யார் கண்ணுபட்டதோ... மேற்கு தொடர்ச்சி மலையின் தேவதை.. கொடைக்கானல் இப்ப எப்படி இருக்கு தெரியுமா?
கொடைக்கானல்: யார் கண்ணுபட்டதோ.. மேற்கு தொடர்ச்சி மலையில் தேவதையாக வலம் வந்த இளவரசி தாங்க முடியாத இழப்பை சந்தித்துள்ளாள்.. காட்டுத் தீயால் மரங்கள், தாவரங்கள் கருகியதால் களை இழந்த நிலையில் கொடைக்கானல் வனப்பகுதி காணப்படுகிறது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் இந்தியாவின் புகழ் பெற்ற கோடைவாசல் தளங்களில் ஒன்று.. சர்வதேச அளவில் புகழ் பெற்ற கொடைக்கானல் இயற்கை அப்படியே இயற்கையாக இருக்கும் முக்கியமான சுற்றுலா தலம் ஆகும்.. இங்கு பசுமை பாலைவனம் என்று அழைக்கப்படும் தேயிலை தோட்டம் கிடையவே கிடையாது.. அதேநேரம் காபி, அவகோடா, மலைவாழை, பூண்டு, உருளை கிழங்கு,முள்ளங்கி, கேரட், ப்லம்ஸ், பேரிக்காய் போன்றவை அதிக அளவில் பயிரிடப்படுகின்றன.

இந்த பயிர்கள் தான் கொடைக்கானல் சுற்றியுள்ள மலைப்பகுதிகளில் விவசாயம் செய்யப்படுகிறது. கொடைக்கானலை சுற்றி தோட்டப்பயிர்கள் தான் இருக்கும். அதேபோல் அடர்ந்த வனப்பகுதிகளை பொறுத்தவரை, பல வனவிலங்குகளின் புகழிடமாக இருக்கிறது.இங்கு பெரிய அளவில் வனவிலங்கு மனித மோதல்கள் இருக்காது. மிக குறைவாகவே அதுவும் சில பகுதிகளில் மட்டுமே இருக்கும். ஓங்கி உயந்த மரங்கள், அடர்ந்த பசுமை வனம் தான் கொடைக்கானல் நகரின் அடையாளம்.
இயற்கை அன்னை இந்த முறை அதிகப்படியான ஓரவஞ்சனை காட்டியதால், கோடை மழை இன்னமும் பெரிய அளவில் ஆரம்பிக்கவில்லை.. சித்திரை தொடங்கும் போது தான் ஓரளவு இங்கு கோடை மழை பெய்ய தொடங்கும். சித்திரை முழுவதுமே அவ்வப்போது கோடை மழை பெய்யும். பங்குனியில் இங்கு பொதுவாக வறட்சி அதிகமாக இருக்கும். கொடைக்கானலில் ஊமை என்று சொல்வார்கள்.. அந்த வெயில் அதிகமாகஇருக்கும். வறட்சி காரணமாக காட்டுத்தீத ஏற்படுவது வழக்கம். அநத வகையில் கொடைக்கானல் மலைப் பகுதியில் வனப் பகுதியில் காய்ந்த சருகுகளில் காட்டுத்தீ பற்றி எரிகிறது. இந்த ஆண்டுகோடைக்கு முன்பே கொடைக்கானல் மலைப் பகுதியில், தரைப்பகுதியை போல் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது.
கொடைக்கானலில் பகலில் அதிகபட்சமாக 24 டிகிரி முதல் 30 டிகிரி செல்சியஸ் வரையில் வெப்பம் பதிவாகி வருகிறது. இரவில் 15 முதல் 22 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகிறது. வெயிலின் தாக்கத்தால் அடிக்கடி காய்ந்தசருகுகளில் தீப்பற்றி, காட்டுத்தீ ஏற்படுவதால் அரிய வகை மரங்கள், தாவரங்கள் கருகி வருகின்றன. இதனால் வனப் பகுதிகள் பசுமை இழந்து கருகிய நிலையில் காணப்படுகின்றன.
வெயிலில் இருந்து தப்புவதற்காகவும், குளுமையை அனுபவிக்கவும் கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகள், இந்த காட்சிகளை பார்த்து கவலை அடைந்துள்ளனர். வேதனைஅடைகின்றனர். தற்போதைய நிலையுல் கோடை மழை பெய்தால் மட்டுமே காட்டுத்தீ பரவுவது தடுக்கப்படும். மேலும், வனப் பகுதியின் வறட்சித் தன்மை மாறி, பசுமை திரும்பத் தொடங்கும் வாய்ப்பு உள்ளது..












Click it and Unblock the Notifications