வாழைத்தோப்பில்.. பெண்ணை கட்டிப்பிடித்து, கொடூரமாக தாக்கி 15 வயது சிறுவன் செய்த பகீர்.. அரண்டு போன கேரளா
21 வயது பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற சிறுவனை போலீசார் கைது செய்தனர்
திருவனந்தபுரம்: 15 வயது சிறுவன் ஒருவன், 21 வயது பெண்ணை தோப்புக்குள் கடத்தி சென்று, கை கால்களை கட்டி, கழுத்தை நெரித்து பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் கேரளாவில் தூக்கி வாரி போட்டுள்ளது.
கேரளாவில் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள கொன்டோட்டி என்ற இடத்தை சேர்ந்தவர் அந்த பெண்.. 21 வயதாகிறது.. சம்பவத்தன்று கம்ப்யூட்டர் கிளாஸுக்கு சென்று கொண்டிருந்தார்.
அவருக்கு பின்னாடியே 15 வயது சிறுவன் சென்றான்.. ஆனால் அந்த பகுதியில் ஆள் நடமாட்டம் அவ்வவாக இல்லாததால், நோட்டமிட்ட சிறுவன், திடீரென முன்னால் சென்று கொண்டிருந்த பெண்ணை கட்டிப்பிடித்தான்..

துப்பட்டா
பிறகு பலமாக தாக்கினான்.. இதில் அந்த பெண் நிலைகுலைந்து தடுமாறினார்.. ஆனால் அதற்குள் பக்கத்தில் இருந்த வாழை தோப்புக்குள் அவரை தரதரவென சிறுவன் இழுத்து சென்றிருக்கிறான். பிறகு, அந்த பெண்ணின் துப்பட்டாவை எடுத்து, அவரது கை, கால்களை சேர்த்து கட்டினான்.. கீழே கிடந்த கல்லை எடுத்து தலையில் பலமாக தாக்கினான்.. பிறகு கழுத்தையும் நெரித்தான்..

பலாத்காரம்
கடைசியில், பலாத்காரம் செய்ய முயன்றுள்ளான்... ஆனால் அந்த பெண், சிறுவனிடம் கடுமையாக போராடி அங்கிருந்து தப்பி, அருகில் இருந்த வீட்டிற்குள் தஞ்சம் புகுந்தார்... அந்த வீட்டில் இருந்த பெண், உதவி கேட்டு கூக்குரல் எழுப்பியதை அடுத்து, அப்பகுதி கவுன்சிலர் உமர் பரூக் என்பவர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார்...

போட்டி
சிறுவனின் அங்க அடையாளங்கள் குறித்து பெண் சொன்ன தகவல்களின் அடிப்படையில் போலீசார் தப்பி ஓடிய சிறுவனை கைது செய்தனர்... கொன்டோட்டியை சேர்ந்தவனாம் அந்த சிறுவன்.. 10-ம் கிளாஸ் படித்து வருகிறானாம்.. மாநில அளவிலான ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டிகளிலும் பங்கேற்றவன் என்பது தெரியவந்துள்ளது... இறுதியில் சம்பந்தப்பட்ட சிறுவனை பிடித்து வழக்குப் பதிவு செய்தனர்...

கைது
ஆனால் 15 வயது என்பதால் கைது செய்ய முடியாது என்பதால், சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காப்பகத்தில் சேர்த்தனர்... இவ்வளவையும் செய்தது 15 வயது சிறுவனா என்ற அதிர்ச்சியில் அந்த மாநிலம் உறைந்து போயுள்ளது.. அனைவரையும்விட அதிகம் அதிர்ச்சிக்குள்ளானது அந்த பாதிக்கப்பட்ட பெண்தான்.. அதனால் அவரிடம் உடனடியாக விசாரணை நடத்த முடியவில்லை.. சிகிச்சையும் நடந்து வருகிறது.. இயல்பு நிலைமைக்கு திரும்பிய பிறகே விசாரணை நடத்தக்கூடும் என்று மாவட்ட எஸ்பி தெரிவித்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications