75 வருசக் கனவு சார்.. இது எங்களுக்கு கருப்பு தங்கம் சார்.. பார்த்ததும் நெகிழ்ந்த நீலகிரி கிராம மக்கள்
உதகை: நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளாகி உள்ள நிலையில் இன்னமும் சில கிராமங்கள் சாலை வசதி பெறாமல் இருந்து வருகின்றன. அதேநேரம் நீலகிரி மாவட்டத்தில் உள்ள யானைப்பள்ளம், சின்னாளகோம்பை பழங்குடியினர் கிராமங்களுக்கு இப்போது தான் முதல்முறையாக தார் சாலை அமைக்கப்பட்டுள்ளன.
மலைகளின் இளவரசியான நீலகிரி பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும், அழுகையும் சோகமும் அதற்குள் ஏராளமாக மறைத்து வைத்திருக்கிறது. இயற்கை பல வசதிகளையும் அள்ளி கொடுத்தாலும், அங்கும் அவர்களுக்கு கிடைக்காத பல விஷயங்கள் இருக்கின்றன. நாம் அங்கு சுற்றுலா மனநிலையில் செல்கிறோம். அங்குள்ள மக்களின் வாழ்வியல் மனநிலையில் யோசித்தால் அடிப்படை வசதிகளுக்கு அவர்கள் ஏங்குவது கண்டிப்பாக புரியும்.

நீலகிரி மாவட்டம் குன்னூரில் இருந்து சுமார் 22 கிலோ மீட்டர் தொலைவில் பில்லூர் மட்டத்தை அடுத்து ஏராளமான மலைகிராமங்கள் அமைந்துள்ளன. தற்போதைய சூழலில் பில்லூர்மட்டம் வரை தான் பேருந்துகள் இயங்கி வருகிறது.
சின்னாளகோம்பை, யானைப்பள்ளம், சடையன் கோம்பை, குரங்குமேடு உள்ளிட்ட மலை கிராமங்களுக்கு செல்லும் மண் சாலை குண்டும் குழியுமாக இருந்ததால்ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் செல்லவே முடியாத நிலை இருக்கிறது. நோயாளிகள் மற்றும் கர்ப்பிணிகளை தொட்டில் கட்டி மருத்துவமனைக்கு தூக்கி செல்ல வேண்டிய அவலமும் இருந்து வந்தது.

சின்னாளகோம்பை, யானைப்பள்ளம், சடையன் கோம்பை, குரங்குமேடு உள்ளிட்ட மலை கிராமங்களுக்கு செல்லும் மண் சாலை குண்டும் குழியுமாக இருந்ததால்ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் செல்லவே முடியாத நிலை இருக்கிறது. நோயாளிகள்மற்றும் கர்ப்பிணிகளை தொட்டில் கட்டி மருத்துவமனைக்கு தூக்கி செல்ல வேண்டிய அவலமும் இருந்து வந்தது.
மழைகாலம் வந்தால் மண் சாலை சேறும் சகதியுமாக மாறி வாகனங்களே போக முடியாத நிலை ஏற்படும். மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் தான் அவசர தேவைகளுக்கு கூட போய் வரமுடியாமல் வாழ்ந்து வருகிறார்கள். இதன் காரணமாக யானைப்பள்ளம், சடையன்கோம்பை, சின்னாள கோம்பை பழங்குடியின கிராமங்களுக்கு செல்லும் மண் சாலையை தார் சாலையாக மாற்ற வேண்டுமென மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தார்கள்.
இந்நிலையில் உலிக்கல் பேரூராட்சி சார்பில் பில்லூர் மட்டம் முதல் யானைப்பள்ளம் வரையில் 8 கி.மீ. சாலையை சீரமைக்க ரூ.8 கோடிக்கு திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. முதற்கட்டமாக பில்லூர் மட்டத்திலிருந்து தார் சாலை அமைக்க 1.2 கிலோ மீட்டர் நீளத்துக்கு ரூ.1 கோடியே 50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்தது.

அதன்பின்னர் யானைப்பள்ளம் வரை சாலையில் உள்ள பள்ளங்கள் மூடப்பட்டு, அவை சமன் செய்யப்பட்டது. கொரோனா ஊரடங்கு உள்பட பலவேறு பிரச்சனைகளுக்கு பின்னர் தார் சாலை அமைக்கும் பணிகள் ஒருவழியாக நிறைவடைந்துள்ளன. சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக சாலை அமைக்கப்பட்டுள்ளதால் அந்த பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அதேநேரம் யானைபள்ளம் பகுதியில் இருந்து உலிக்கல் பேரூராட்சி மற்றும் குன்னூருக்கு செல்ல பேருந்துகள் இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். அப்படி செய்தால் இனி 6 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டிய அவசியம் இருக்காது என்று நெகிழ்ந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications