அலறிய மக்கள்.. 2 கிராமங்களை விழுங்கிய வெள்ளம்! வயநாடு நிலச்சரிவில் என்ன நடந்தது? பதறவைக்கும் வீடியோ
திருவனந்தபுரம்: கேரளா மாநிலம் வயநாட்டில் உள்ள முண்டக்கரை, சூரல்மலை கிராமங்களில் கடந்த மாதம் 30ம் தேதி அதிகாலையில் நிலச்சரிவு, கடும் வெள்ளம் ஏற்பட்டது. இதில் 2 கிராமங்களும் முற்றிலுமாக அழிந்துபோய் உள்ளது. இந்நிலையில் தான் கடந்த 30ம் தேதி 2 கிராமங்களையும் வெள்ளம் எப்படி தாக்கியது என்பது தொடர்பான பதறவைக்கும் சிசிடிவி கேமராவில் பதிவான வீடியோக்கள் வெளியாகி திடுக்கிட வைத்துள்ளது.
கேரளா மாநிலம் வயநாடு மாவட்டம் முண்டக்கை, சூரல்மலை உள்ளிட்ட மலைக்கிராமங்களில் கடந்த மாதம் 30ம் தேதி அதிகாலையில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. அங்கு பெய்த கனமழையின் காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் முண்டக்கை கிராமம் முழுவதுமாக அழிந்த நிலையில் சூரல்மலை கிராமம் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது.

மேலும் நிலச்சரிவு, வெள்ளத்தில் 1000க்கும் அதிகமானவர்கள் சிக்கினர். இதில் 400க்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ள நிலையில் 100க்கும் அதிகமானவர்களின் நிலை என்ன என்று தெரியாத நிலை உள்ளது. மேலும் நிலச்சரிவில் சிக்கிய ஏராளமானவர்கள் மீட்கப்பட்டு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கேரளா அரசின் கணக்கின்படி நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களில் 225 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 119 பேரின் டிஎன்ஏ முடிவுகள் கிடைத்துள்ள நிலையில் அதனை வைத்து அடையாளம் காணும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் 119 பேரின் நிலை என்ன? என்பது தெரியவில்லை. தற்போது முண்டக்கரை, சூரல்மலையில் முதற்கட்ட மீட்பு பணிகள் முடிவடைந்த நிலையில் புனர்வாழ்வு நடவடிக்கைகள் தொடங்கி உள்ளன.
கண்ணில் பட்ட உண்டியல்.. கைநிறைய பணத்தை எடுத்து செலுத்திய கனிமொழி எம்பி.. நெகிழ்ந்துபோன குமரி
இத்தகைய சூழலில் தான் தற்போது திடுக்கிட வைக்கும் வீடியோக்கள் வெளியாகி உள்ளது. அதாவது கடந்த மாதம் இறுதியில் சூரல்மலை, முண்டக்கை பகுதியில் அதிகளவில் மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக கடந்த 30ம் தேதி அதிகாலையில் திடீரென்று மலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. மேலும் கனமழையின் காரணமாக அந்த கிராமங்களையொட்டி ஓடும் சாலியாறு ஆற்றில் கடும் வெள்ளம் ஏற்பட்டது.
இந்நிலையில் தான் முண்டக்கை மற்றும் சூரல்மலை ஆகிய 2 கிராமங்களில் வெள்ளம் தாக்கியது தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது. வீடு, கடைகளில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகள் தற்போது வீடியோவாக வெளியாகி உள்ளது. அதாவது அதிகப்படியான மழையால் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. சூரல்மலை மற்றும் முண்டக்கரை கிராமங்களில் இந்த வெள்ளம் நுழைந்தது.
சகதியில் கால் படாதா? காரை விட்டு இறங்கி வர மாட்டீங்களோ? வயநாட்டில் ராகுலிடம் சண்டைக்கு போன மக்கள்
வீடு மற்றும் கடைகளில் மக்கள் தூங்கி கொண்டிருந்த நிலையில் கண் இமைக்கும் நொடியில் ஆக்ரோஷமாக வெள்ளம் தாக்கி அவர்களை அடித்து சென்றது. மேலும் வீடு, கடைகளில் இருந்த பொருட்கள், அங்கு நிறுத்தப்பட்டு இருந்த வாகனங்களை வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்ட காட்சிகள் வீடியோவாக வெளியாகி உள்ளன.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications