்கமாம்..
கேரள மாநிலம், காசர்கோட்டைச் சேர்ந்தவர் இந்த மரியம் ஷகலா.. இவரது குடும்பத்தினர் துபாயில் இருக்கிறார்கள்.. அவர்களை பார்ப்பதற்காக விசிட்டர்ஸ் விசாவில் சென்றுவிட்டு விமானம் மூலம் திரும்பி வந்திருக்கிறார்.

டெர்மினல் பார்க்கிங்
கோழிக்கோடு கரிப்பூர் ஏர்போர்ட் வந்த அவர் சுங்கத்துறை உள்ளிட்ட அனைத்து சோதனைகளையும் கடந்து விமான நிலையத்தைவிட்டு வெளியேயும் வந்துவிட்டார். இந்த சூழலில்தான், மரியம் ஷகலா தங்கம் கடத்திக்கொண்டு வந்திருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.. அதனால், ஷகலாவை அதிகாரிகள் தேடி பார்த்தனர்.. அதற்குள் டெர்மினல் பார்க்கிங் பகுதிக்கு வேகவேகமாக அவர் வெளியேறி கொண்டிருப்பதை பார்த்ததும், அதிகாரிகள் அவரை சோதனைக்கு அழைத்து வந்தனர்.. அவரது லக்கேஜ்களையும் பரிசோதித்தனர்.. ஆனால் சோதனையில் அவரிடம் எதுவும் சிக்கவில்லை... இதனால் அதிகாரிகள் குழம்பி போனார்கள்..

லக்கேஜ்
மரியம் ஷகலாவின் பெயரை குறிப்பிட்டு சொல்லியே கடத்தல் பற்றி தகவல் வந்ததால், மறுபடியும் மறுபடியும் அவரது லக்கேஜ்ஜையே சோதனை செய்தனர்.. மரியம் ஷகலாவும், தங்கம் எதுவும் தன்னிடம் கிடையாது, தனக்கும் தங்கம் கடத்தல்காரர்களுக்கும் எந்தவித தொடர்பு இல்லை என்று திரும்ப திரும்ப சொல்லி கொண்டிருந்தார்.. அதற்கு பிறகு, தங்களுக்கு கிடைத்த ரகசிய தகவல் உண்மைதானா? என்பதை போலீஸார் உறுதிப்படுத்தினர்.. இதற்கு பிறகுதான், பெண் போலீஸார் மூலம் மரியம் ஷகலாவை தனி ரூமுக்கு அழைத்து சென்று ஆடைகளை பரிசோதித்தனர்.

பேஸ்ட் தங்கம்
அதில் உள்ளாடையுடன் தைக்கப்பட்ட நிலையில் தங்கம் மறைத்து வைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது... தங்கத்தை "பேஸ்ட்" போல மாற்றி, அதை 3 பாக்கெட்டுகளில் அடைத்து, அதை உள்ளாடைக்குள் வைத்து தைத்து மறைத்து எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கு பிறகுதான் உண்மையை ஒப்புக் கொண்டார் ஷகலா.. வெளிநாட்டிலிருந்து தங்கம் கடத்தப்பட்ட வழக்கு என்பதால் அது சுங்கத்துறைக்கு மாற்றப்பட்டதையடுத்து, சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணையும் ஆரம்பமானது. இந்த தங்கத்தை இவரது நண்பர் ஒருவர், கொடுத்து அனுப்பினாராம்.. இந்த தங்கம் கடத்தி வருவதற்கு ரூ.60,000 ரூபாய் பணம் தருவதாகவும் சொல்லி இருக்கிறார்கள்..

ஹைலைட்
ஆனால், ஷகலா தங்க கடத்தலில் ஈடுபடுவதும் இதுதான் முதல்முறையாம்.. இதில் ஹைலைட் என்னவென்றால், தங்கம் கடத்தலில் ஈடுபட்டவர்கள்தான், போலீஸாருக்கே இந்த விஷயத்தை ரகசியமாக சொல்லி உள்ளனர்.. அதனால்தான், இந்த கடத்தலை எளிதாக கண்டறிய முடிந்திருக்கிறது என்கிறார்கள்.. ஏனென்றால், உலோகத்தின் அடர்த்தியை குறைக்கும் திரவத்தில் கலந்து, அந்த தங்கத்தை கொண்டுவந்திருக்கிறார்.. அதனால்தான் சுங்கத்துறையின் மெட்டல் டிடக்ட்டரில்கூட, மரியம் ஷகலா சிக்காமல் தப்பித்துள்ளார். விமானம் மூலம் தங்கம் கடத்தலில் சிக்கிய, மிக மிக வயது குறைந்தபெண் இவர்தானாம்..

சின்ன பெண்
இப்போதெல்லாம் தங்கத்தை கடத்துவதற்கு பெண்களைதான் கடத்தல் கும்பல்கள் அதிகம் பயன்படுத்துகிறார்கள் என்கிறார் போலீசார்.. ஆனால், துபாயில் ஒரு இன்டர்வியூ இருப்பதாக வீட்டில் பொய்சொல்லிவிட்டு, துபாயில் உள்ள உறவினர்களை சந்தித்து வருவதாகவும் சொல்லி, விசிட்டர்ஸ் விசாவில் வந்துள்ளார் ஷகலா.. இப்போது கடத்தலில் சம்பந்தப்பட்டிருக்கும் மற்றவர்களை அடையாளம் காண ஷகலாவிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, கூடுதல் விசாரணைக்காக மேல்விவரம் உள்ள அறிக்கை சுங்கத்துறையிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
-
காலையில் கஞ்சா பால்.. இட்லிக்கு கஞ்சா சட்னி.. பெட் ரூம் முழுக்க 70 கஞ்சா செடிகள்.. மிரண்ட போலீஸ் -
காதல் திருமணம் செய்துக்கொண்ட மகள்! பெட்ரோல் குண்டு வீசிய பாசக்கார தந்தை! நெல்லையில் ஷாக்! -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
மியூசிக்கிற்கு தடை.. பெண்களுக்கு ஹிஜாப் கட்டாயம்.. தாலிபான்கள் போல் ரூல்ஸ் போட்ட கேரளா ஜிம் -
ரூ.5.07 லட்சம் கோடி கடனில் கேரளா அரசு.. வெள்ளை அறிக்கையில் ‘திடுக்'.. தமிழகத்தை விட குறைவு தான் -
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
CBSE உள்பட தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை கேட்டிலேயே எழுதி வைக்க வேண்டும்.. தமிழகத்தில் உத்தரவு












Click it and Unblock the Notifications