Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கொடைக்கானல் டூ மூணாறு எஸ்கேப் ரூட்டில் பயணிக்க ஆசையா? அடர்ந்த காட்டிற்குள் சுற்றுலா போகலாம்

Subscribe to Oneindia Tamil

கொடைக்கானல்: கொடைக்கானல் டூ மூணாறு எஸ்கேப் ரூட்டில் பயணிக்க ஆசையாக உள்ளதா உங்களுக்கு.. அடர்ந்த காட்டுக்குள் சுற்றுலா போக விருப்பம் உள்ளதா, நிச்சயம் சில கிலோ மீட்டர் தூரம் போக முடியும்.. எப்படி என்பதை பார்ப்போம்.

இந்தியா சுதந்திரம் அடையும் முன்பு கொடைக்கானல் நகரில் ஏராளமான ஆங்கிலேயர்கள் வசித்து வந்தார்கள். ஐரோப்பாவில் நல்ல குளிரில் வளர்ந்த ஆங்கிலேயர்களுக்கு வெயில் ஆகாது என்பதால், பாதி நாட்கள் கொடைக்கானல், ஊட்டி, மூணாறு போன்ற பகுதிகளில் குடியிருப்பதை பெரும்பாலும் விரும்பினார்கள். அதற்காகவே கொடைக்கானல் , மூணாறு, ஊட்டிக்கு போக்குவரத்து கட்டமைப்பை உருவாக்கினார்கள்.

Want to travel on Kodaikanal to Munnar Escape Route? You can go for a picnic in the dense forest

இதனிடையே கடந்த 1944-ல், ​இரண்டாம் உலகப் போ​ர் காலகட்டத்தில் அதாவது கிட்டத்தட்ட சுமார் 80 வருடத்திற்கு முன்பு சென்னை மீது ஜப்பான் அணுகுண்டு வீசப்போவதாக எழுந்த தகவலை அடுத்து, அன்றைக்குச் சென்னையில் இருந்த ஆங்கிலேய அதிகாரிகள், உடனடியாகத் தங்கள் நாட்டுக்கு தப்பி ஓடுவதற்கு ஒரு பாதையைத் தேர்ந்தெடுத்தார்கள். அப்படி அவர்கள் நேர்ந்தெடுத்த பாதை தான் எஸ்கேப் ரூட் எனப்படும் எஸ்கேப் பாதை.

கொடைக்கானலில் மதிகெட்டான் சோலை மற்றும் பேரிஜம் லேக் வழியாக அடர்ந்த காட்டிற்குள் பயணித்து டாப் ஸ்டேஷன் செல்ல வேண்டும். ​​அங்கிருந்து எல்லப்பட்டி, மாட்டுப்பட்டி, கிராம்ஸ்லேண்ட் வழியாக மூணாறை அடைந்து, அங்கிருந்து அடிமாலி, கோதமங்கலம் வழியாக கொச்சிக்கு சென்று, கப்பல் மார்க்கமாக இங்கிலாந்துக்கு​ச் செல்வது அவர்களின் திட்டமாக இருந்தது. இதற்காக அமைக்கப்பட்ட பாதை தான் கொடைக்கானல் மூணாறு பாதை..

பசுமை பள்ளத்தாக்கு வழியாக கேரள சோதனை சாவடியை கடந்து சென்றால் 11 கிலோ மீட்டர் தூரத்தில் தேனி மாவட்டத்தின் டாப் ஸ்டேசன் உள்ளது. இங்கிருந்தும் கேரளா எளிதாக செல்ல முடியும். 1990கள் வரை இந்த பாதையில் செல்ல அனுமதி இருந்தது. இடையில் ஏற்பட்ட சில பிரச்சனைகள் காரணமாக இந்த சாலையை கேரள வனத்துறை மூடியது. கடத்தல் சாலையாக இருந்ததாக கூறி அதனை நிரந்தரமாக மூடிவிட்டது. இந்த பாதை தற்போது அடர்ந்த வனப்பகுதியாக உள்ளது. வனவிலங்குகள் வாழும் பகுதியாக உள்ளது.

அதேநேரம் கொடைக்கானலில் இருந்து மூணாறுக்கு இன்னொரு பாதையும் உள்ளது. கொடைக்கானலில் இருந்து மன்னவனூர், பூண்டி கிளாவரை வந்து அங்கிருந்து சில கிலோமீட்டர் தூரம் கரடு முரடான பாதையை கடந்து சென்றால் கேரளாவின் வட்டவடை கோவிலூர் வந்துவிடும். அங்கிருந்து சாலை வழியாக எளிதாக மூணாறு செல்ல முடியும். ஆனால் இந்த பாதையும் மோசமாக உள்ளது. சில கிலோ மீட்டர் தூரம் சாலையே இல்லை. இதனால் வட்ட வடை, கோவிலூர், கொட்டக்கம்பூர் உள்ளிட்ட 28 மலைக் கிராமங்களில் வாழும் தமிழக விவசாயிகள், இன்றும் தங்கள் விளைபொருட்களை குதிரை மற்றும் கழுதைகளில் ஏற்றிக்கொண்டு, கொடைக்கானலுக்குக் கொண்டு சென்று வருகிறார்கள்.

சரி விஷயத்திற்கு வருவோம். கொடைக்கானலில் மதிகெட்டான் சோலை மற்றும் பேரிஜம் லேக் மன்னவனூர் வரை அடர்ந்த காட்டிற்குள் எஸ்கேப் ரூட்டில் (கொடைக்கானல் மூணாறு சாலையில்) பயணிக்க முடியுமா? நிச்சயம் குறிப்பிட்ட தூரம் வரை பயணிக்க முடியும். பாரஸ்ட் வேன் சபாரி மூலம் பயணிக்க வேண்டும்.

எஸ்கேப் ரூட்டில் பயணிக்க விரும்புவோர் காலை 7.30 மணி முதல் 9.30 மணிக்குள் கொடைக்கானல் டிஎப்ஓ அலுவலகம் சென்று பாஸ் வாங்க வேண்டும். ஒரு காருக்கு 200 ரூபாய் கட்டணம் வசூலிப்பார்கள்.. நீங்கள் உங்கள் காரில் கொடைக்கானலில் உள்ள மோயர் பாய்ண்டுக்கு வர வேண்டும். அங்கிருந்து தான்ரைடு ஸ்டார்ட் ஆகும். நீங்கள் உங்கள் காருடன் சோதனை சாவடிக்கு காலை 9 மணி முதல் 12 மணிக்குள் வர வேண்டும் . அதன்பின்னர் டோக்கன் இருந்தாலும் விடமாட்டார்கள்.. வாடகை காரிலும் புக் செய்து வர முடியும். கொடைக்கானல் பேருந்து நிலையம் சென்றால் அதுபற்றி விரிவாக அறிய முடியும்.. காரில் உள்ளே போய் வியூ பாயிண்ட்டுகளை சுற்றி பார்க்க முடியும்.

வேன் சபாரி போக வேண்டும் என்று விரும்பினால், மன்னவனூர் ஏரி வரை செல்ல முழு பயணம் செல்ல ரூ.250 முதல் 300 வரை ஒருவருக்கு வாங்குவார்கள். 4 முதல் 5 மணி நேரம் சுற்றிபார்க்கலாம்.. பாதி பயணம் போதும் என்றால் பேரிஜம் ஏரி வரை கூட்டிச்செல்வார்கள் அதற்கு ரூ. 200 தலா ஒருவருக்கு வாங்குவார்கள். 2 முதல் 3 மணிநேரம் சுற்றிக்காட்டுவார்கள். இந்த எஸ்கேப் சாலையில் பாரஸ்ட் வேனில் பயணிக்கும் போது ஏராளமான வனவிலங்குகளை நீங்கள் பார்க்க முடியும்.

Want to travel on Kodaikanal to Munnar Escape Route? You can go for a picnic in the dense forest

அதேநேரம் பேரிஜம் ஏரியில் தான் எஸ்கேப் ரூட் பிரிந்து போகும்.. அந்த சாலையில் நம்மால் பயணிக்க முடியாது. பேரிஜம் ஏரியில் இருந்து பிரிந்து மன்னவனூர் ஏரியுடன் முடிந்துவிடும். பேரிஜம் ஏரியில் இருந்து சரியாக 27 கிலோ மீட்டர் தூரத்தில் தான் தேனி மாவட்டத்தின் டாப் ஸ்டேசன் உள்ளது. அங்கிருந்து எளிதாக மூணாறு போக முடியும். ஆனால் இந்த பாதையில் யாரும் பயணிக்க முடியாது. தடை செய்யப்பட்ட பாதையாகும். அதேநேரம் மூணாறில் இருந்து தமிழக எல்லையான கிளாவரை பகுதியை நோக்கி குறிப்பிட்ட தூரம் கேரள வனத்துறையின் ஜீப் சபாரி மூலம் போக முடியும்.

Want to travel on Kodaikanal to Munnar Escape Route? You can go for a picnic in the dense forest
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+