சொக்க வைக்கும் செம அழகு.. நம்ம குமரியில்! ரீல்ஸ், ஷார்ட்ஸ்களில் வரும் மாத்தூர் தொட்டி பாலம் -போலாமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: யூடியூப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக்குகளில் ரீல்ஸ்களாகவும், சார்ட்ஸ்களாகவும் வரும் ஒரு இடத்தை பற்றிதான் நான் பார்க்கப்போகிறோம்.

நீண்ட, ராட்சத தூண்கள் மீது ஆகாசமாக நிற்கும் பாலம். அதில் ஒரு நீளமான தண்ணீர் தொட்டி. மறுபக்கம் பக்கம் நடைபாதை, அதை சுற்றிலும் தென்னை தோப்புகள். இந்த காட்சியை ஒரு நிமிடம் கண்ணை மூடி யோசித்தால் நிச்சயம் எங்கோ பார்த்ததை போன்ற உணர்வு வரும். சமூக வலைதளங்களை அதிகம் பயன்படுத்துவோர் இதை நிச்சயம் பார்த்து இருப்பீர்கள். அதுதான் மாத்தூர் தொட்டிப் பாலம். மாத்தூர் தொங்கு பாலம் என்று இது அழைக்கப்படுகிறது. இந்த சுற்றுலா பதிவை இம்முறை சுற்றி வளைத்து பேசாமல் நேராக விசயத்துக்கு வருவோம்.

How to go to Mathur Thotti palam in Kanyakumari?

மேற்கு தொடர்ச்சி மலைவாசமும், அதிலிருந்து ஊற்றெடுத்து ஓடும் ஆறுகளும், அந்த ஆறுகளை உள்வாங்கிக்கொள்ளும் முக்கடல் சங்கமும் என சுற்றுலா விரும்பிகளின் சொர்க்க பூமியாக இருக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தை பற்றி எழுதுவதற்கு எழுத்துக்களை கடன் வாங்க வேண்டும். அப்படிப்பட்ட கன்னியாகுமரியில்தான் இந்த மாத்தூர் தொட்டி பாலமும் அமைந்து உள்ளது. ஆசிய அளவில் இந்த பாலத்துக்கு முக்கிய சிறப்பு ஒன்று இருக்கிறது. அதை பதிவின் இறுதியில் பார்ப்போம்.

ரீல்ஸ், ஷார்ட்சில் இதை பார்த்தவர்களுக்கு எப்படியாவது இந்த இடத்துக்கு சென்று ஒரு முறையாவது குளித்துவிட்டு வரலாமே என்று தோன்றும் அளவுக்கு அத்தனை அழகாக டிரோன் காட்சிகளில் மாத்தூர் தொட்டி பாலம் பதிவாகி இருக்கும். மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான மகேந்திரகிரியில் இருந்து வரும் பாறையாற்றின் குறிக்கே கட்டப்பட்டு இருக்கும் இந்த தொட்டி பாலம் 115 அடி உயரும், 1 கிமீ நீளம் கொண்டதாகவும். இரு மலைகளுக்கு இடையேயான நதியின் மேலே கட்டப்பட்டு இருக்கும் இந்த பாலம், ஒரு மலையில் இருந்து மற்றொரு மலைக்கு தண்ணீரை கொண்டு செல்கிறது.

இந்த தொட்டியின் 7 அடி உயரம் 7.6 அடி அலகமுமாகும். அதாவது ஒரு நபரை முழுமையாக உட்கொள்ளும் அளவும் ஆழம் கொண்டது. குமரி மாவட்டத்தில் உள்ள விளவங்கோடு மற்றும் கல்குளம் பகுதிகளில் வறட்சியை கட்டுப்படுத்தி விவசாயம் செய்வதற்காக கட்டப்பட்டது இது. ஆனால், இன்று குமரி மாவட்டத்தின் மிக முக்கிய சுற்றுலா தலமாக திகழ்ந்து வருகிறது. இந்தோனேசியாவின் பாலி உள்ளிட்ட பகுதிகளில் உயரமான மலைகளின் மீது கட்டப்பட்ட நீச்சல் குளத்தில் குளித்துக்கொண்டே புகைப்படம் வீடியோக்களை பலர் வெளியிட்டு இருப்பதை பார்த்திருப்பீர்கள். ஆனால், அதையெல்லாம் விட தரமான இடம் நமது தமிழ்நாட்டில் இருக்கிறது. அதுதான் மாத்தூர் தொட்டிப் பாலம்.

How to go to Mathur Thotti palam in Kanyakumari?

ஆசிய அளவில் இதற்கு ஒரு சிறப்பு உள்ளது என்று சொன்னோம் அல்லவா. ஆம், இதுதான் ஆசியாவிலேயே மிக நீளமான தொட்டி பாலமாகும். 1 கிமீ நீளம் கொண்ட இதை 28 ராட்சத தூண்கள் தாங்கி நிற்கின்றன. தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் காமராசரின் முயற்சியால் கட்டப்பட்ட இந்த தொட்டிப் பாலம் அருகே குழந்தைகள் பூங்கா மற்றும் அவர்களுக்கென குளியல் பகுதிகளும் உள்ளன. காலை 6.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை சுற்றுலா பயணிகள் இங்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.

அக்டோபர் முதல் மார்ச் வரை இதை பார்வையிட சிறந்த நேரமாகும். இன்னும் ஒரு மாதம்தான் உள்ளது. நேரத்தை வீணடிக்காமல் வண்டிகையை குமரி பக்கம் திருப்புங்கள். மாத்தூர் அருகே குழித்துறை ரயில் நிலையம் உள்ளது. அங்கிருந்து ஆட்டோ அல்லது பேருந்து மூலமாக 14 கிமீ பயணித்தால் மாத்தூர் வந்துவிடலாம். கன்னியாகுமரியில் இருந்து 48 கிமீ தொலைவிலும், நாகர்கோயிலில் இருந்து 28 கிமீ தூரத்திலும் திருவனந்தபுரத்தில் இருந்து 52 கிமீ தூரத்திலும் இது அமைந்து உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+