சபரிமலை பக்தர்களுக்கு சூப்பர் நியூஸ்.. சன்னிதானத்துக்கு சர்ருனு போகலாம்! வருகிறது ரோப் வே திட்டம்!

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: சபரிமலையில் ரோப் வே அமைப்பதற்கான சாத்திய கூறுகள் குறித்து ஆய்வு நிறைவடைந்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் சபரிமலையில் தோழி மூலம் பக்தர்களை தூக்கிச் செல்லும் டோலி சேவை ரத்து செய்யப்படும் என்றும், ரோப்கார் அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும் என திருவிதாங்கூர் தேவசம்போர்டு அமைச்சர் கூறியுள்ளார்.

சபரிமலையில் கடந்த நவம்பர் 16ஆம் தேதி மண்டலவிளக்கு மற்றும் மகர விளக்கு பூஜைகள் தொடங்கியது இதை அடுத்து இந்தியா முழுவதிலும் இருந்து சுமார் 80 லட்சம் பக்தர்கள் சபரிமலை ஐயப்பனை தரிசித்துள்ளனர்.

spirituality sabarimala kerala

கோவிலில் காணிக்கை, பிரசாதம் மற்றும் பிற வகைகளில் 440 கோடி ரூபாய் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வருமானமாக கிடைத்துள்ளது. தொடர்ந்து மகர விளக்கு பூஜை நிறைவடைந்து கடந்த ஜனவரி 20ஆம் தேதி கோவில் நடை சாத்தப்பட்டது.

இந்த நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்களுக்காக பல்வேறு துறையை சேர்ந்த ஊழியர்கள் பணியாற்றினர். குறிப்பாக காவல்துறையினர், மின்வாரியத்தினர், சுகாதாரப் பணியாளர்கள், தன்னார்வலர்கள் என சுமார் 20,000 பேர் சுழற்சி முறையில் பணியில் ஈடுபட்டிருந்தனர். அவ்வாறு சபரிமலை சீசனில் பணிபுரிந்த அரசுத் துறையினருக்கு திருவனந்தபுரத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் தேவசம்போர்டு அமைச்சர் வாசவன் பங்கேற்று பாதுகாப்பு உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்," சபரிமலை மண்டல, மகர விளக்கு பூஜை காலத்தில் 440 கோடி ரூபாய் வருமானமாக கிடைத்திருக்கிறது. இது கடந்த ஆண்டு விட 80 கோடிக்கும் அதிகம். தற்போது சபரிமலைக்கு ரோப் வே அமைப்பதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும். 250 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டம் , ஒன்றரை ஆண்டுகளில் முடிக்கப்படும். பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு சரக்குகளை கொண்டு செல்வதற்காக தான் இந்த திட்டம் கொண்டுவரப்பட இருக்கிறது.

அதே நேரத்தில் வயதானவர்கள், உடல் நலக்குறைவு உள்ளவர்களும் அனுமதிக்கப்படுவார்கள். ரோப் வே செயல்பாட்டுக்கு வரும்போது டிராக்டர்களில் சரக்குகளை கொண்டு செல்வது, டோலியில் பக்தர்களை தூக்கி செல்வது நிறுத்தப்படும். அதே நேரத்தில் டோலி தொழிலாளர்களின் மறுவாழ்வுக்காக வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்றார்'. இதன் மூலம் சபரிமலை ஐயப்ப பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கை செயல்பாட்டுக்கு வர உள்ளது.

சபரிமலை ரோப் வே திட்டம்: பம்பை ஹில்டாப் பகுதியிலிருந்து சபரிமலை சன்னிதானம் வரை சுமார் 2.7 கிலோமீட்டர் நிலத்திற்கு 250 கோடி ரூபாய் செலவில் ரோப் வே திட்டம் அமைய உள்ளது. இதற்காக இரண்டு ஆண்டுகள் கால அளவாக நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கும் நிலையில் ஆண்டுக்கு 40 முதல் 60 ஆயிரம் டன் பொருட்களை பம்பையில் இருந்து சபரிமலை சன்னிதானம் வரை கொண்டு செல்ல முடியும். மேலும் அவசர காலங்களில் ஆம்புலன்ஸ்களையும் கொண்டு செல்லும் வகையில் இந்த திட்டம் அமைக்கப்பட்டிருக்கிறது.

இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால், சபரிமலை சன்னிதானத்திலிருந்து பம்பைக்கும், பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கும் பத்து நிமிடங்களில் இந்த திட்டத்தின் மூலம் பொருட்களையும், அவசர காலங்களில் கார் ஆம்புலன்களையும் கொண்டு செல்லலாம். தற்போது மாளிகை புரத்தின் பின் புறம் அன்னதான மண்டபம் அருகே பயன்பாடின்றி இருக்கும் கட்டிடங்களை உடைத்து அங்கு ரோப் வே நிலையம் அமைக்கப்பட இருக்கிறது.

நாற்பது முதல் 60 மீட்டர் உயரம் வரை ரோ ப்வே தூண்கள் அமைத்து அதில் பணிகள் துவங்கப்பட இருக்கிறது. இந்த நிலையில் திட்டம் தாமதமாக வனத்துறையின் எதிர்ப்பும் ஒரு காரணமாக இருந்தது. இதனால் தற்போது இந்த திட்டத்திற்கு வனத்துறை வழங்கும் நிலத்துக்கு பதிலாக கொல்லம் அருகே கட்டில பாறையில் வருவாய்க் துறை சொந்தமான ஒன்பது ஏக்கர் நிலம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் நேற்று திருவனந்தபுரத்தில் கையெழுத்தான நிலையில் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வர உள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+