திப்பு சுல்தானை இம்ரான் கான் புகழ... சசி தரூர் அதை பாராட்ட... கடுகடுப்பில் பாஜக

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: திப்பு சுல்தானின் நினைவு தினத்தை நினைவு கூர்ந்த, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு, மூத்த காங்கிரஸ் தலைவர் சசி தரூர், பாராட்டுகளை தெரிவித்து உள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மைசூர் புலி என்று அழைக்கப்பட்ட திப்புசுல்தானின் இறந்த தினம் கடந்த 4ம் தேதி அனுசரிக்கப்பட்டது. அன்றைய தினம் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது ட்விட்டர் பக்கத்தில் "மே 4 ஆம் தேதியான இன்று, திப்பு சுல்தானின் இறந்த தினமாகும். அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை இருப்பதற்கு காரணம், அடிமையாக வாழ்வதைவிட, சுதந்திரம் மேலானது என்று கருதி போராடி மரணம் அடைந்தவர்", என்று, இம்ரான் கான் தெரிவித்திருந்தார்.

Shashi Tharoor praises Pakistan PM Imran Khan

இந்த ட்வீட்டை ரீட்வீட் செய்துள்ளார் சசிதரூர். மேலும், அவர் அதில் கூறுகையில், "இம்ரான் கான் பற்றி எனக்கு தனிப்பட்ட முறையில் தெரிந்த விஷயம் என்னவென்றால், இந்திய துணை கண்டத்தின் வரலாறு மீது அவருக்கு ஆர்வம் உண்டு. அவர் படிப்பார், அக்கறை கொள்வார். ஆனால் சிறந்த இந்திய ஹீரோ ஒருவரை அவரது மறைந்த தினத்தன்று பாகிஸ்தான் தலைவர் நினைவு கொள்வது அதிருப்திதான்" என்று தெரிவித்திருந்தார்.

இம்ரான்கான், திப்பு சுல்தானை புகழ்வது இது முதல்முறை கிடையாது. புல்வாமா, தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு, இந்தியா மற்றும் பாகிஸ்தான் நடுவே பதட்டமான சூழ்நிலை உருவானது. கடந்த பிப்ரவரி மாதம் நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றிய போது, திப்பு சுல்தான் பற்றி இம்ரான் கான் குறிப்பிட்டார். அந்த உரையின் போது, பிரெஞ்சு ராணுவ அதிகாரிகள் சிலர் ரகசிய வழி வழியாக திப்புசுல்தானை, தப்பிச் செல்ல அறிவுறுத்தியதாகவும், அப்போது ஆயிரம் ஆண்டுகள் ஆடு போல வாழ்வதை விட, ஒருநாள் புலி போல, வாழ்வது சிறந்தது என்று திப்பு சுல்தான் கூறியதாகவும், இம்ரான்கான் குறிப்பிட்டு பேசினார்.

இதனிடையே கர்நாடக பாஜக துணை செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் கூறுகையில், விங் கமாண்டர் அபிநந்தனை, பத்திரமாக மீட்டதற்காக, பிரதமர் நரேந்திர மோடியை பாராட்டாமல், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை புகழ்ந்த காங்கிரஸ் கட்சிக்கு இது புதிது கிடையாது என்று சாடியுள்ளார். கர்நாடகாவில் திப்பு சுல்தான் ஜெயந்தியை அரசு விழாவாக கொண்டாட சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு உத்தரவிட்டது. இதை பாஜக மற்றும் இந்து அமைப்புகள் எதிர்த்து திப்பு சுல்தான் ஜெயந்தியின்போது மாநிலம் முழுக்க பெரும் போராட்டங்களை நடத்தி வருவது வாடிக்கை என்பது நினைவு கூரத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+