செம்ம ஸ்பீடு.. யார் இந்த தீபாமோல்.. முதல் நாளே மக்களை திகைக்க வைத்த பெண்.. குவியும் பாராட்டு
முதல் பெண் ஆம்புலன்ஸ் ஓட்டுனரானார் தீபாமோல்
திருவனந்தபுரம்: கேரள மாநிலமே தீபாவை பெருமையுடன் பார்த்து வருகிறது.. ஏராளமான வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறது.. என்ன காரணம்?
தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் தேசிய ஊரக சுகாதாரம் திட்டத்தின் கீழ் 108 ஆம்புலன்ஸ் சேவை செயல்படுத்தப்பட்டு வருகிறது..
அவசர கால மருத்துவ தேவைகளுக்காக இவை செயல்படுத்தப்பட்டு வருகின்றன.. அதனால் 24 மணி நேரமும் இயங்கக்கூடியதாக உள்ளது.

ஆம்புலன்ஸ் டிரைவர்
அந்த வகையில், கேரளாவில், கேரள ஆம்புலன்ஸ் நெட்வொர்க் என்று சொல்லக்கூடிய கனிவ் 108 என்ற பெயரில் இந்த ஆம்புலன்ஸ் செயல்பட்டு வருகிறது.. (Kerala Ambulance Network for Injured Victims) இந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநராக ஒரு பெண் நியமிக்கப்பட்டுள்ளார்.. கேரளாவின் முதல் பெண் ஆம்புலன்ஸ் டிரைவர் இவர்தான்.. பெயர் தீபாமோல்.. நேற்றைய மகளிர் தினத்தன்று இவர் தன்னுடைய டியூட்டியில் சேர்ந்துள்ளார். கோட்டயம் மாவட்டத்தை சேர்ந்தவர் தீபாமோல்..

முதல் பெண் டிரைவர்
பணியில் சேர்ந்த அவருக்கு ஆம்புலன்ஸ் சாவியை கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் வழங்கி கவுரவித்தார். இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் சொல்லும்போது, "பெண்கள் அனைத்து துறைகளிலும் ஈடுபட வேண்டும் என்பதை மையமாக கொண்டு, ஆர்வமுடைய பெண்களை நியமிக்க அரசு முயற்சி எடுத்துள்ளது. இத்தகைய நடவடிக்கைகள் மூலம் பெண்கள் மீது காலங்காலமாக இருந்து வரும் கருத்தியல்களை நொறுக்க முடியும்..

ரோல் மாடல்
அதேபோல, பெண்கள் தங்களுக்கு விருப்பமான துறைகளில் ஈடுபட உதவும் நோக்கில்தான் இந்த முயற்சி அமைந்துள்ளது.. தீபாமோல் இப்போது ஒரு ரோல்மாடலாக இருக்கிறார்.. அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். இதேபோன்று அடுத்தடுத்து பல மாவட்டங்களிலும் பெண் ஆம்புலன்ஸ் டிரைவர்களே நியமிக்கப்படுவார்கள்" என்றார். இதற்கு முன்பு, 2018-ல் கயல்விழி என்ற இளம்பெண் ஆம்புலன்ஸ் ஓட்டுராகி சாதனை படைத்தார். பிறகு, அரசின் 108 ஆம்புலன்ஸ் சேவையின் முதல்பெண் டிரைவராக வீரலட்சுமி என்பவர் நியமிக்கப்பட்டார்.. அதற்கு பிறகு தீபாமோல்தான் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறார்.

டியூட்டி
டியூட்டியில் சேர்ந்த பூரிப்பில் காணப்பட்ட தீபாமோல், தனக்கு கிடைத்த இந்த பணியை பற்றி சொல்லும்போது, "இது என்னுடைய கனவு.. இப்போதுதான் நிறைவேறி உள்ளது.. அதற்காக உதவியோருக்கு என்னுடைய நன்றி.. பெண்கள் என்றாலே கிச்சனில்தான் இருக்க வேண்டுமா என்ன? இனி அவர்கள் எந்த வேலையையும் செய்ய துணிச்சலாக முன்வர வேண்டும்" என்றார்.

சாதனை
தீபாமோல் நன்றாக டிரைவ் செய்யக்கூடியவராம்.. பெரிய வாகனங்களை சிறப்பாக இயக்ககூடியவரும்கூட.. 2008லேயே டிரைவிங் லைசென்ஸ் வாங்கிவிட்டார்.. 2009-ல் கனரக வாகனங்களை ஓட்ட லைசென்ஸ் வாங்கிவிட்டார்.. இது எல்லாவற்றிற்கும் மேலாக இன்னொரு சாதனையை படைத்தவர்தான் தீபா.. டூ வீலரிலேயே கோட்டயத்திலிருந்து லடாக் வரை 16 நாட்களில் சென்று ரிக்கார்ட் எடுத்தவர்.. திருச்சூரில் நடைபெற்ற ஆஃப்-ரோட் டிரைவிங் போட்டியிலும் வெற்றி பெற்றவர்.. இப்படிப்பட்ட சாதனை பெண்ணுக்கு ஆம்புலன்ஸ் சாவியை தந்து அழகு பார்த்துள்ளது கேரள மாநிலம்..!
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications