குடும்ப வறுமை.. தட்டுக்கடை நடத்தும் நடிகர்: துல்கர் சல்மான் உதவி செய்வாரா?
கேரளா: நடிகர் துல்கர் சல்மானுடன் இணைந்து நடித்த நடிகர் ஒருவர் குடும்பத்தை வறுமையிலிருந்து மீட்க ரோட்டுக் கடை நடத்திவருகிறார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்த 'பரவா' திரைப்படத்தை இயக்குநர் சௌபின் ஷாஹிர் இயக்கி இருந்தார். இந்தப் படம் வெளிவந்து 7 ஆண்டுகளைக் கடந்து விட்டாலும், மலையாள திரை ரசிகர்கள் அந்தப் படத்தையும் அதில் நடித்திருந்த சிறுவன் கோவிந்த் வி பை எளிதில் மறந்திருக்க மாட்டார்கள்.

அன்று குட்டிப் பையனாக நடித்திருந்த கோவிந்த் இப்போது கேரளாவில் சாலையோரமாக தட்டுக் கடை போட்டு குடும்பத்தை வறுமையிலிருந்து மீட்பதற்காகப் படிப்பை தொடராமல் உழைப்பாளியாக மாறி இருக்கிறார். இந்தச் செய்தி கேரளாவில் இப்போது ஹைலைட் ஆக மாறி இருக்கிறது.
பரவா படத்தில் முக்கியமான கதாபாத்திரம் கிடைத்த பிறகும் இந்தப் பையன் படிப்பை தொடராமல் தட்டுக் கடை போட்டு வீட்டை காப்பாற்ற வேண்டிய நிலை ஏன் வந்தது? அதைப் பற்றிய வீடியோ பதிவை மலையாள மனோரமா வெளியிட்டுள்ளது. அதில், முகத்தில் எந்தவித கஷ்டங்களும் இல்லாமல் துள்ளிக் குதித்தபடி தோசை சுட்டுக் கொண்டிருக்கிறார் கோவிந்த். 'இது சுத்தமான சைவ கடை. டிஃபன் ருசியாக இருக்கும். தைரியமாகச் சாப்பிடுங்கள்' என்றபடி வடை சட்டியில் உள்ள வடையை அவர் அப்படியே அள்ளி தட்டில் போடுகிறார். அதைப் பார்க்கும் போது அதன் ருசி கண்களில் ஏறுகிறது.

கோவிந்த வி பை இப்போது எர்ணாகுளத்திலுள்ள சேரலை என்ற ஊரில் சாலையோரமாக உள்ள பகவதி கோயிலுக்கு அருகில் தட்டுக் கடை நடத்தி வருகிறார். அதில் அவரது குடும்பமே ஈடுபட்டு வருகிறது. 'பரவா'வில் நடிக்கும் போது இவர் பள்ளி மாணவனாக இருந்தார். அதன்பிறகு சில படங்களில் முகம் காட்டினார். தன் சினிமா வாழ்க்கை பற்றிப் பேசிய கோவிந்த், "நான் அப்ப படித்துக் கொண்டிருந்தேன். அப்போதுதான் துல்கர் சல்மானுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன்பின்னர் 12 ஆம் வகுப்பு வரை படித்தேன். வீட்டில் அப்பா இல்லை.

பதினாறு ஆண்டுகளுக்கு முன்பு அப்பா வாசுதேவ் இறந்த பிறகு அம்மா வீட்டு வைத்தியம் பார்த்து அதில் சின்ன வருமானம் பார்த்தார். பிரசவம் பார்க்கப் போகும் மருத்துவச்சியாக இருந்தார். அந்த வருமானம் சின்ன பிள்ளைகளாக இருந்த போது போதுமானதாக இருந்தது. நாங்கள் வளர்ந்த பிறகு செலவுகள் தாக்குப் பிடிக்கவில்லை. அதனால் படிப்பை நிறுத்திவிட்டு இந்தத் தட்டுக்கடை நடத்தி வருகிறோம். இரவு 7 மணிக்குக் கடையை திறப்போம். டீ, போண்டா, பஜ்ஜி, வடை போடுவோம். நல்ல டிஃபன் கிடைக்கும். ஆகவே பலரும் விரும்பி சாப்பிட வருவார்கள். சில நேரம் சினிமா பிரபலங்கள் கூட வருவார்கள்" என்கிறார் 32 பற்களைக் காட்டி சிரித்தபடி.

இவருடன் அம்மாவும் சமையல் வேலை செய்கிறார். மூத்த சகோதரர் நரேந்திர பையும் இருக்கிறார். இந்தக் கடை இரவு நேரங்களில் சுறுசுறுப்பாக நடக்கிறது. கோவிந்த் படிப்பைத் தொடர விரும்பவில்லை. உணவகத்தில் வேலை செய்து கொண்டே சினிமாவில் நடிக்கத் திட்டமிட்டுள்ளார். வீட்டில் இருப்பவர்களும் அதையே அனுமதிக்கிறார்கள்.
சிறுவன் கோவிந்த் முன்பு துல்கர் சல்மானுடன் எடுத்துக் கொண்ட படத்தையும் காட்டுகிறார். இப்போது இவருக்கு இப்போது 25 வயது ஆனாலும், பள்ளி மாணவரைப் போலவே உள்ளது அவரது தோற்றம். ஆகவே, வாய்ப்புகள் கிடைக்கும் என்ற நம்பிக்கை அவர் வார்த்தைகளில் வெளிப்படுகிறது. மட்டாஞ்சேரி டிடி பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் போதே 'பரவா' படத்தில் நடிக்கத் தொடங்கிய கோவிந்த் மனதில் சில கனவுகள் இருக்கின்றன. சொந்த வீடு வாங்க வேண்டும், குடும்பத்தை நன்றாகக் கவனித்துக் கொள்ள வேண்டும் என எளிய கனவுகள்தான் அவை.
சில ஆண்டுகள் முன்னதாக இவரது சாப்பாட்டுக் கடையில் டீ சாப்பிட்டுக் கொண்டிருந்த இயக்குநர் சௌபின், சிறுவன் கோவிந்தை கவனித்துள்ளார். அப்போது பரவா கேரக்டருக்கு இவர் செட் ஆவார் என நினைத்து தேர்வு செய்து நடிக்க வைத்துள்ளார். ஆனால், அப்போது இவர் ரோட்டு கடை நடத்தி வரும் சிறுவன் என்பது யாருக்கும் தெரியவில்லை.
-
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்?












Click it and Unblock the Notifications