Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திண்டுக்கல்லை ‘நனைத்த’ மழை.. அப்படியே சரிந்து விழுந்த வீடு.. பொதுமக்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு..!

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் கடந்த சில தினங்களாக பெய்த மழையின் காரணமாக சுமார் 75 ஆண்டுகள் பழமையான இரண்டு மாடி குடியிருப்பின் முன் பகுதி இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக யாரும் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்நிலையில் மழையால் பாதிக்கப்பட்டால் மக்கள் தொடர்பு கொள்ள உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல்லில் 19, 20 தேதிகளில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது. கொடைக்கானல், ஆடலூர், பன்றிமலை, ஒட்டன்சத்திரம், நத்தம் உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது.

75 year old house collapsed due to heavy rains in the last few days In Dindigul

அதே நேரத்தில் திண்டுக்கல், வேடசந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இரண்டு நாட்களாக லேசான சாரல் மழை மட்டுமே இருக்கிறது. இந்த நிலையில் திண்டுக்கல்லில் கடந்த சில தினங்களாக பெய்த மழையின் காரணமாக சுமார் 75 ஆண்டுகள் பழமையான இரண்டு மாடி குடியிருப்பின் முன் பகுதி இடிந்து விழுந்தது.

திண்டுக்கல்லில் மழை: திண்டுக்கல் நகர் பகுதியில் பிச்சை முகைதீன் சந்தில் சுமார் 75 ஆண்டுகள் பழமையான இரண்டு மாடி குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் தரைதளத்தில் ஒரு குடும்பமும், முதல் தளத்தில் மற்றொரு குடும்பமும் வாடகைக்கு குடியிருந்து வருகின்றனர். இந்நிலையில் திண்டுக்கல்லில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையின் காரணமாக பழமையான கட்டிடத்தில் முன் பகுதி மழை நீர் ஊறி மிகவும் சேதம் அடைந்த நிலையில் காணப்பட்டுள்ளது.

75 year old house collapsed due to heavy rains in the last few days In Dindigul

சரிந்த வீடு: எதிர்பாராத விதமாக இன்று மதியம் மூன்று மணியளவில் கட்டிடத்தின் முன் பகுதி திடீரென இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தின் போது யாரும் அருகில் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த திண்டுக்கல் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். தொடர்ந்து இடித்த கட்டிடத்தை அப்புறம் படுத்தும் பணியில் வீட்டின் உரிமையாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

காட்டாற்று வெள்ளம்: கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்ட நிலையில் சில இடங்களில் வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. பல இடங்களில் மரங்கள் விழுந்து மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து பொதுமக்களுக்கு உதவி எண்களை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,"திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று கனமழை அல்லது மிக கன மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

75 year old house collapsed due to heavy rains in the last few days In Dindigul

கட்டுப்பாட்டு அறை: முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகங்கள், மாநகராட்சி மற்றும் நகராட்சி அலுவலகங்களில் கட்டுப்பாட்டு அறை 24X7 என்ற முறையில் செயல்பட உள்ளது. எனவே பொதுமக்கள் மழை பாதிப்பு மற்றும் மழை தொடர்பான உதவிகள் குறித்து கட்டுப்பாட்டு தொலைபேசி மற்றும் செல்லிடைபேசி எண்களை தொடர்புகொள்ளலாம்.

வ.எண் அலுவலகத்தின் பெயர் தொடர்புகொள்ள வேண்டிய எண்கள்
1. மாவட்டஆட்சியர் அலுவலகம், திண்டுக்கல், 0451-1077, 0451-2400162, 2400163, 2400164, 2400167
2. திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியர் அலுவலகம் 0451-2427304
3. திண்டுக்கல் கிழக்கு, வட்டாட்சியர் அலுவலகம் 0451-2471305
4. நத்தம், வட்டாட்சியர் அலுவலகம் 04544-244452
5. நிலக்கோட்டை, வட்டாட்சியர் அலுவலகம் 9445000581, 04543-233631
6. ஆத்தூர், வட்டாட்சியர் அலுவலகம் 9384094523
7. பழனி, வட்டாட்சியர் அலுவலகம் 04545-242266
8. ஒட்டன்சத்திரம், வட்டாட்சியர் அலுவலகம் 04553-241100
9. வேடசந்தூர், வட்டாட்சியர் அலுவலகம் 04551-260224
10. குஜிலியம்பாறை, வட்டாட்சியர் அலுவலகம் 04551-290040
11. கொடைக்கானல், வட்டாட்சியர் அலுவலகம் 04542-240243
12. திண்டுக்கல் மாநகராட்சி 9944570076
13. நகராட்சி, பழனி 7397634377
14. நகராட்சி, ஒட்டன்சத்திரம் 9842370552
15. நகராட்சி, கொடைக்கானல் 04542-241253, 8489886639, 9786016606

75 year old house collapsed due to heavy rains in the last few days In Dindigul

கட்டுப்பாட்டு அறைக்கு வரும் தகவல்கள் உடனடியாக பதிவு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்து, நிவாரணப் பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்." என கூறப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+