Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

41 நாட்கள் விரதம்.. இருமுடி கட்டி சபரிமலை வந்த கிறிஸ்தவ பாதிரியார்.. நெகிழ்ந்து சொன்ன விஷயம்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரளாவின் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த கிறிஸ்தவ பாதிரியார் 41 நாட்கள் விரதம் இருந்து, இருமுடி கட்டி பயபக்தியுடன் சபரிமலை வந்து ஐயப்பனை தரிசனம் செய்தார். இந்த விஷயம் கேரளாவில் இப்போது பெரிய அளவில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

கேரளாவின் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் பாதிரியார் கே ஜி மனோஜ். இவர் சாப்ட்வேர் என்ஜினியராக இருந்தார். பெங்களூரில் வாழ்ந்து வந்த ஐடி வாழ்க்கையை வெறுத்த அவர், கடந்த 2010ம் ஆண்ட ஆன்மீக பாதையில் பயணிக்க தொடங்கினார். கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த மனோஜ் இறைபணியில் தீவிரமாக இறங்கினார்.

Kerala Christian priest darshan of Lord Ayyappan at Sabarimala temple

இதையடுத்து 2015 ஆம் ஆண்டில், ஆங்கிலிக்கன் திருச்சபையின் சென்னை மறைமாவட்டத்தின் கீழ் பாதிரியாரானார். பாதிரியராக சேவை செய்து வந்த மனோஜ்க்கு கேரளாவின் புகழ் பெற்ற சபரிமலைக்கு புனித யாத்திரை செல்ல வேண்டும் என்று ஆசை பிறந்தது. பிற மதங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக சபரிமலை செல்ல விரும்பினார்.

இதையடுத்து சபரிமலை கோவிலுக்கு செல்லப்போவதாக வெளிப்படையாக அறிவித்து, அதற்காக கடந்த மாதம் விரதம் இருக்க தொடங்கினார். இதற்கு ஆங்கிலிக்கன் சபை கடும் எதிர்ப்பு தெரிவித்தது.மேலும் அவர் திருப்பலி உள்ளிட்ட சடங்குகளை நடத்தவும் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் அவருக்கு வழங்கப்பட்ட பாதிரியாருக்கான அடையாள அட்டையையும் திரும்ப பெற்றது.

ஆனாலும் பாதிரியார் மனோஜ் கண்டிப்பாக நான் சபரிமலை செல்வேன் என்று உறுதியுடன் இருந்தார். இதன்படி 41 நாட்கள் விரதம் இருந்த மனோஜ், நேற்று முன்தினம் இருமுடி கட்டி சபரிமலைக்கு வந்தார்.

18 படிகளில் பயபக்தியுடன் ஏறி சென்று ஐயப்பன் கோயிலில் நீண்ட நேரம் நின்று தரிசனம் செய்தார். அவருக்கு சபரிமலை கோயில் நிர்வாகத்தினர் வரவேற்பும் அளித்தனர். சபரிமலை மேல் சாந்தி ஜெயராமன் நம்பூதிரி, மாளிகைபுரம் மேல் சாந்தி ஹரிஹரன் நம்பூதிரி ஆகியோர் மனோஜ்க்கு பொன்னாடை அணிவித்து வரவேற்றனர்.

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தது குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய பாதிரியார் மனோஜ் கூறுகையில் "நான் இந்து மதத்தின் ஆழமான பாரம்பரியத்தைக் கண்டேன், உண்மையைக் கண்டுபிடித்தேன். சபரிமலை பயணம் என் மனதுக்கு மிக இனிமையாக இருந்தது.உள்ளே உள்ள தெய்வத்தை நேரில் பார்த்து தரிசனம் செய்ததை வார்த்தைகளால் விவரிக்க முடியாது" என்று சந்தோஷமாக தெரிவித்தார்.

இதனிடையே தன்னை ஒரு ஆன்மீக விஞ்ஞானி என்று அழைத்துக் கொள்ளும் பாதிரியார் மனோஜ் இப்போது ஆன்லைனில் "வாழ்க்கை புத்துணர்ச்சி நிகழ்ச்சிகளை" நடத்துகிறார். மேலும் தனது வழக்கமான பணியைத் தொடர விரும்புகிறார். ஆன்மீக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகளில் உரையாற்றி வருகிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+