கேரள ஓணம் லாட்டரியில் ரூ. 25 கோடி வென்ற ஆட்டோ டிரைவர் அனூப்.. இப்போ என்ன செய்கிறார் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற ஓணம் பம்பர் லாட்டரியில் (Onam Bumper Lottery) ரூ.25 கோடி வென்ற அதிர்ஷ்டசாலியான ஆட்டோ டிரைவர் அனூப், தான் ஆரம்பித்த லாட்டரி கடையை இழுத்து மூடிவிட்டாராம். பரிசு வென்று 3 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் தற்போதும் கூட அவரிடம் பலரும் உதவி கேட்டு வருவதாக சொல்லப்படுகிறது. அனூப் தற்போது என்ன செய்கிறார்? என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.

கேரளாவில் கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற ஓணம் பம்பர் லாட்டரியில் திருவனந்தபுரம் ஸ்ரீவரஹம் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் அனூப்பிற்கு ரூ.25 கோடி பரிசாக அடித்தது. கடன் தொல்லையால் தவித்து வந்த அனூப், வெளிநாட்டிற்கு செல்ல திட்டமிட்டு இருந்த நிலையில், வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பமாக இந்த லாட்டரியில் ரூ.25 கோடி கிடைத்தது.

onam-bumper-lottery-winner-anoop-who-won-rs-25-crore-starts-new-business-journey

25 கோடி வென்ற ஆட்டோ டிரைவர்

பரிசுத்தொகை கிடைத்ததும் சந்தோஷத்தில் திக்கு முக்காடி போனார். ஒரே நாளில் கேரள தேசத்தில் பெரும் பிரபலம் அடைந்தார். லாட்டரியில் பணம் கிடைத்தத்தால் வெளிநாடு செல்லும் திட்டத்தை கைவிட்ட அனூப் உள்ளூரிலேயே லாட்டரி கடை ஒன்றை ஆரம்பித்தார். ராசியான நபர் என்பதால், இவரது கடையில் கூட்டம் அலைமோதியது.

அனூப் கடையில் நமக்கு பரிசு அடிக்கும் என்ற ஆர்வத்தில் சேட்டன்கள் பலரும் கடை திறக்கும் முன்பே கடை வாசலில் காத்திருந்து டிக்கெட்டுகளை வாங்கி சென்றனர். இதனால், அவரது லாட்டரி கடையிலும் கூட்டம் அலைமோதியது. கடந்த சில ஆண்டுகளாக அனுப் பற்றி எந்த தகவலும் வெளியாகாமல் இருந்த நிலையில், தற்பொது அவர் லாட்டரி கடையை மூடிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

லாட்டரி கடையை மூடிவிட்டாராம்

மணக்காடு பகுதியில் வைத்து இருந்த லாட்டரி கடையை தொடர்ந்து நடத்துவதற்கு அவருக்கு போதிய நேரம் இல்லாமல் போயிருக்கிறது. இதனால், அந்த கடையை தற்போது இழுத்து மூடிவிட்டு ஹோட்டல் ஒன்றை தொடங்கியிருக்கிறாராம் அனூப். ஹோட்டல் தொழிலில் ஈடுடுபடுவதுதான் அவரது கனவாக இருந்த நிலையில் தற்போது அந்தக் கனவை நிறைவேற்றியிருக்கிறார் அனூப்.

கைதமுக்கு என்ற இடத்தில் "ஹேப்பி"என்ற பெயரில் ஹோட்டலும், வலியசாலாவில் ருச்சிகடா என்ற பெயரில் ஒரு ஹோட்டலும் வைத்துள்ளார். ஹோட்டல் தொடங்குவதுதான் தனது கனவாக வைத்து இருந்த அனூப் தற்போது அந்தக் கனவை நிறைவேற்றியுள்ளார். 25 கோடி பரிசுத்தொகை அடித்தாலும் தற்போதும் கூட லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கி வருகிறாராம் அனூப்.

பணம் கொடுத்து உதவுமாறு நச்சரிப்பு

பரிசுத்தொகை வென்ற நாளில் இருந்து தற்போது வரை பலரும் உதவி கேட்டு அனூப்பை தொந்தரவு செய்து வரும் நிகழ்வுகளும் நடந்து கொண்டுதான் இருக்கிறதாம். முன்னதாக பரிசு தொகை அடித்ததும், அனூப் வீட்டை தேடி அவரது நண்பர்களும் உறவினர்களும் படையெடுத்த சுவாரசியமும் நடைபெற்றது. தங்களது கஷ்டங்களை சொல்லி, பணம் கொடுத்து உதவுமாறு அனூப்பிடம் தொலைபேசியிலும் நேரிலும் நச்சரித்தது வந்ததால் கொஞ்ச நாள் வீட்டை விட்டே தலைமறைவாகியிருந்தார்.

ஓணம் பம்பர் லாட்டரி விற்பனை

ஓணம் பம்பர் லாட்டரி டிக்கெட்டில் அனூப்பிற்கு வரிப்பிடித்தம் போக ரூ.15.75 கோடி ரூபாய் பரிசாக கிடைத்துள்ளது. லாடட்ரியில் பணம் அடித்த பிறகு தனது ஆட்டோ ஓட்டும் தொழிலை கைவிட்டவர், லாட்டரி கடை ஆரம்பித்து தற்போது அதையும் மூடிவிட்டு ஹோட்டல் பிசினசில் இறங்கியுள்ளது கேரள சேட்டன்கள் மத்தியில் பரபரப்பான டாபிக் ஆக டீக்கடை விவாதங்களில் இடம் பெற்றுள்ளதாம்.

கேரளாவில் தற்போது ஓணம் பம்பர் லாட்டரி டிக்கெட் குலுக்கல் விற்பனை நடைபெற்று வருகிறது. முதல் பரிசாக ரூ.25 கோடி கொண்ட இந்த லாட்டரி டிக்கெட்டின் குலுக்கல் வரும் செப்டம்பர் 27 ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு திருவனந்தபுரம் லாட்டரி தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+