வடநெம்மேலி பண்ணையின் 5 ஆண்டு ரகசியம்.. பார்வையாளர்களுக்கு முதல் முறையாக அனுமதி
மாமல்லபுரம்: சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் மாமல்லபுரத்துக்கும், சென்னைக்கும் மத்திய பகுதியில் உள்ள வடநெம்மேலியில் மிகப்பெரிய முதலைப்பண்ணை அமைந்துள்ளது. இங்கு ஏராளமான முதலைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அதேபோல் ராட்சத ஆமைகள், மலைப்பாம்புகளும் பராமரிக்கப்பட்டு வருகிறது. கடந்த 5 ஆண்டுகளாக முட்டையிட்டு குஞ்சு பொரித்த 2 இந்திய மலைப்பாம்பு குட்டிகள். இவை 16 அடி நீளமாக ராட்சத சைஸில் வளர்ந்துள்ளன. இந்த மலைப்பாம்புகளை பார்வையிட பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே மிகப்பெரிய முதலைப்பண்ணை சென்னையிலிருந்து (திருவான்மியூர்) சுமார் 30 கி.மீ. தொலைவிலும், மாமல்லபுரத்திலிருந்து சுமார் 25 கி.மீ. தொலைவிலும் வடநெம்மேலியில் அமைந்துள்ளது. சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள புகழ் பெற்ற சுற்றுலா தலமான மாமல்லபுரத்துக்கு பக்கத்தில் உள்ள இந்த பண்னைக்கு பல சர்வதேச சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

இந்தியாவிலுள்ள முதலை வகைகளில் முக்கியமானதாக கருதப்படும் நன்னீர் முதலைகள், அமெரிக்காவில் உள்ள அலிகேட்டர் முதலைகள், உப்பு நீர் முதலைகள், சதுப்பு நில முதலைகள், நீள வாயுடைய கரியல் ரக முதலைகள் என பல்வேறு வகை முதலைகள் இந்த பண்ணையில் உள்ள நீர் குளங்களில் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
மேலும் ராட்சத ஆமைகள், மலைப்பாம்புகளும் பராமரிக்கப்படுகிறது. கடந்த 5 ஆண்டுகளாக முட்டையிட்டு குஞ்சு பொரித்த 2 இந்திய மலைப்பாம்பு குட்டிகள், பார்வையாளர்களுக்கு அனுமதி இன்றி தனி அறையில் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த மலைப்பாம்புகளுக்கு எலி, தவளை உள்ளிட்டவைகள் உணவுகளாக வழங்கப்பட்டு வந்தன. தற்போது முதலைப்பண்ணைக்கு வரும் பார்வையாளர்கள் கண்டுகளிப்பதற்காக காற்றோட்டம் உள்ள 2 கண்ணாடி அறைகளில் 16 அடி நீளத்தில் வளர்ந்துள்ள இந்த 2 மலைப்பாம்புகளும் காட்சி படுத்தப்பட்டிருக்கிறது.
இங்குள்ள பெண் மலைப்பாம்புகள் தலா 50 கிலோ எடை உள்ளவை ஆகும். இந்த மலைப்பாம்புகள் ஒரே நேரத்தில் 100 முட்டைகள் இடும் தன்மை வாய்ந்தவை ஆகும். இந்த மலைப்பாம்பு முட்டைகளை சுற்றி தன் உடலை சுருட்டி வைத்து கொண்டு தசைகளை சுருக்குவதன் மூலம் வெப்ப நிலையை சீராக்கி முட்டைகளை அடைகாக்கும் இயல்புடையவை ஆகும்.
தற்போது கோடைகாலம் என்பதால் குளிர்ச்சியான சூழல், தண்ணீர் வேண்டும் என்பதால் அதன் தேவைகளை பூர்த்தி செய்ய தனியாக பணியாளர்கள் நியமிக்கப்பட்டு மலைப்பாம்பினை கண்காணித்து வருகிறார்கள். தற்போது கோடை விடுமுறையை முன்னிட்டு தங்கள் குழந்தைகளுடன் முதலை பண்ணைக்கு வரும் பார்வையாளர்கள் அந்த மலைப்பாம்புகளை பார்த்து ரசித்து புகைப்படம், செல்பி எடுத்து மகிழ்கிறார்கள்.
வடநெம்மேலி முதலைப்பண்ணைக்கு போகும் சுற்றுலா பயணிகளே, அதன் மிக அருகிலேயே முட்டுக்காடு படகு குழாம் அமைந்துள்ளது. முதலைப்பண்ணையில் இருந்து சென்னை நோக்கிச் செல்லும் சாலையில் 10 கிமீ தூரத்தில் முட்டுக்காடு உள்ளது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தால் நடத்தப்படுகிறது. இங்கு துடுப்பு படகுகள் , மிதி படகுகள் மற்றும் மோட்டார் படகுகள் வசதி உள்ளது.
அதேபோல் வடநெம்மேலி முதலைப்பண்ணையில் இருந்து மாமல்லபுரத்தைத் தாண்டி, புதுச்சேரி செல்லும் சாலையில் சுமார் 60 கி.மீ. தொலைவில் முதலியார்குப்பம் படகு குழாம் அமைந்துள்ளது. இதனை 'ரெயின்-டிராப் போட் ஹவுஸ்' என்றும் அழைப்பார். இங்கு கடலோரக் காயல் பகுதியில் படகு சவாரி செய்வது மிகவும் பிரபலம் ஆகும். மகாபலிபுரம் சுற்றுலா செல்பவர்கள் இந்த இரண்டு இடங்களையும் தவறவிட வேண்டாம்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications