மஞ்சும்மல் பாய்ஸ் வைத்த ஆப்பு! 5 வருட வசூல் கணக்கை நோண்டும் ஈடி அதிகாரிகள்
கேரளா: தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரண்டு மொழிகளில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் மஞ்சும்மல் பாய்ஸ் படத் தயாரிப்பாளர்களிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதுடன் கடந்த 5 ஆண்டுகளாக மலையாள திரைப்பட உலகில் வசூல் சாதனை செய்த படங்களைப் பற்றி வரவு செலவு கணக்குகளை ஈடி திரட்ட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மலையாளத்தைத் தொடர்ந்து தமிழில் வெளியான திரைப்படம் மஞ்சும்மல் பாய்ஸ். கடந்த பிப்ரவரி மாதம் வெளியான இந்தப் படம் மிகப் பெரிய ஹிட் ஆனது. அந்தப் படத்தைப் பார்க்கத் தமிழ் ரசிகர்கள்தான் ஊட்டியில் உள்ள குணா குகைக்குப் படையெடுத்து வந்தார்கள். அந்தளவுக்கு அந்தக் குகை தமிழ் ரசிகர்களுடன் ஒன்றிப் போனது. அதற்கு கமல்ஹாசனின் 'குணா'தான் காரணம். அவரது படத்தில் இடம்பெற்ற கொடைக்கானல் குகைதான் இந்த மலையாளப் படத்தின் மைய கதைக் கரு.

இது 2006 ஆம் ஆண்டு நடந்த ஒரு உண்மையான கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது என்று இப்படத்தின் இயக்குநர் உட்படப் பலரும் பேசி இருந்தனர். ஆகவே படத்தில் காட்டப்பட்டது போல போலீஸ்காரர்கள் நிஜத்தில் ரியல் மஞ்சும்மல் பாய்ஸை தாக்கியது குறித்து சமூக ஆர்வலர் வழக்குத் தொடுத்திருந்தார். அதனை அடிப்படையாகக் கொண்டு அந்தச் சம்பவம் உண்மையா என்பது பற்றி தமிழ்நாடு அரசு விசாரணை செய்ய அறிவித்திருந்தது.
இதனிடையே இந்தப் படம் வெளியானதிலிருந்து சமூக வலைத்தளங்களில் பலரும் மலரும் நினைவுகளாக தங்கள் மனதில் தங்கியிருக்கும் குணா குகை பற்றிய நினைவுகளை நிழற்படங்களாகப் போட்டுப் பகிர்ந்து வந்தனர். அந்தளவுக்குத் தமிழ் ரசிகர் மனதில் மஞ்சும்மல் பையன் திரைப்படம் ஒரு காவியம் போல இடம்பெற்றுவிட்டது. அதை உணர்ந்த படக்குழு அப்போது நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து வாழ்த்தும் பெற்றிருந்தது.
இரண்டு மொழிகளில் சூப்பர் டூப்பர் ஹிட் இந்தப் படம் பல மோடிகளை வசூல் செய்ததாகப் பரவலாகச் செய்திகள் வெளியாகின. இந்நிலையில்தான் 'மஞ்சும்மல் பாய்ஸ்' வசூல் பற்றிய சர்ச்சை எழுந்த நிலையில், கடந்த 5 ஆண்டுகள் முன்புவரை மலையாள பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த படங்கள் எவ்வளவு வசூல் செய்தது என்பது பற்றிய முறையான விசாரணையை அமலாக்கத்துறை துவங்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து ஆங்கில ஊடகம் டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வெளியாகி உள்ள செய்தியின்படி, கடந்த ஐந்து ஆண்டுகளில் கேரள திரை உலகில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த படங்களின் வரவு செலவு விவரங்களை அமலாக்கத்துளை திரட்டி வருவதாகத் தெரிகிறது. கேரளாவின் தியேட்டர் தொழிலில் நிறையக் கறுப்புப் பணப் பரிவர்த்தனை நடைபெற்று வருவதாக 2 இரண்டு திரைப்படத் தயாரிப்பாளர்கள் வெளிப்படையாகப் பேசி இருந்தனர். அதனடிப்படையில் இந்த விசாரணை தூண்டப்பட்டுள்ளது என்றும் சொல்லப்படுகிறது.
இந்த ஆண்டு தொடங்கியது முதல் மலையாள திரைத்துறையில் வசூல் ரீதியாக நல்ல முன்னேற்றத்தை அடைந்துள்ளது.கடந்த ஐந்து மாதங்களில் பாக்ஸ் ஆபிஸ் வசூல் மட்டுமே எவ்வளவு தெரியுமா? சுமார் ரூ.720 கோடியை எட்டி உள்ளதாகக் கூறப்படுகிறது. ' மஞ்சும்மல் பாய்ஸ்' வெற்றி படமாக ரசிகர்களை நம்ப வைப்பதற்காக இந்தப் படத்துடன் தொடர்புடைய பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரங்களை உயர்த்தி காட்டியதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதனைத் தொடர்ந்து, மலையாளத் திரையுலகின் வசூல் கணக்குகள் குறித்து அமலாக்கத்துறை (ED) விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளது.
சந்தேகத்திற்குரிய பண மோசடி நடவடிக்கைகள் மீதான விசாரணையின் ஒரு பகுதியாகப் படத்தின் தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களின் வங்கிக் கணக்குகளை முடக்குவதற்கு ED சட்ட ஆலோசனையை நாடி உள்ளது என்று மலையாள மனோரமா செய்தி வெளியிட்டுள்ளது. மலையாள திரையுலக இந்த ஆண்டு வெளியான மஞ்சும்மல் பாய்ஸ், ஆவேசம், ஆடுஜீவிதம், பிரேமலு ஆகிய நான்கு படங்களும் தலா ரூ.100 கோடியைத் தாண்டி வசூல் செய்துள்ளது.
இதற்கிடையில் தான், 'மஞ்சும்மல் பாய்ஸ்' தொடர்பான வசூல் கணக்கு வழக்கு விவரங்களை பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) கீழ் விசாரணை நடத்த ஈடி களம் இறங்கியுள்ளது. இது படத்தின் தயாரிப்பாளர்களுக்கு எதிராக அமலாக்க ECIR பதிவு செய்ய வழி வகுத்துக் கொடுத்துள்ளது. சௌபின் ஷாஹிர், பாபு ஷாஹிர், ஷான் ஆண்டனி உள்ளிட்ட தயாரிப்பாளர்களுக்கு விசாரணைக்கான சம்மன் நோட்டீஸ் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சவுபின் மற்றும் ஷான் இருவரிடமும் ஈடி அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.
மஞ்சும்மல் பாய்ஸ் ரூ.220 கோடிக்கு மேல் வசூலித்ததாகக் கூறப்பட்டது. அதில் ஏற்பட்ட சர்ச்சையால் இதன் தயாரிப்பாளர்கள் மீது மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதே ஈடி விசாரணைக்கு மையமாக மாறியுள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications