கிளம்பிய ஜேஎன்.1 வைரஸ்.. கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பது ஏன்? காரணம் இதுதான்!
திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனா பாதிப்பு என்பது திடீரென்று அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 1,039 பேர் பாதிக்கப்பட்டனர். இதனால் கேரளா அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கையை மீண்டும் தீவிரப்படுத்தி உள்ளது. இத்தகைய சூழலில் தான் கேரளாவில் திடீரென்று கொரோனா பாதிப்பு அதிகரிப்பதன் பின்னணி காரணம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
சீனாவில் இருந்து கடந்த 2019 ம் ஆண்டில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. இந்தியா உள்பட உலகின் பல நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவியது. இதனால் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டனர். பல நாடுகளில் மக்கள் கொத்து கொத்தாக பலியாகினர்.

கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் ஒட்டுமொத்த உலகமும் முடங்கியது. மேலும் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டது. இதையடுத்து 2 ஆண்டுகள் கழித்து 2021ல் உலகம் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பியது.
இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு என்பது லட்சத்தில் இருந்து படிப்படியாக குறைந்து கட்டுக்குள் வந்தது. இந்நிலையில் தான் திடீரென்று தற்போது கேரளாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு என்பது அதிகரிக்க தொடங்கி உள்ளது. அதாவது மத்திய அரசு நேற்று வெளியிட்ட தரவுகளின் படி இந்தியாவில் கொரோனாவால் 1,185 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதில் கேரளாவில் மட்டும் 1,039 பேர் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் கேரளாவில் கொரோனா பரவல் திடீரென்று அதிகரித்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதனால் அந்த மாநிலத்தில் கொரோனா பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக பரிசோதனைகள் என்பது அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு தேவையான மாத்திரை, மருந்துகள் இருப்பு வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதோடு பொதுமக்கள் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கைகளை பின்பற்றவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே தான் கேரளாவில் திடீரென கொரோனா பாதிப்பு என்பது அதிகரிப்பதற்கான காரணம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதாவது கேரளவாில் தற்போது ஓமிக்ரானின் ஜேஎன்.1 (JN.1) வகை வைரஸ் பரவுவது தான் பாதிப்பு திடீரென அதிகரிக்க காரணமாகி உள்ளது. இந்த ஜேஎன் 1 கொரோனா வைரஸ் என்பது ஓமிக்ரன் பிஏ.2.86 (BA.2.86)வகை மாறுபாடு கொண்ட வைரசாகும். இந்த வைரஸ் ஆகஸ்ட் மாதம் முதல் முதலாக ஐரோப்பிய ஒன்றியமான லக்சம்பேர்க்கில் கண்டறியப்பட்டது. அங்கிருந்து இது பிற நாடுகளுக்கு பரவ தொடங்கியது.
இதுபற்றி தொற்றுநோய் நிபுணரான டாக்டர் ஈஸ்வர் கிலாடா கூறுகையில், ‛‛இந்த வைரஸ் என்பது இதுவரை உலகளவில் 38 நாடுகளில் பரவி உள்ளது. இதனால் இது பழைய வைரஸ் தான். ஆனால் இந்தியாவுக்கு புதிதாக பரவி உள்ளது. இது மேல்சுவார வகை சார்ந்த பிரச்சனைகளை ஏற்படுத்தும். மேலும் சளி, இருமல், மூச்சுத்திணறலை ஏற்படுத்தும். தற்போதைய சூழலில் ஐசியூ படுக்கை, வெண்டிலேட்டர் சிகிச்சையில் யாரும் இல்லை. அதிர்ஷ்டவசமாக இறப்புகளும் ஏற்படவில்லை. இதனால் நாம் பயப்பட வேண்டாம். ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை நாம் கடைப்பிடிக்க வேண்டும்'' என்றார்.
அதன்படி பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே செல்லும்போது மாஸ்க் அணிதல், கைகளை அவ்வப்போது சுத்தம் செய்தல், கொரோனா பாதிப்புக்கான அறிகுறி இருந்தால் உடனே மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்வது, அறிகுறி உள்ளவர்களை விட்டு விலகி இருப்பது உள்ளிட்டவற்றை மக்கள் பின்பற்ற வேண்டும் என டாக்டர்கள் அறிவுரை வழங்கி உள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications