சிறிய வார்டாக இருந்தாலும் கேரள அரசியலில் முக்கியத்துவம் பெற்ற கால்யாட் வார்டு.. அப்படி என்ன இருக்கு?
திருவனந்தபுரம்: காசர்கோடு மாவட்டத்தில் பெரிய பஞ்சாயத்தில் உள்ள மிகச் சிறிய வார்டான கால்யாட்டில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது.
கேரளாவில் உள்ளாட்சி தேர்தல் டிசம்பர் 8, 10, 14 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக நடைபெற்றன. இதற்கான வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெறுகிறது.
இந்த தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி, காங்கிரஸ் தலைமையிலான தேசிய முற்போக்கு கூட்டணி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆகியவை போட்டியிட்டன.

தவிடுபொடி
இந்த மாநிலத்தில் ஆளும் கட்சி மீது தங்கக் கடத்தல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இதையே தங்கள் தேர்தல் பிரசாரங்கள் மற்ற இரு கட்சி கூட்டணிகளும் முன் வைத்தன. ஆனால் அவை அத்தனையையும் தவிடுபொடியாக்கிவிட்டது இந்த தேர்தல் முடிவுகள்.

இடதுசாரி ஜனநாயக கூட்டணி
ஆம்! இந்த தேர்தலில் ஆளும் கட்சி கூட்டணியான இடதுசாரி ஜனநாயக கூட்டணி பெரும்பாலான இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. கேரளா அரசியலில் பெரிதாக பேசப்பட்டது காசர்கோடு மாவட்டம், பெரிய பஞ்சாயத்தில் உள்ள கால்யாட் என்ற சிறிய வார்டு.

அரசியல்
இதற்கு காரணம் இளைஞர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சரத் மற்றும் கிரிபேஷ் லால் ஆகிய இருவரையும் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடந்த ஆண்டு கொலை செய்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த சம்பவம் மாநில அரசியலில் அதிகம் பேசப்பட்டது.

வெற்றி
இதை காங்கிரஸ் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டது. இதன் விளைவு இன்று கால்யாட் வார்டை கைப்பற்றியது. இது போல் ஓரிரு வெற்றிகளை தவிர்த்து காங்கிரஸ் கட்சி கேரளாவில் பெரிய அளவில் எடுபடவில்லை என்றே தெரிகிறது.
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications