கேரளாவில் ஷாக்.. பிரபல மலையாள நடிகை மர்மான முறையில் வீட்டில் சடலமாக மீட்பு.. கொலையா?
திருவனந்தபுரம்: கேரளாவில் முன்னணி டிவி நடிகைகளில் ஒருவரான அபர்ணா நாயர் நேற்று வீட்டில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். பிரபல மலையாள நடிகை மர்மமான முறையில் உயிரிழந்து இருப்பது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் முன்னணி டிவி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் அபர்ணா நாயர். திருவனந்தபுரத்தின் கரம்னா பகுதியில் உள்ள வீட்டில் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் அபர்ணா பி நாயர் வசித்து வந்தார். கடந்த 2005-ம் ஆண்டு மாயூகம் என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆன அபர்ணா நாயர், தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.

நோட்புக், நிவேத்யம், மேகதீர்த்தம், எதுவும் நடக்கும், காக்டெய்ல், மேமா நிலவு, காயம், அழகு, ரன் பேபி ரன், ஒரு குட்டி சோத்யம், அமைதி, நொடிகள், தெருவிளக்கு, பாலன் வக்கீல், கல்கி, தாமர, ஒருத்தி, உணர்தல் உள்ளிட்ட ஏராளமான மலையாள படங்களில் நடித்துள்ளார். சந்தன மழை, மைதிலி வீண்டும் வரும் மற்றும் தேவஸ்பர்ஷம் உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.
இந்த நிலையில், நடிகை அபர்ணா நாயர் நேற்று மாலை திருவனந்தபுரத்தில் உள்ள தனது வீட்டின் அறையில் தூக்கில் தொங்கியதாக சொல்லப்படுகிறது. உடனடியாக அவரை மீட்ட குடும்பத்தினர் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால், அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவமனையில் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவல் போலீசாருக்கும் தெரியப்படுத்தப்பட்டது.
இதையடுத்து, இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். நடிகை அபர்ணா நாயர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது பிரேத பரிசோதனைக்கு பிறகே தெரியவரும் என்று போலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது. எனினும், நடிகை அபர்ணாவுடன் தொடர்புடையவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அபர்ணா நாயர் தூக்கில் தொங்கியபோது அவரது தாயார் மற்றும் சகோதரி மட்டுமே வீட்டில் இருந்ததாக சொல்லப்படுகிறது. எனவே அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அபர்ணா நாயரின் கணவரும் குழந்தைகளும் அந்த சமயத்தில் வீட்டில் இல்லை என்றும் வெளியே சென்றுவிட்டதாகவும் முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன. எனவே இது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரபல மலையாள நடிகை மர்மமான முறையில் உயிரிழந்து இருப்பது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications