திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கின்னஸ் சாதனை முயற்சியில் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயில்.. பொங்காலை விழா தொடக்கம்

Google Oneindia Tamil News

Recommended Video

    பகவதி அம்மன் கோயில் பொங்காலை விழா தொடக்கம்-வீடியோ

    திருவனந்தபுரம்:பெண்களின் சபரிமலை என அழைக்கப்படும் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் கின்னஸ் சாதனை படைக்கும் வகையில் லட்சக் கணக்கான பெண்கள் பங்கேர்க்கும் பொங்காலை விழா இன்று துவங்கியது.

    கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ளது ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயில். அந்த கோயில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப் படுகிறது. கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் கும்ப மாதத்தில் கார்த்திகை நட்சத்திர நாளில் திருவிழா துவங்குவது வழக்கம்.

    அந்த திருவிழா துவங்கி 9வது நாள் பல லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்கும் பொங்காலை என்ற விழா நடைபெறும். இந்த திருவிழா துவங்கி 3வது நாளன்று சிறுவர்களுக்கான குத்தியோட்டம் என்ற நேர்ச்சை வழிபாடுக்கான விரதம் துவங்கும்.

    நேர்ச்சை, விரதம்

    நேர்ச்சை, விரதம்

    நேர்ச்சையில் பங்கேற்கும் ஆண் குழந்தைகளுக்கு 12 வயதுக்கு கீழே இருக்க வேண்டும். திருவிழா துவங்கி 3வது நாள் முதல் 7 நாட்கள் ஆலயத்தில் தங்கி விரதம் அவர்கள் இருப்பார்கள். ஆலயத்தில் வந்து சேர்ந்த பிறகு நடைபெறும் குருதி எனும் சடங்கு நடைபெறும். அத்துடன் 10 நாள் திருவிழா நிறைவடையும்.

    இந்த ஆண்டு ஆற்றுகால் பொங்காலை திருவிழா ஆனது தொடங்கியிருக்கிறது.

    பொங்காலை விழா தொடங்கியது

    பொங்காலை விழா தொடங்கியது

    நேற்று கார்த்திகை நட்சத்திர நாளில் கோயில் முன்பு தென்னை ஓலையால் கட்டப்பட்ட கொட்டகையில் காப்பு கட்டி, பொங்காலை விழா துவங்கியது. அம்மனை அமர வைத்து பிறகு தோற்றம் பாட்டு துவங்கியது.

    குத்தி ஓட்ட நேர்ச்சை

    குத்தி ஓட்ட நேர்ச்சை

    அதில் கண்ணகியின் வாழ்நாள் கதைகளை பாடலாக பாடப்படுகிறது இந்த பாடல் திருவிழா முடிவு நாளான 21ம் தேதி வரை பாடப்படும். திருவிழா துவங்கி 3வது நாளான 14ம் தேதி சிறுவருக்கான குத்தி ஓட்ட நேர்ச்சை துவங்கியது.

    நேர்ச்சைக்காக பதிவு

    நேர்ச்சைக்காக பதிவு

    இந்த ஆண்டு 815 சிறுவர்கள் இந்த நேர்ச்சைக்காக பதிவு செய்துள்ளனர். இந்த மாதம் 20ம் தேதி விழாவின் 9வது நாளன்று காலை 10.15 மணி அளவில் ஆலய முக்கிய அர்ச்சகர் ஆலய கருவறையில் இருந்து எடுத்து வரும் தீயை ஆலயத்தின் முன்புறம் அமைக்கப்பட்டிருக்கும் பண்டார அடுப்பில் பற்ற வைத்து பொங்காலை துவக்கமாகும்.

    முதல் கின்னஸ் சாதனை

    முதல் கின்னஸ் சாதனை

    பொங்காலை விழாவிற்காக கோயிலைச் சுற்றி கூடுதல் இடங்கள் சுத்தப் படுத்தப்பட்டுள்ளன. 1997ம் ஆண்டு பிப்ரவரி 23ம் தேதி நடந்த பொங்கல் விழாவில் 15 லட்சம் பெண்கள் கலந்துகொண்டது முதன்முறையாக கின்னஸில் இடம்பெற்றது.

    சாதனை வீழ்த்தப்பட்டது

    சாதனை வீழ்த்தப்பட்டது

    2009-ம் ஆண்டு, 25 லட்சம் பெண்கள் பொங்கலிட்டது முந்தைய கின்னஸ் சாதனையை முறியடித்தது. கடந்த ஆண்டு 40 லட்சம் பெண்கள் கலந்து கொண்டனர். இந்த ஆண்டு 45 லட்சம் பெண்கள் வருவார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது. அது நிறைவேறும் பட்சத்தில்... கின்னஸ் சாதனையாக பதிவு செய்யப்படும்.

    பந்தோபஸ்து ஏற்பாடுகள்

    பந்தோபஸ்து ஏற்பாடுகள்

    பொங்காலை விழாவில் பங்கேற்க தமிழகம், கேரளா மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் பல லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்று வழிபடுகின்றனர். விழாவை முன்னிட்டு, காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.

    English summary
    The Pongala festival at attukal bhagavathy temple in Thiruvananthapuram, Kerala is set to ready for Guinness world record.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X