திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொண்டாட்டமா இருப்பது தப்பில்லை.. கேரளாவில் பப்களை கொண்டு வரும் முதல்வர் பினராயி.. செம காரணம்!

Google Oneindia Tamil News

Recommended Video

    கேரளாவில் பப்களை கொண்டு வரும் அரசு

    திருவனந்தபுரம்: கேரளாவில் அரசு சார்பாக விரைவில் பப்களை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

    கேரளாவில் உணவு பிரியர்கள் அதிகம். பீப், போத்து தொடங்கி போர்க் வரை எல்லா வகையான உணவுகளை கலந்து கட்டுவார்கள். சமீப நாட்களாக அங்கமாலி டைரிஸ், ஜல்லிக்கட்டு போன்ற மலையாள படங்களும் உணவை மையமாக வைத்து வருகிறது.

    அதேபோல் கேரளாவில் மதுபிரியர்கள் அதிகம். வீட்டில் இயல்பாக உட்கார்ந்து பீர் குடிப்பது பலரின் வீடுகளில் சாதாரணமாக நடக்கும் விஷயம் .

    பப் வரும்

    பப் வரும்

    இந்த நிலையில்தான் கேரளாவில் அரசு சார்பாக விரைவில் பப்களை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். ஆம் அரசு சார்பாக இளைஞர்கள் கொண்டாட்டமாக இருக்க பப்கள் கொண்டு வரப்படும். விரைவில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்று கூறியுள்ளார்.

    என்ன காரணம்

    என்ன காரணம்

    இதற்கு அவர் காரணத்தையும் குறிப்பிட்டுள்ளார். அதில், மக்கள் கொண்டாட்டமாக இருப்பது தவறில்லை. எப்படி வாழ வேண்டும் என்பது அவரவர்களின் விருப்பம். ஐடி ஊழியர்களுக்காக இந்த பப்கள் கொண்டு வரப்படும். இதற்கு கட்டணம் வசூலிக்கப்படும்.

    பல புகார்

    பல புகார்

    மலையாளிகள் பலர் உலகம் முழுக்க வேலை பார்க்கிறார்கள். அங்கிருக்கும் பப் வசதிகள் கேரளாவில் இல்லை என்று புகார் வைக்கிறார்கள். பலர் இது தொடர்பாக கடிதம் அனுப்பி இருக்கிறார்கள். இந்த புகார்களுக்கு நடவடிக்கை எடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கிறோம்.

    மதுக்கடைகள் சரி செய்யப்படும்

    மதுக்கடைகள் சரி செய்யப்படும்

    அதேபோல் கேரளாவில் அரசு நடத்தும் பெவ்கோ எனப்படும் அரசு பார்கள் சீக்கிரம் புனரமைக்கப்படும். இதன் மூலம் வருமானம் முறைப்படுத்தப்படும். தமிழ்நாட்டில் செயல்படவும் டாஸ்மாக் போல, இதன் செயல்பாடு சரி செய்யப்படும், என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

    English summary
    Let them enjoy, We will bring Pubs in Kerala soon says CM Pinarayi Vijayan.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X