சபரிமலை ஐப்ப பக்தர்கள் மாநாட்டில்.. RSS தலைவர்களுக்கு முன்னுரிமை! அமைச்சர் பிடிஆர் கொந்தளிப்பு

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரளாவில் நடைபெற்ற ஐயப்ப பக்தர்கள் மாநாட்டில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு முன்னுரிமை கொடுக்காமல், ஆர்எஸ்எஸ் தலைவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டிருக்கும் சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதனை அமைச்சர் பிடிஆர் கடுமையாக கண்டித்திருக்கிறார்.

திருவிதாங்கூர் தேவசம் போர்டு 70ம் ஆண்டு விழாவின் ஒரு பகுதியாக, பம்பையில் ஐயப்ப பக்தர்கள் மாநாடு நடக்கிறது. கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் மாநாட்டை நேற்று தொடக்கி வைத்தார்.

PTR Palanivel Thiagarajan Sabarimala RSS

இந்த விழாவில் தமிழக அமைச்சர்கள் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், பி.கே சேகர்பாபு, கேரளா அறநிலை துறை அமைச்சர் வி.என்.வாசவன் மற்றும் கேரளத்தின் பல்வேறு அமைப்புகளின் தலைவர்களும் பங்கேற்றிருந்தனர்.

நேற்று நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்கள் உரையாற்றினர். அப்போது அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு முன்னுரிமை கொடுக்காமல், ஆர்எஸ்எஸ் தலைவர்களுக்கு முன்னுரிமை கொடுத்ததாக சர்ச்சை எழுந்தது. இதனை அடுத்து பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை வேண்டுமென்றே தன்னை பேசவிடாமல் தாமதப்படுத்திவிட்டு, ஆர்எஸ்எஸ் தலைவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

இதனை அடுத்து மேடையிலேயே நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பழனிவேல் தியாகராஜனிடம் மன்னிப்பு கேட்டனர். பின்னர் அவரை பேச அனுமதித்தனர்.

ஐயப்ப பக்தர்கள் பெயரில் நடத்தப்படும் மாநாட்டில், ஆர்எஸ்எஸ் தலைவர்களுக்கு என்ன வேலை? என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பு வருகின்றனர். மதம் வாழ்வின் ஒரு அங்கமாகதான் இருக்க வேண்டுமே தவிர, அதை வைத்து அரசியல் செய்பவர்களை அனுமதிக்க கூடாது என்று இடதுசாரிகள், திமுக உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில், இடதுசாரி தலைவர் பினராயி விஜயன் தொடக்கி வைத்த மாநாட்டில் ஆர்எஸ்எஸ் தலைவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+