கொடைக்கானல் வருவோரை உற்சாகத்தில் ஆழ்த்தும் புல்லாவெளி அருவி.. ஆபத்தை அறியாத மக்கள்
கொடைக்கானல்: தற்போது கொடைக்கானல் வருவோர் புல்லாவெளி அருவிக்கு சென்று உற்சாகமாக குளித்து மகிழ்கிறார்கள்.. தடை செய்யப்பட்ட இந்த அருவி எவ்வளவு ஆபத்தான அருவி என்பது அந்த பகுதி மக்களுக்கு மட்டுமே தெரியும். அதேநேரம் தற்போது தண்ணீர் குறைவாக உள்ள நிலையில், ஆபத்தை உணராமல் போய் பலரும் ஆட்டம் போடுகிறாரகள்.
இந்தியாவில் உள்ள சர்வேதச அளவில் புகழ் பெற்ற சுற்றுலா தலங்களில் தமிழ்நாட்டின் கொடைக்கானல் முக்கியமான இடத்தில் உள்ளது. வெளிநாட்டில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் பலருக்கும் பிடித்த இடமாக கொடைக்கானல் இருக்கிறது. இந்தியா முழுவதிலிருந்தும் ஆண்டு முழுவதும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வரும் நகரமாகவும் கொடைக்கானல் இருக்கிறது.

பசுமை பாலைவனம் என்று அழைக்கப்படும் தேயிலை தோட்டங்கள் இல்லாத பகுதி.. முற்றிலும் மழை விவசாயம் தான் பிரதான தொழிலாக உள்ளது. பூண்டு, பிளிம்ஸ், அவகோடா, மலை வாழைப்பழம், பேரிக்காய், உருளைக்கிழங்கு, முள்ளங்கி போன்றவை கொடைக்கானல் பகுதிகளில் அதிகம் பயிரடப்படுகிறது.
இயற்கை இயற்கையாகவே இருக்கும் அடர்ந்த காடுகளையும், மலைகளையும் கொண்ட பகுதியாக கொடைக்கானல் இருக்கிறது. கொடைக்கானல் தரையில் இருந்து 52 கிலோ மீட்டர் தூரம் பயணித்தால் மட்டுமே அடைய முடியும். கும்பக்கரையில் இருந்து நேரடியாக செங்குந்தான பாதையில் ஏறி வந்தால் கூட 15 கிலோ மீட்டர் அப்படியே ஏரி வரவேண்டும்.. அவ்வளவு உயரமான இடத்தில் கொடைக்கானல் இருப்பதால் வெப்பநிலை மிகஅதிகமாக இருக்காது. மலைக்காலங்களில் அல்லது கோடை மழை பெய்யும் காலங்களில் அடிக்கடி மஞ்சமூட்டம் எனப்படும் தண்ணீருடன் கூடிய மேகங்கள் அப்படி தெளித்துவிட்டு செல்லும்..அந்த மஞ்சமூட்டம் கொடைக்கானல் வருவோரை பரவசத்தில் ஆழ்த்தும். வெயில் காலத்தில் இப்படி இருக்காது என்றாலும் அருமையான தட்ப வெப்ப நிலை.. ஆளை மயக்கும் ஏரிகள்.. வானமே வியந்து போகும் அளவிற்கு இயற்கை வளங்கள்.. திரும்பிய பக்கம் எல்லாம் மரங்களும், காடுகளும் இருக்கிறது.

கொடைக்கானலில் செயற்கையாக வடிவமைக்கப்பட் பிரம்மாண்டமான நட்சத்திர ஏரி, செயற்கையாக உருவாக்கப்பட்ட பேரிஜம் ஏரி இருக்கிறது. மன்னவனூர் ஆட்டுப்பண்ணை, பூம்பாறை முருகன் கோவில், குணா குகை, கோக்கர் வாக், பசுமை பள்ளத்தாக்கு, அப்சர்வேட்டரி, மிகப்பெரிய பூங்கா, பைன் மரக்காடுகள், சிறுவர் பூங்கா.. படகு இல்லங்கள் என அதிகமாக இருக்கிறது. இதனால் கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகிறார்கள். கோடைக்காலம் தொடங்கிவிட்ட நிலையில், கொடைக்கானல் சீசன் களைகட்ட தொடங்கவில்லை.. காரணம் பள்ளிகளில் ஆண்டு தேர்வு நடப்பது தான். ஆண்டு தேர்வுகள் முடிந்த பின்னரே சீசன் களைகட்டும் என தெரிகிறது. அதேநேரம் கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் இருக்கிறார்கள். தொடர் விடுமுறை நாட்கள், வார விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருக்கும்.
அந்த வகையில், கடந்த சனி மற்றும் ஞாயிறு ஆகிய வாரவிடுமுறை என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு படையெடுத்து வந்தனர். இருசக்கர கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் அவர்கள் வந்தார்கள். ஒரேநேரத்தில் ஏராளமான வாகனங்கள் வந்ததால் நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் இருந்தது.
வனப்பகுதியில் உள்ள மோயர் பாயிண்ட், பைன்மரக்காடு, குணா குகை, பில்லர்ராக் உள்ளிட்ட சுற்றுலா இடங்களிலும், பசுமை பள்ளத்தாக்கு, பேரிஜம் ஏரி, மன்னவனூர் சூழல் சுற்றுலா மையம் உள்ளிட்ட பகுதிகளை சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் ரசித்தனர். இதற்கிடையே கொடைக்கானல் கீழ்மலையில், பெரும்பாறை அருகே புல்லாவெளி நீர்வீழ்ச்சி அமைந்திருக்கிறது.
ஆபத்தான இந்த நீர்வீழ்ச்சிக்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். இருப்பினும் அருவியில் குளிப்பதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். மழை பெய்யாத நிலையில் புல்லாவெளி நீர்வீழ்ச்சிக்கு தண்ணீர் வரத்து குறைவாக உள்ளது.
எனினும் வார விடுமுறை நாட்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் வந்து குளிக்கிறார்கள். இந்த அருவி ஆபத்தான அருவியாகும். தண்ணீர் நிறைய போகும் நாட்களிலும், குறைவான நாட்களிலும் சரி, கவனமாக போகாவிட்டால் உயிரே போய்விடும். இங்கு குளிக்க போன பலர் பலியாகி உள்ளனர்.












Click it and Unblock the Notifications